# DINAVEL NEWS TODAY # காட்டுமன்னார் கோயிலில் கடலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்
காட்டுமன்னார் கோயிலில் கடலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்
காட்டுமன்னார்கோயில் ஏப்ரல் 8
கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்கள் அரசு அறிவித்த 144 தடை உத்தரவு மாவட்டங்களிலேயே முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்வதற்காக காட்டுமன்னார்கோயில் வருகை புரிந்தார் அப்போது லால்பேட்டை பகுதி பார்வையிட்டு வட்டாட்சியரிடம் கேட்டறிந்தார் மேலும் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள கண்டமங்கலம் ஊராட்சி சென்று நியாய விலை கடையில் ஆய்வு செய்தார் பின்பு பொது மக்களிடையே சமூக இடைவெளியை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமாகப் பேசினார் பின்பு காட்டுமன்னார் கோவில் அருகில் இருக்கும் கிராமப்புறங்களை ஆய்வு செய்தார் அப்போது கண்டமங்கலம் ஊராட்சியில்
சடையன் மகன் தங்கப்பன் வயது 81 என்பவர்
தனது ஒரு மாத முதியோர் ஒய்வு ஊதியம் ரூபாய் 1000 ரூபாய் முதலமைச்சர் கொரனா நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இடம் வழங்கினார்
அருகில் வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மற்றும் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காட்டுமன்னார்கோயில் ராமச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா ராமச்சந்திரன் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் சேத்தியாத்தோப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜவகர்லால் கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் அனைத்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் வருவாய் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் உடனிருந்தனர்
Comments
Post a Comment