Posts

Showing posts from December, 2019

# DINAVEL NEWS # கண்டமங்கலம் அருகே பரிதாபம். ஏரியில் மூழ்கி மாணவன் பலி

Image
கண்டமங்கலம் அருகே பரிதாபம். ஏரியில் மூழ்கி மாணவன் பலி.  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் பிரவீன் குமார் வயது 17  இவர் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று(31/12/2019) மாலை தனது நண்பர்களுடன் அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து மாணவன் பிரவீன் எதிர்பாராத விதமாக ஏரியில் உள்ள புதை மணலில் சிக்கிக்கொண்டார் . இதனையடுத்து தகவல் அறிந்த ஊர் மக்கள் ஏரியில் மூழ்கிய மாணவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அப்போது மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். சேர்சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிதசேர்ந்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி விட்டனர்.  மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏரியில் மூழ்கி மாணவன் இறந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலு விழுப்பு

# DINAVEL NEWS # கடையநல்லூரில் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலி.

Image
கடையநல்லூரில்  சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர் மீது  மோட்டார் சைக்கிள் மோதி  பலி.   கடையநல்லூர் கடையநல்லூரில்  நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர் மீது  மோட்டார் சைக்கிள் மோதி  பலியானார்   தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட  கடையநல்லூர்  இக்பால் நடுத்தெருவை சேர்ந்த முகம்மது ஹனீபா மகன் சாகுல்ஹமீது (51) நேற்று காலை 6 மணி அளவில் தனது நண்பருடன் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியம் வரை நடை பயிற்சியில் ஈடுபட்டு  புதிய பேருந்து நிலையம்  அருகே திரும்பி வரும்போது வடக்கே புளியங்குடியில் இருந்து இடைகாலை  நோக்கி பைக்கில் வந்த பாலமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த ராமையா மகன் வேலுசாமி என்பவர்  மோட்டார் சைக்கிளில் இரவு வேலையை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்   அப்பொழுது  அதே திசையில் தெற்கே இருந்து வடக்கே வந்த சாகுல்ஹமீது மீது  மோதினார் இதில் தூக்கி வீசப்பட்ட  சாகுல் ஹமீது  படுகாயமடைந்தார்  அப்போது அவருடன் வந்தவர் அவரை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார் அங்கே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது ப

#DINAVEL NEWS# விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக கடையநல்லூர் சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் புதுக்குடி மகேஷ்,க.பீமாராஜ் அவர்கள் தலைமையில்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது

Image
தந்தை பெரியார் அவர்கள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கடையநல்லூர் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக கடையநல்லூர் சமத்துவபுரம் பகுதியில்  அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் புதுக்குடி மகேஷ்,க.பீமாராஜ் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது  சிறப்பு அழைப்பாளராக நெல்லை வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் Mk. இசக்கி பாண்டியன் மற்றும் தொகுதி செயலாளர் ஜான் தாமஸ் ஒன்றிய செயலாளர் நெடுவை மூர்த்தி ஒன்றிய துணைச் செயலாளர் இரா உதயா சொக்கம்பட்டி ராமசாமி நகர செயலாளர் பாக்கியநாதன்  வடகரை பேரூர் செயலாளர் ஸ்ரீபால் அச்சன்புதூர் முருகையா குவைத் மணிபாரதி ஈஸ்வரன் திரவியம் பாஸ்கர் மாறி பேச்சிமுத்து முகேஷ் மற்றும் சொக்கம்பட்டி அச்சன்புதூர் சங்குபுரம் கள்ளம்புளி சிறுத்தைகள் திரளாக கலந்து கொண்டனர்

# DINAVEL NEWS # சேலத்தில் தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்ய முடியாத இரண்டு பகுதிகள்

Image
சேலத்தில் தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்ய முடியாத இரண்டு பகுதிகள் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று விழிப்புணர்வு வாசகங்களை தெரிந்தவர்களும் தலைக்கவசம் இல்லாமல் அஜாக்கிரதையாக இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களில் பயணம் செய்கிறவர்கள் உண்டு டிசம்பர் 16ஆம் தேதி முதல் சேலத்தில் அன்னதானப்பட்டி மற்றும் சுந்தர் லாட்ஜ் சிக்னல் ஆகிய இரண்டு பகுதிகளில் தலைக்கவசம் இல்லாமல் பயணிப்பவர்கள் வாகனங்களை அந்தப் பகுதியின் சாலைகளில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது சேலம் மாநகர காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் தலைக்கவசம் உள்ளவர்கள் மட்டுமே அந்தச்  சாலைகளை பயன்படுத்த முடிகிறது தலைக்கவசம் இல்லாமல் பயணித்தாலும் அபராதம் கட்டிக்கொள்ளலாம் என்று நினைத்து இந்த சாலையில் வருபவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே காத்துக்கொண்டிருக்கிறது இந்த இரண்டு முக்கிய சாலை பகுதிகளும் சேலத்தின் ஹெல்மெட் பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

சேலம் மாவட்டம் கச்சுபள்ளி ஊராட்சியில் வேட்புமனு தாக்கல் நிறைவு

Image
சேலம் மாவட்டம் கச்சுபள்ளி ஊராட்சியில் வேட்புமனு தாக்கல் நிறைவு சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்ய ஆரம்பித்தனர். 16.12.2019 இன்று மாலையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்கா கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி கிராம ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதற்கு இதுவரை 55 பேர்கள் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மற்றும் சுயேச்சைகளும் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

திண்டுக்கல் மாவட்டம் பழனி கிழக்கு கிரிவீதியில் அமைந்துள்ள அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் அதன் அருகே உள்ள சின்ன விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது...

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனி கிழக்கு  கிரிவீதியில் அமைந்துள்ள அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் அதன் அருகே உள்ள சின்ன விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது...

கன்னியாகுமரி முதல் குஜராத் வரை செவிதிறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்கான விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கன்னியாகுமரியில் துவங்கியது.

Image
மணிகுமார் கன்னியாகுமரி  Date:10.12.19 கன்னியாகுமரி முதல் குஜராத் வரை செவிதிறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்கான விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கன்னியாகுமரியில் துவங்கியது. செவிதிறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான உதவுவதற்கான நிதியை திரட்டுவதற்கான விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தொடங்கி குஜராத்தில் நிறைவடைகிறது.  இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் குறிப்பிட்ட சதவீதம் செவிதிறன் குறைபாடுள்ள குழந்தைகளாக பிறக்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு ஆறு வயதுக்குள் அறுவை சிகிச்சை போன்றவை அளித்த பின்னர் தொடர் சிகிச்சை அவசியமாகிறது. இதற்காக குஜராத் மாநிலம் புனே அருகில் 4கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. அதற்காக பொதுமக்கள் பங்கேற்பு இருக்கும் வகையில் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடத்த சக்சம் அமைப்பு முடிவு செய்தது. அதன்படி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில்  இந்த ஆட்டோ விழிப்புணர்வு பேரணி  தொடங்கியது. இதனை வெள்ளிமலை விவேகானந்தா ஆஸ்ரம தலைவர் சைத்தான்யானந்தஜி மகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களின் 73வது பிறந்தநாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில OBC பிரிவு சார்பில் தூத்துக்குடி 3வது மைல் பாளை ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

Image
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய தலைவர் அன்னை  சோனியாகாந்தி அவர்களின் 73வது பிறந்தநாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில OBC பிரிவு சார்பில் தூத்துக்குடி 3வது மைல்  பாளை ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பான முறையில்  கொண்டாடப்பட்டது. அன்புத்தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் மக்களவை காங்கிரஸ் கொறடா திரு.ப. மாணிக்கம்தாகூர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர்  திரு.கே.எஸ். அழகிரி அவர்கள்  மாநில OBC பிரிவு தலைவர் திரு.T.A. நவீன் அவர்கள்  மாநில பொதுச்செயலாளர் திரு.கே.சிரஞ்சீவி அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதலின் படி  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய தலைவர் அன்னை  சோனியாகாந்தி அவர்களின் 73வது பிறந்தநாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில OBC பிரிவு சார்பில் தூத்துக்குடியில் உள்ள 3வது மைல்  பாளை ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பான முறையில்  கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில OBC பிரிவு மாநில பொதுச்செயலாளர் திரு.S.S.கணேஷ் அவர்கள், மாநகர் மாவட்ட துணைத்தலைவர் திரு. தனபால்ர

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த அதிமுக பிரமுகரின் வீட்டை இடித்ததால் பொக்லைன் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாக கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்பந்தகாரர் புகார் அளிக்கப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Image
மணிகுமார் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த அதிமுக பிரமுகரின் வீட்டை இடித்ததால் பொக்லைன் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாக கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்பந்தகாரர்  புகார் அளிக்கப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சியினரின் ஆராஜகத்தால் திட்ட பணிகளை செய்ய அதிகாரிகள் அச்சம்.   கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தற்போது சாலை மற்றும் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது இந்நிலையில் மீனாட்சிபுரம் தளவாய் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் வீடு கட்டி பலவருடமாக அனுபவம் பெற்று வந்தார். தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் போது, அதிமுக பிரமுகர் கட்டி இருந்த வீட்டை மாநகராட்சி அதிகாரிகள்  ஒப்பந்தக்காரர்கள் மூலம் இயந்திரங்களால் இடித்து விட்டு பொக்லைன் இயந்திரத்தை அங்கேயே விட்டுச் சென்றனர். இன்று காலை பொக்லைன் 2 இயந்திரங்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன இதனால் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் PLதண்டாவில் பிரார்த்தனை மையம் ஜன்னல் கண்ணாடி உடைப்பு

Image
PL தண்டாவில் பிரார்த்தனை மையம் ஜன்னல் கண்ணாடி உடைப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் PLதண்டா என்ற பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக ஆசீர்வாத புதுவாழ்வு பிரார்த்தனை மையம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது அதில் பொதுமக்கள் ஜாதி மத இன பேதமின்றி  மன அமைதிக்காக  பிரார்த்தனையில் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் 8.12.2019 அன்று இரவு   சமூக விரோதிகள் பிரார்த்தனை மைய கட்டிடத்தின் சுவரை உடைக்க முயற்சித்துள்ளனர் முடிவில் ஜன்னல் கண்ணாடியை உடைத்திருக்கின்றனர்.  இது கிறிஸ்தவர்களின் பண்டிகை மாதம் என்பதால் இங்கு நடந்த இந்த சம்பவம் மற்ற ஊர்களில் இருக்கும் பிரார்த்தனை மையங்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு அரசு பதிவு பெற்ற பிரார்த்தனை மையம் என்பது குறிப்பிடத்தக்கது

நெய்க்காரப்பட்டி பாலத்தில் கார் கவிழ்ந்ததில் டாக்டரின் கால் முறிந்தது

Image
நெய்க்காரப்பட்டி பாலத்தில் கார் கவிழ்ந்ததில் டாக்டரின் கால் முறிந்தது தஞ்சாவூரை சேர்ந்த பெண் மருத்துவர் வயது 27 சேலம் சீரகபாடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். 6-12-2019 அன்று மாலை சுமார் 5.40 மணி அளவில் அவருடைய கல்லூரியிலிருந்து சேலம் டவுனுக்கு சென்று கொண்டிருந்தபோது நெய்க்காரப்பட்டி சேலம் பைபாஸில் உள்ள மேம்பாலத்தில் இவருடைய கார் விபத்துக்குள்ளானது காரை ஓட்டிச்சென்ற மருத்துவரின் கால் எலும்பு விபத்தில் முறிந்தது. விபத்திற்கு முன் கடந்த 2 நாட்களாக அவர் சரியாக சாப்பிடவில்லை மற்றும் சரியாக தூங்கவில்லை என்றும் காரை ஓட்டிக்கொண்டு போகும்போது ஒருவேளை மயக்கம்மாகவும் இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  தின வேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வலசக்கல்பட்டி ஏரி நிரம்பி வழியும் காட்சி அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Image
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வலசக்கல்பட்டி ஏரி நிரம்பி வழியும் காட்சி அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. K. அராபத் தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் கெங்கவல்லி நிருபர்

3லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சிமெண்ட் சாலையின் அவலநிலை!!!?

Image
3லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சிமெண்ட் சாலையின் அவலநிலை!!!??  நவமால்காப்பேர் கிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு 3லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சிமெண்ட் சாலையின் அவலநிலை!!!??  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட நவமால்காப்பேர் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரூ: 3 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது. இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சிமெண்ட் சாலை கரைந்து கருங்கற்கள் வெளிவரத்தொடங்கின.    மேலும் சாலை போடப்பட்டு மூன்றே மாதங்களில் சேதமடைந்ததை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்சியடைந்தனர். திரு.வேலு தினவேல் - தேசிய நிடுநிலை காலை நாளிதழ் விழுப்புரம் மாவட்ட நிருபர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.அண்ணாதுரை அவர்களின் உத்தரவின் பேரில் இன்று(2.12.2019) அதிகாலை 4.30 மணியளவில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

Image
விழுப்புரம் மாவட்டம்  வீடூர் அணையில் தற்பொழுது நிலவரப்படி 30.800 அடி தண்ணீர் நிரம்பி உள்ளதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.அண்ணாதுரை அவர்களின் உத்தரவின் பேரில் நாளை(2.12.2019) அதிகாலை 4.30 மணியளவில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் சங்கராபரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள மக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும்  மற்றும் ஆற்றில் எக்காரணத்தைக் கொண்டும் இறங்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் பொதுமக்கள் ஆற்றங்கரை ஓரத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் வாணாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 30.11.2019 அன்று அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட்டது

Image
வாணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் வாணாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 30.11.2019 அன்று அறிவுத் திறன் வகுப்பறை  துவங்கப்பட்டது.  இப்பள்ளியில் 750 மாணவ மாணவியர்கள் படித்துக் கொண்டு வருகிறார்கள் . 32 ஆசிரியர்கள் பணியாற்றுகிற இப்பள்ளியில் முதன்முதலாக  சென்னை - திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை  சார்பில் அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு துவங்கப்பட்டது . அறக்கட்டளையின் நிர்வாகி திரு ராதாகிருஷ்ணன், அறக்கட்டளை உறுப்பினர் திரு சுரேஷ்குமார், இப்பள்ளி முன்னாள் மாணவர் திரு வெங்கடேஷ் , நன்கொடையாளர் திரு தயாளு Finance Director -Springer Indian Entities CFO மற்றும் திருமதி லதா மகேஸ்வரி தலைமை ஆசிரியை  - சென்னை கலந்து கொண்டனர் . சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட இவர்கள்  மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த அறிவுத் திறன் வகுப்பறையை பயன்படுத்தி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் சுற்றுச்சூழல் நிலைகள் குறித்தும் கல்வி வளர்ச்சி குறித்தும் பேசினர் .