Dinavel News Today # பாரம்பரிய தொழிலையும் பதம் பார்க்க வந்த கொரோனா வைரஸ் தொற்று திக்கு முக்கலாட்டத்தில் சலூன் கடைக்காரர்கள்
பாரம்பரிய தொழிலையும் பதம் பார்க்க வந்த கொரோனா வைரஸ் தொற்று திக்கு முக்கலாட்டத்தில் சலூன் கடைக்காரர்கள்
வாழ்வாதாரம் பாதித்த சவரத்தொழிலாளர் ஒட்டு மொத்த குடும்பங்களை மீண்டும் மீட்க வேண்டுகின்றோம்..
எங்கள் மருத்துவ குலம் யாரையும் பாகுபாடு பார்க்காமல் வந்தோரை எல்லாம் வரவேற்று நாறகாலில் உட்கார வைத்து சால்வை அணிவித்தும் உள்ளம் மகிழ வாடிக்கையாளரின் உடலை பூப் போன்று மெல்லிய கதர் வேஸ்டி கொண்டு சுற்றி அருகில் தன் வாடிக்கையாளர்களின் தலையை தொட்டு ம் முகத்தை தொட்டு முடிதிருத்தமிட்டு முகமழித்து அவரை மெது மெதுவா சிற்ப சிலை போன்று அழகை மெருகூட்டிய எங்களின் கைவண்ணத்தின் நாளொன்றுக்கு பல பல மனித தெய்வங்களை வணங்கியே எங்களது தொழிலை மிகவும் கண்ணியத்தோடும் கடமையோடும் பணியாற்றி வருவதை இன்றல்ல இது பாரம்பரியமாவே நடைபெற்று வரும் எங்கள் சமூதாய சவரத் தொழிலாகும்..
பழங்கால தொழில் என்பது எங்களது நாட்டு வைத்தியம் முறையில் நாவிதர் கலாச்சாரம் முகுந்ததாகவும் வீட்டு வீட்டுக்குச் சென்று பல்வேறு நோய்களுக்கு மருந்திட்டும் இரவு பகல் பாராமல் குக்கிராமங்கள் முதல் பெருநகரம் வரையிலுமே எங்களின் நாவிதர் சமூதாய மக்கள் மருத்துவம் பார்த்த காலமும் உண்டு...என்னதான் பல பல விஞ்ஞானம் வளர்ந்து வந்தாலும் ஒரு நோயாளிக்கு ஒரு மருத்துவர் அவசியம் தேவை என்பது போன்று... அதே போல்
ஒருவரை அழகு படுத்த ஒரு நாவிதர் அவசியம் வேண்டுமென்பதே உண்மை தான் என கருதிட வேண்டும்.. ஆகவே அன்றும் சரி இன்றும் சரி வீட்டுக்கொரு நாவித சமூதாயமும், வண்ணார் சமூதாயமும் அனைத்து உலக மக்களுக்கும் தாம் உதவியாளனாய் என்றும் காட்சி தந்து தான் இந்த சமூகத்தில் வாழ்ந்து வருகின்றோம். அப்படிப்பட்ட எங்கள் மருத்துவ சமூதாய மக்களின் வாழ்வில் கொரோனா வைரஸ் எனும் பெரிய தாக்கத்தை சலூன் கடைகளால் தான் உருவாகி விட்டதே என கடந்த சில தினங்களில் செய்தித் தாள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் தகவல் வெளிவர இதனால் எங்கள் ஒட்டு மொத்த மருத்துவர் சமூதாயமே மனம் கலங்கி நிற்க இன்னும் நம் நம் சமூகத்திற்க்கு எந்த மாதரியான சிக்கல்கள் நிலவப்போகிறதோ...அச்சத்திலும் பயத்திலும் உரைந்து போன எங்கள் ஒட்டுமொத்த சமூதாயத்தின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையும் இந்த கொரோனா வைரஸ் எனும் கொடிய தொற்றால் தாங்கள் பெரும் மனத் துயரத்தில் தத்தளிக்கின்றோம்.
இதன் அடுத்த கட்ட சூழ்நிலையெனும் பார்த்தால் செய்யும் தொழிலே தெய்வம் என கருதி வரும் நாங்கள் இனி என்னவாக போறோம் என தெரியவில்லை...ஊரும் உறவை நம்பி வாழ்ந்த எங்களை இப்படி பரிதவிக்க விட்ட எங்கோ உருவெடுத்த கொரோனா தொற்று தற்போது தமிழகத்தில் சென்னை பெருநகரத்தின் ஒரு இடத்தில் உள்ள சலூன் சாப் மூலம் கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்ட ஒரு அசாதாரன நிலையும் உருவாகி இருப்பது கண்டும் நாங்களும் எங்கள் சமூக மக்களும் அச்சம் கொள்கின்றோம்..
இதனால் எங்கள் மருத்துவ சமூதாய மக்கள் இனி ஆங்காங்கே பல் வேறு இடங்களில் வைத்திருக்கும் சலூன் சாப் பியூட்டி பார்லர், தொழில் செய்து வரும் நாங்கள் எங்கள் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் நிலைமைக்கும் தற்போது தள்ளப்பட்டு இருக்கோம் இந்த சூழ்நிலையில் எங்கோ ஒரு சில இடத்தில் ஏதோ ஒரு அசாரன கோளாரால் நடந்த சம்பவத்தால் ஒட்டு மொத்த மருத்துவ சமூதாய மக்களின் வாழ்வாதரமே பாதிக்கப் படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கோம்..மனவருத்தமுடன் தெரிவிக்கின்றோம்..
எங்களின் அடுத்த பெரும் தாக்கம் உருவாகக் கூடிய நிலை உருவாகலாம்... எங்களின் சலூன் கடைகளில் பெரும்பாலானோர் சொந்த ஊரை விட்டு பெரும் நகரங்களில் சிறு சிறு சலூன் கடைகளை வைத்தும் தொழில் நடத்தி தன் குடும்பங்களை பாதுகாத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இனி நாங்கள் தொழில் செய்ய பல் வேறு இடங்களில் சலூன் கடைகளுக்கு கடை தருவார்களா என பெரும் அச்சமும் மனக்கவலையுமே நிலவுகின்றது..இதனால் தற்போது சலூன் தொழிலை கடைகள் மூலமாகவும் வீடுகளுக்குச் சென்றும் முடித்திருத்தும் தொழிலை செய்ய விடாமால் தற்போது கொரோனா தொற்று என மிரட்டப் படும் அவல நிலை ஊடுருவியதால் நாங்கள் எங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் எங்கள் சமூதாய மருத்துவர் குடும்பங்களின் இன்றைய நிலையும் எதிர்கால நிலையும் இனி என்னாவாக போகுதோ...
இதற்க்கு அரசு விதி முறைப்படி எங்கு தவறான வழிமுறைகளில் ஈடுபட்டார்களோ அவர்களை மட்டும் தீர விசாரித்து நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட எங்கள் மருத்துவ சமூதாய மக்களின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டுகின்றோம்.. இன்றைய மத்திய மாநில அரசும், தமிழக அரசும் எங்களின் பாரம்பரிய தொழிலான சவரத்தொழிலின் வாழ்வாதாரத்தை நம்பி வாழ்கின்ற ஒட்டு மொத்த குடும்பங்களை காப்பாற்றி எங்கள் தொழிலை மீண்டும் ஆங்காங்கே சுகாதார முறையில் செய்திட உடனடி தீர்விட்டு எங்கள் தொழிலை பாதுகாக்க ஒட்டு மொத்த சலூன் கடைகளை திறந்து வேலை செய்து எங்கள் மருத்துவ மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உதவிடுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
ந. தெய்வராஜ் (முன்னால் கிளை செயலாளர்)
ஆத்துப்பாளையம், திருப்பூர்.
செல்: 9442372611
Comments
Post a Comment