ரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினவிழா



ரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினவிழா

26.11.2019 அன்று கொங்கனபுரம் ரெட்டி பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.  டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை நவம்பர்.26.2019 முதல் ஏப்ரல்.14.2020 வரை கொண்டாடும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி அரசியலமைப்பு தினத்தன்று டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி யின் துவக்க விழா நடைபெற்றது.  அவ்விழாவில் சட்டமேதை அவர்களின் வரலாறு மற்றும் அவரின் முக்கியத்துவம் பற்றி சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது மாணவர்கள்  ஓவிய போட்டியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படம் வரைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  மேலும் ஆசிரியர் முனியசாமி அவர்கள் இந்தியாவை பற்றி பாடலாகப் பாடி சிறப்பித்தார். இவர் குழந்தைகள் தினத்தன்று மதிப்பிற்குரிய முதல் பாரத பிரதமர் நேருவை குறித்து நேரு மாமா என்ற பாடலை பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா