Dinavel News - கடையநல்லூர் நகராட்சியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடைய நல்லூர் நகராட்சியில் கொரோனாவைரஸ் விழிப்புணர்வு .
கடையநல்லூர் நகராட்சியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பொது மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் தினசரி மார்க்கெட் புகைவண்டி நிலையம் அரசு மருத்துபமன பேருந்து நிறுத்தம் கிருஷ்ணாபுரம் மேலக்கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் நகரின் முக்கிய வீதிகளில் நகராட்சி ஆணையர். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் துப்பரவு அலுவலர் நாராயணன் சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி ஆகியோர் கொரோேனா வைரஸ் காய்ச்சல் பரவுவது குறித்தும் அதை தடுக்கும வழிமுறை குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வும் கைகழுவும் முறை குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர். தொடர்ந்து நகரின் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் எடுத்துக் கூறி அவரவர் வீடு மற்றும் தெருக்களில் விழிப்புனர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். மேலும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற தேவையான ஆலோசனை களும் .பிளாஸ்டிக் பயன்பாட்டால் எதிர் கால்ததில் நம் சந்ததியினர் சந்திக்கவிருக்கும் தீமைகள் குறித்தும் விளக்கம் அளித்தார் நகராட்சி சுகாதார பல்நோக்கு பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் வீட்டிற்கு வந்து குப்பை சேகரிப்பவர்கள் கேட்கும் வகையில் குப்பைகளை பிரித்து வழங்கிட கேட்டுக் கொண்டனர்.
Comments
Post a Comment