DINAVEL NEWS - தமிழகத்தில் உள்ள 18,500 வாகன ஓட்டுநர்களுக்கு நிவாரண நிதி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு கார், வேன் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வாகனஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் மனு


தமிழகத்தில் உள்ள 18,500 வாகன ஓட்டுநர்களுக்கு நிவாரண நிதி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு கார், வேன் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வாகனஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் மனு- 

செங்கல்பட்டு, ஏப்.19: கடந்த மாதம் முதல் கொரொனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள வாகன ஓட்டுநர்களும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர்.

இவர்களுக்கு நிவாரணங்களை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு கார், வேன் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில், மாநிலத் தலைவர் பால்ராஜ் மற்றும் சங்கத்தினர் செங்கல்பட்டு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிபிட்டுள்ளதாவது:

தமிழகத்தில்  சுமார் 18,500 நலிவடைந்த  வாகன ஓட்டுநர்கள் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 1200 ஓட்டுநர்கள் உள்ளனர்.

நாங்கள் வாகனத்தை ஓட்டுவதை நம்பியே எங்கள் குடும்ப வாழ்வாதாரம் உள்ளது. ஏற்கனவே எங்களுக்கு 144 தடை உத்தரவு காரணமாக போதுமான வருமானம் இல்லாமல் கடிமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.

இந்த நிலையில் கொரோன வைரஸ் காரணமாக எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வாகனத்தை இயக்க முடியாமலும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும் வாழ்வா சாவா என்ற
போராட்டத்திற்கு நடுவில் வாழ்ந்து வருகிறோம்.

எங்களுக்கு இந்த ஓட்டுநர் தொழிலை தவிர வேறு எந்த தொழிலும்
தெரியாது. வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே எங்களுக்கான வாழ்வாதரம்
இருந்து வந்தது மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே வாழ்வாதாரமாக இருந்தது.


இந்த நிலையில் கொரோனவிற்கு எதிராக தாங்கள் அறிவித்த ஊரடங்கு உத்தரவை மதித்து நாங்கள் எங்கள் வீட்டிலேயே வாழ்வாதாரமின்றி முடங்கி உள்ளோம்.

எங்களுக்கு அரசாங்கத்திலிருந்து எந்த ஒரு உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லை நாங்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு உண்பதற்கு வழி இல்லாமல் தவித்து வருகிறோம்.

நாங்கள் இதுவரை அமைப்புச்சார தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு
செய்யவில்லை எனவே எங்கள் குடும்பத்திற்கு அரசாங்கத்திலிருந்து உதவி கிடைக்குமென்று எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம். மேலும் வாகன புதுபித்தல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், உள்ளிட்டவற்றை மூன்று மாதகாலம் கால அவகாசம் வழங்கிட வேண்டும். வாகன வரிசெலுத்துவதற்க்கு 6 மாத காலத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும்.

ஆகையால் தயவுகூர்ந்து எங்கள் சங்கத்தில் உள்ள ஓட்டுனர்களுக்கு உதவி தொகையும் கடன் தொகைக்கும்
அரசாங்கத்திலிருந்து கிடைக்க வழிவகை செய்யுமாறு 
கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் குறிபிட்டுள்ளன.

இந்நிகழ்வின் போது தமிழ்நாடு கார், வேன் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் பால்ராஜ் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் செங்கல்பட்டு மாவட்ட பொருப்பாளர்கள் கண்ணன், விஜயகுமார், குமரேசன், மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா