Dinavel News - திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.
திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வெலிங்டன் நீர் தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம் மற்றும் கோழியூர் கிராம பொதுமக்கள் இணைந்து கோழியூர் கிராமத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
துணை செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார்
செல்வம், வீரராஜன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிளைச் செயலாளர் மதியழகன் வரவேற்றார்
சிறப்பு அழைப்பாளராக
வெலி ங்டன் நீர்த்தேக்க
பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம் தலைவர் தயா. பேரின்பம் கலந்து கொண்டார்.
போராட்டத்தில் திட்டக்குடி பேரூராட்சிக்குட்பட்ட 17, 18 வது வார்டுகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
கோழியூர் 17 ,18 வது வார்டுகளில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் நலன் காக்க மகளிர் சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தியும்
கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைக்க வேண்டும் மேலும் இளைஞர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து வந்த திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீபிரியா பேச்சுவார்த்தை நடத்தினர்
அதில் ஒரு மாத காலத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தனர்.
இதனை ஏற்று காத்திருப்பு போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதில் முல்லை நாதன், பாண்டியன், தினேஷ், கண்ணையன், விமல், வேல்முருகன், மணிகண்டன், அஜித், மதி, காமராஜ், முருகேசன், பழனி, மூக்காயி, செல்வி, உமா, ராஜலட்சுமி, பொற்கொடி, அஞ்சலை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாசார் செல்வேந்திரன்.ம
Comments
Post a Comment