Dinavel News - சேலத்தில் லைப் டிரஸ்ட் வழங்கும் ஆதரவற்றோரின் இலவச இறுதிப்பயணம் மற்றும் முதியோர் இல்லம்.







சேலத்தில் லைப் டிரஸ்ட் வழங்கும் ஆதரவற்றோரின் இலவச இறுதிப்பயணம் மற்றும் முதியோர் இல்லம்

சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பஞ்சாயத்தில் மலங்காடு என்கின்ற பகுதியில் அமைந்ததுதான் லைஃப் டிரஸ்ட் இதில் மேனேஜிங் டிரஸ்டியாக இருப்பவர் தான் திருமதி கலைவாணி.  நடுநிலை பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த இவரின் லட்சியம் சமூக சேவையே . கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கிராமத்தை சேர்ந்த இவர் சேலத்தில் சுமார் 14 ஆண்டுகளாக அனைவரும் வியக்கும் வண்ணம் சமூக சேவை செய்து கொண்டு வருகிறார் அவரின் 26ஆவது வயதிலேயே சமூக சேவையில் கால்பதித்த அவர் தற்போது 20 வயதாகும் அவரின் மகன் அருணையும் களமிறக்கியிருக்கிறார் D.M.E  டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்கிற அவரும் அன்னையைப் போலவே ஆர்வமுடன் சேவையை தொடருகிறார்

2005 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட லைஃப் டிரஸ்ட் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மாலை நேரத்தில் இலவச பாட வகுப்புகளை துவங்கியது  கிராமப்புற பெண்களுடைய முன்னேற்றத்திற்காக இலவச தையல் வகுப்புகள் தொடங்கப்பட்டது  கிராமப்புற பெண்கள் சுகாதார மேம்பாடு அடைவதற்காக பொதுவான மற்றும் மருத்துவ ரீதியான சுகாதார விழிப்புணர்வுகளை செய்ய தொடங்கியது கிராமப்புற ஏழை மாணவர்களின் கணினி அறிவின் வளர்ச்சிக்காக இலவச கணினி பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டது

2010 ஆம் ஆண்டு முதல் புதிய வித சேவைக்காக லைஃப் டிரஸ்ட் நிர்வாகிகள் அவர்களை மனமுவந்து அர்ப்பணித்தனர் சேலத்தில் மருத்துவமனை ரயில் ரோடு மற்றும் கோயில் போன்ற பொது இடங்களில் இறந்துபோகும் சடலங்களை அவர்களாகவே முன்வந்து அவைகளை எடுத்து இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்வது அவர்களின் திட்டமாக இருந்தது. அப்போதைய சேலம் மாநகராட்சி ஆணையரும் தற்போதைய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் உயர்திரு.Dr.K.S. பழனிசாமி IAS அவர்களின் மேலான வழிகாட்டுதலால் இலவச அமரர் ஊர்தி துவங்கப்பட்டது. இன்றுவரை சுமார் 2500 சடலங்களை அரசாங்க உதவியோடு அடக்கம் செய்திருக்கின்றனர்

2011 ஆண்டுமுதல் ஆதரவற்ற நிலையில் சாலையோர பகுதிகளில் இறுதி பயணத்தை நோக்கி காத்திருக்கும்  முதியவர்களுக்காக உணவு உறைவிட த்துடன் கூடிய இல்லம்  சேலம் அன்னதானப்பட்டியில் தற்காலிக கட்டிடத்தில் ஆரம்பித்தனர். பின்னர் 2019-ம் ஆண்டு முதல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக உத்தமசோழபுரம் பஞ்சாயத்து மலங்காடு என்ற இடத்தில் நிலம் வழங்கப்பட்டது அதில் தற்போது முதியோர்களுக்கான இல்லம் கட்டி சுமார் 22 முதியோர்கள் வைத்து உணவு மற்றும் மருத்துவ வசதிகளோடு பராமரித்து வருகின்றனர் சில சமூக சிந்தனையுள்ள நல் உள்ளங்கள் அவ்வப்போது அவர்களுக்கு உணவு கொடுத்து மகிழ்கின்றனர்

இதன் மேனேஜிங் டிரஸ்டியாக செயல்படுகின்ற திருமதி கலைவாணி அவர்கள் இந்த சமூக சேவை குறித்து மிகவும் மன மகிழ்ச்சியோடு இந்த செய்தியை பகிர்ந்து கொண்டார் மேலும் லைஃப் டிரஸ்ட் என்கின்ற இந்த சமூக சேவை அறக்கட்டளைக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்றும் தெரிவித்தார் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின வாழ்த்து தெரிவித்த அவர் முயற்சி செய்தால் பெண்களால் முடியாதது ஒன்றுமில்லை என்று தெரிவித்தார் இவரின் சமூக சேவையை பாராட்டி பல இயக்கங்கள் இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது


தினவேல் செய்திகளுக்காக 
சேலம் தெற்கு 
நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா