DINAVEL NEWS - பழனி தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்குதல்
பழனி தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்குதல்...
திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய தாலுக்காக்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உணவில்லாமல் மிகவும் சிரமப்படுவது தொடர்பாகவும், சிரமப்படும் அனைவருக்கும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனி சார் ஆட்சியர் அவர்களிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது.
சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு *பழனி சார் ஆட்சியர் அவர்கள் பழனியில் செயல்படும் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்திடம் பசியால் சிரமப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்களை வழங்கி உதவிட வேண்டும் என வேண்டுகோள்* வைத்தார். அதன் பலனாக இன்று (16.04.2020) பழனி நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பழனி தாலுகாவில் உள்ள 200 மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி *இன்று (16.04.2020) காலை பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி* நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழனி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், *நகைக்கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்,* தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சங்கத்தின் பழனி நகர தலைவர் காளீஸ்வரி, செயலாளர் தங்கவேல், நகர்க்குழு உறுப்பினர் ஜெயபாரதி, தமிழரசி, கோபிநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் பகத்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிவாரண பொருட்களை பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பழனி சார் ஆட்சியர் அவர்களுக்கும், உதவி செய்த பழனி நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்திற்கும் நன்றிகளை* தெரிவித்துக் கொண்டனர். பழனி செய்தியாளர். M. ஆதிமூலம்
Comments
Post a Comment