DINAVEL NEWS - குமராட்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு கொடுத்தனர்.



காட்டுமன்னார்கோயில் 
ஏப் 17 

கடலூர் மாவட்டம் குமராட்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 25 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரசின் தாக்குதலால் 144 தடை  உத்தரவால் விவசாய கூலி தொழிலாளர்கள் வறுமையில் வேலையின்றி முடங்கிக் கிடக்கும் அவலம் நடந்து வருகிறது  இந்நிலையில் குமராட்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விமலாவிடம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் குமராட்சி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் சமூக இடைவெளியை பின்பற்றி மனுக்கள் கொடுத்தனர்
 இந்த கோரிக்கை மனுவில் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும் வரும் 20 4 2020 இல் இருந்து 100 நாள் வேலையை சமூக இடைவெளியுடன் வேலையை துவங்குவதற்கு அனைத்து ரேஷன் கடைகள் மூலம் 100 நாள் வேலை செய்யும் பயனாளிகளுக்கு மாஸ் வழங்கிட வேண்டும் 100 நாள் சம்பள பாக்கி உடனடியாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்தனர் 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

செய்தி
கடலூர் மாவட்ட செயதியாளர் 
கே. பாலமுருகன்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா