Dinavel News - கணேஷ் என்ற பக்தருக்கு கொரனோ அறிகுறி இருப்பதாக மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தெரிவித்தனர்.
பழனியில் கொரனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை பொதுமக்களிடையே அரசு கொண்டு சேர்க்கும் இந்த வேளையில் முருகன் கோயிலுக்கு மைசூரிலிருந்து சுற்றுலாவாக இரண்டு வேன்களில் 60 நபர்கள் வந்துள்ளனர். இந்த நபர்களில் கணேஷ் என்ற பக்தருக்கு கொரனோ அறிகுறி இருப்பதாக மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தெரிவித்தனர். உடனடியாக அவர்களை மலைக் கோயிலுக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டு தனி மண்டபத்தில் அமர வைத்துள்ளனர்.கொரனோ அறிகுறியுடன் காணப்பட்ட கணேஷை தனிமைப்படுத்தி பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
Comments
Post a Comment