DINAVEL NEWS - ஸ்ரீ.துர்க்கா மருத்துவமனையில் 14-வது மருத்துவ மாத இதழ் வெளியிட்டு விழா


ஸ்ரீ.துர்க்கா மருத்துவமனையில் 14-வது மருத்துவ மாத இதழ் வெளியிட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது..


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஸ்ரீ துர்க்கா மருத்துவமனையில் 14- வது மருத்துவ மாத இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.  
இவ்விழாவில் தலைமை மருத்துவர் டாக்டர் அழகேசன் தலைமை வகித்தார். மருத்துவர் நிவேதா காந்தி அனைவரையும் வரவேற்றார். 
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
டாக்டர் அருண்சக்திகுமார் மாத இதழை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
மாத இதழை பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் மற்றும் அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருட்சகோதரி மரியபுஷ்பம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 
மேலும் இம்மலர் வெளியிட்டு விழாவில் பொன்னமராவதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி வாழ்த்துரை வழங்கினார். 
இம்மாத இதழ் வெளியிட்டு விழாவில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள்,  மருத்துவமனை நிர்வாக இயக்குநர்கள், ஊழியர்கள், பொதுமக்களென  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் டாக்டர் செல்வக்குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இவ்விழா ஏற்பாட்டினை மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் திரு.சிவபாலன், கருப்பையா சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரா.பாஸ்கர் உரிமை செய்தியாளர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.