கன்னியாகுமரி முதல் குஜராத் வரை செவிதிறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்கான விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கன்னியாகுமரியில் துவங்கியது.


மணிகுமார்
கன்னியாகுமரி
 Date:10.12.19

கன்னியாகுமரி முதல் குஜராத் வரை செவிதிறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்கான விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கன்னியாகுமரியில் துவங்கியது.

செவிதிறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான உதவுவதற்கான நிதியை திரட்டுவதற்கான விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தொடங்கி குஜராத்தில் நிறைவடைகிறது. 

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் குறிப்பிட்ட சதவீதம் செவிதிறன் குறைபாடுள்ள குழந்தைகளாக பிறக்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு ஆறு வயதுக்குள் அறுவை சிகிச்சை போன்றவை அளித்த பின்னர் தொடர் சிகிச்சை அவசியமாகிறது. இதற்காக குஜராத் மாநிலம் புனே அருகில் 4கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. அதற்காக பொதுமக்கள் பங்கேற்பு இருக்கும் வகையில் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடத்த சக்சம் அமைப்பு முடிவு செய்தது. அதன்படி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில்  இந்த ஆட்டோ விழிப்புணர்வு பேரணி  தொடங்கியது. இதனை வெள்ளிமலை விவேகானந்தா ஆஸ்ரம தலைவர் சைத்தான்யானந்தஜி மகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஆட்டோ பேரணி தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா, வழியாக இந்த ஆட்டோ பேரணி 2700 கி.மீட்டர் தூரத்தை கடந்து வரும் 21-ம்தேதி குஜராத்தில் நிறைவடைகிறது. 30 ஆட்டோ கலந்து கொள்ளும் இந்த பேரணியில் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 90-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சக்க்ஷம் அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேட்டி:கோவிந்தராஜ்(நிர்வாகி)

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா