Dinavel News - பொள்ளாச்சியிலிருந்து உடுமலை,மடத்துக்குளம் நகரங்கள் வழியாக புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.


பொள்ளாச்சியிலிருந்து உடுமலை,மடத்துக்குளம் நகரங்கள் வழியாக புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. 

பல்வேறு பண்டிகை தினங்களில் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பழனியை நோக்கி நடந்து செல்வது வழக்கமாக உள்ளது. பக்தர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதியும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொள்ளாச்சியிலிருந்து பழனி வரை நான்கு வழிச்சாலைக்கு அருகில் நடைபாதை வழித்தடம் அமைத்து தர வேண்டும் என்று நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு நிதின் கட்காரி அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. 

மேலும் திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக பழனி வரையிலான நான்கு வழிப்பாதை அருகிலும் நடைபாதை அமைத்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வேலுச்சாமி அவர்களும் உடனிருந்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.