DINAVEL NEWS - வேப்பூரில் ஆசிரியர் கூட்டமைப்பு , அன்னை ரெங்கம்மாள் கல்வி சமூக சேவை அறக்கட்டளை சார்பாக 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வேப்பூரில்
அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு, மற்றும் அன்னை ரெங்கம்மாள் கல்வி, மற்றும் சமூக சேவை அறக்கட்டளை சார்பில்
ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சுமார் 30 குடும்பங்களுக்கும், 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சிறுநெசலூர் அன்னை இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு , மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சந்திரகுமார், அமைப்பு செயலாளர் வீரமணி,ரெங்கம்மாள் அறக்கட்டளை தலைவர் சிவசங்கரி, செயலாளர் காமராஜ், முருகன் முன்னாள் வட்ட செயலாளர் பாரதிராஜா, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மாயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் பழனி,சதாசிவம், நல்லூர் ஒன்றிய உதவி வேளான் அலுவலர் கெஜிகுமார்
ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி காய்கறி மளிகை பொருட்களின் தொகுப்புகளை வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் கூட்டமைப்பு நல்லூர் ஒன்றிய துணை தலைவர் தாமோதரன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயசங்கர், முன்னணி நிர்வாகிகள் அய்யாத்துரை, சத்யராஜ், மங்களூர் ஒன்றிய துணைத் தலைவர் அம்பேத்கர், மற்றும் அன்னை நர்சிங் கல்லூரி மாணவிகள் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாசார் செல்வேந்திரன் செய்தியாளர்
Comments
Post a Comment