சேலம் அகரம் காலனி வீடுகளில் தண்ணீர் தேக்கம்



சேலம் அகரம் காலனி வீடுகளில் தண்ணீர் தேக்கம்

9-11-2019. நேரம் காலை 9:30. மணி நேற்று இரவு பெய்த கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கழிவு நீர்கள் வாய்க்காலில் செல்லமுடியாமல் சேலம் நெத்திமேடு அருகில் அகரம் காலனியில் வசிக்கும் வீடுகளில் கழிவு நீருடன் கலந்த தண்ணீர் புகுந்தது இதனால் வீட்டிற்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிற அவர்களால் வீட்டிற்குள் சமைக்கவும் வீட்டிற்குள் படுத்து உறங்கவும் முடியாமல் தவிக்கின்றனர் இதில் படிக்கின்ற பள்ளி கல்லூரி மாணவர்களால் படிக்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர் வயதானவர்கள் வீட்டிற்குள் தண்ணீர் இருப்பதால் வீட்டிற்குள் இருக்க முடியாமல் தவிக்கின்றனர் இரவு முழுவதும் கொசு தொல்லையால் அவதிப்பட்டு இருக்கின்றனர் கழிவு நீருடன் கலந்து தண்ணீர் தேங்குவதால் நோய் தொற்று அபாயம் வருமோ என அச்சம் தெரிவிக்கின்றனர் 

தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா