திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் வாணாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 30.11.2019 அன்று அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட்டது

வாணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் வாணாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 30.11.2019 அன்று அறிவுத் திறன் வகுப்பறை  துவங்கப்பட்டது.  இப்பள்ளியில் 750 மாணவ மாணவியர்கள் படித்துக் கொண்டு வருகிறார்கள் . 32 ஆசிரியர்கள் பணியாற்றுகிற இப்பள்ளியில் முதன்முதலாக  சென்னை - திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை  சார்பில் அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு துவங்கப்பட்டது . அறக்கட்டளையின் நிர்வாகி திரு ராதாகிருஷ்ணன், அறக்கட்டளை உறுப்பினர் திரு சுரேஷ்குமார், இப்பள்ளி முன்னாள் மாணவர் திரு வெங்கடேஷ் , நன்கொடையாளர் திரு தயாளு Finance Director -Springer Indian Entities CFO மற்றும் திருமதி லதா மகேஸ்வரி தலைமை ஆசிரியை  - சென்னை கலந்து கொண்டனர் . சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட இவர்கள்  மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த அறிவுத் திறன் வகுப்பறையை பயன்படுத்தி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் சுற்றுச்சூழல் நிலைகள் குறித்தும் கல்வி வளர்ச்சி குறித்தும் பேசினர் . 

தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா