DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது
கன்னியாகுமரி அரசுபழத்தோட்டத்தில் தயாராகும் சாக்லேட் கன்னியாகுமரி டிச 10 கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது சாக்லேட்.... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி சாப்பிடும் இனிப்பு வகை.5 ரூபாயிலிருந்து தொடங்கி ஆயிரம் ரூபாய் வரை அதன் தரவரிசை உள்ளது.சர்வதேச நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சாக்லேட்க்கள்,பெருநகரம் தொடங்கி குக்கிராமம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கண்ணைகவரும் பேக்கிங்,சுவை,விளம்பரம் என ஆண்டுக்கு கோடிகணக்கான ரூபாய்க்கு சாக்லேட் வர்த்தகம் நடக்கிறது. ஆனால் சர்வதேச தரத்தில் தயாராகும் இந்த சாக்லேட்டுக்கு இணையாக நமது ஊரில் சப்தமின்றி தயாராகிறது. கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் தனியாக யூனிட் அமைக்கப்பட்டு பயிற்சி பெற்ற பெண் ஊழியர்களால் சுகாதாரமான தயாரிக்கபடுகிறது.சர்வதேச கம்பெனி போல் எந்த ஒரு விளம்பரம் இல்லாமலேயே பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த சாக்லேட். இதுகுறித்து கன்னியாகுமரி அரசுபழத்தோட்ட மேலாளர் கூறியதாவது:- தமிழக அரசின் தோட