Dinavel News - கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மங்களூர் ஊராட்சி ஒன்றிய அனைத்து கிராமங்களில் கிரிமிநாசினி மருந்து தெளிக்கும் பணி.
கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவி விடாமல் இருக்க இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாகவும் மிகத் தீவிரமாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆவட்டி கூட்டு ரோடு, சிறுப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் பேருந்து நிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எஸ்.ஆர்.சங்கர், பஷ்பராஜ் மேர்ப்பார்வையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மேலும் ஊராட்சி மன்றங்களின் சார்பில் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கி கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகின்றது.
பாசார் செல்வேந்திரன்.ம
Comments
Post a Comment