நெய்க்காரப்பட்டி பாலத்தில் கார் கவிழ்ந்ததில் டாக்டரின் கால் முறிந்தது


நெய்க்காரப்பட்டி பாலத்தில் கார் கவிழ்ந்ததில் டாக்டரின் கால் முறிந்தது

தஞ்சாவூரை சேர்ந்த பெண் மருத்துவர் வயது 27 சேலம் சீரகபாடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். 6-12-2019 அன்று மாலை சுமார் 5.40 மணி அளவில் அவருடைய கல்லூரியிலிருந்து சேலம் டவுனுக்கு சென்று கொண்டிருந்தபோது நெய்க்காரப்பட்டி சேலம் பைபாஸில் உள்ள மேம்பாலத்தில் இவருடைய கார் விபத்துக்குள்ளானது காரை ஓட்டிச்சென்ற மருத்துவரின் கால் எலும்பு விபத்தில் முறிந்தது. விபத்திற்கு முன் கடந்த 2 நாட்களாக அவர் சரியாக சாப்பிடவில்லை மற்றும் சரியாக தூங்கவில்லை என்றும் காரை ஓட்டிக்கொண்டு போகும்போது ஒருவேளை மயக்கம்மாகவும் இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தின வேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.