DINAVEL NEWS - வேப்பூர் அருகே கள்ளசாரயம் விற்ற இருவர் கைது வேப்பூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.


வேப்பூர் அருகே கள்ளசாரயம் விற்ற இருவர் கைது  வேப்பூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

வேப்பூர் பகுதியில் கள்ளசாரயம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து 135 லிட்டர் சாரயத்தை பறிமுதல் செய்தனர்

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள ஐவதகுடி ரயில்வே காலணியை சேர்ந்தவர் அமாவாசை மகன் அன்பழகன் (வயது 36) , இவர் திருச்சி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை சாலை பராமரிப்பு மற்றும் சுங்க கட்டணம் வசூல் செய்யும் நகாய் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆவார் 
நேற்று வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் எஸ் சக்தி கணேஷ், மற்றும்  போலீசார்  சேப்பாக்கம்,  நகர் சந்திப்பு நான்கு வழி சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த ஆம்புலனஸ் டிரைவர் அன்பழகன் ஓட்டி  வந்த. டிஎன் 31 ஏ க்யூ 4164 
என்ற ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில் லாரி டியூப்பில் சுமார் 120 லிட்டர் கள்ளசாரயம் இருந்தது அதை மடக்கி பிடித்த இன்ஸ்பெக்டர் கவிதா வேப்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து கைது செய்தனர்

அதுபோல் வேப்பூர் அருகிலுள் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (வயது -32 ) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகி ஆவார் இவர் அமமுக  சார்பில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நல்லூர் 17 நவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் இவர் நூதன முறையில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் கள்ளச்சாராயத்தை நிரப்பி ஒரு லிட்டர் 2 ஆயிரம் ரூபாய் என விற்றது தெரியவந்தது இது குறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ்ஐ, சக்தி கணேஷ் , மற்றும் போலீசார் பூலாம்பாடி ஏரிக்கரையில் சாரயம் விற்று கொண்டிருந்த மணிகண்டனை கைது செய்தனர்
ஐவதகுடி அன்பழகன் , பூலாம்பாடி மணிகண்டன் ஆகிய இருவரிடமும் 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 135 லிட்டர் கள்ள சாரயத்தை பறிமுதல் செய்தனர் இதனால் வேப்பூர் பகுதியில் மிகவும்  பரபரப்பு ஏற்பட்டது.

தின வேல் செய்தியாளர் கொ. விஜய்
வேப்பூர் வட்டம்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா