Posts

Showing posts from December, 2020

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

Image
கன்னியாகுமரி அரசுபழத்தோட்டத்தில் தயாராகும் சாக்லேட்  கன்னியாகுமரி டிச 10 கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது  சாக்லேட்.... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி சாப்பிடும் இனிப்பு வகை.5 ரூபாயிலிருந்து தொடங்கி ஆயிரம் ரூபாய் வரை அதன் தரவரிசை உள்ளது.சர்வதேச நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சாக்லேட்க்கள்,பெருநகரம் தொடங்கி குக்கிராமம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கண்ணைகவரும் பேக்கிங்,சுவை,விளம்பரம் என ஆண்டுக்கு கோடிகணக்கான ரூபாய்க்கு சாக்லேட் வர்த்தகம் நடக்கிறது. ஆனால் சர்வதேச தரத்தில் தயாராகும் இந்த சாக்லேட்டுக்கு இணையாக நமது ஊரில் சப்தமின்றி தயாராகிறது. கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் தனியாக யூனிட் அமைக்கப்பட்டு பயிற்சி பெற்ற பெண் ஊழியர்களால் சுகாதாரமான தயாரிக்கபடுகிறது.சர்வதேச கம்பெனி போல் எந்த ஒரு விளம்பரம் இல்லாமலேயே பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த சாக்லேட். இதுகுறித்து கன்னியாகுமரி அரசுபழத்தோட்ட மேலாளர் கூறியதாவது:- தமிழக அரசின் தோட

DINAVEL DAILY # குமரி அ.தி.மு.க மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.! விஜிலா சத்தியானந்த் எம்.பி பங்கேற்றார்

Image
குமரி அ.தி.மு.க மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!  விஜிலா சத்தியானந்த் எம்.பி பங்கேற்றார்; கன்னியாகுமரி:டிச 10 குமரி மாவட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சுசீந்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக விஜிலா சத்தியானந்த் எம்பி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.  கூட்டத்தில் 2021சட்டமன்ற தேர்தலை மகளிர் அணி சார்பில் எவ்வாறு எதிர்கொள்வது எனவும், அதிமுக அரசின் சாதனைகளை அனைத்து இல்லங்களுக்கும் மகளிரணி சார்பில் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது. இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ,மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், ஜான் தங்கம் மாவட்ட மகளிரணி செயலாளர் கெப்சி பாய், வர்த்தக அணி, மாவட்டச் செயலாளர் ஜெஸீம் ஒன்றியச் செயலாளர்கள் அழகேசன்,கிருஷ்ணகுமார், பேரூர் செயலாளர்கள் ராஜபாண்டியன், மனோகரன், சீனிவாசன், இரவிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் லட்சுமி சீனிவாசன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

DINAVEL DAILY # குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவும் வகையில் உழவர் விழா தென் தாமரைகுளத்தில் நடைபெற்றது

Image
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவும் வகையில் உழவர் விழா தென் தாமரைகுளத்தில் நடைபெற்றது.   கன்னியாகுமரி டிச 10 கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஏராளமான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிசான் கோஸ்திஸ் உழவர் விழா தென் தாமரைக்குளத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வேளாண்மை துணை இயக்குனர் (அட்மா திட்டம்) அவ்வை மீனாட்சி தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சியில் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியை செல்வராணி, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பேராசிரியர் அப்துல் ரசாக், அகஸ்தீஸ்வரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சரண்யா, அகஸ்தீஸ்வரம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன், வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு என்னென்ன உரங்களை எவ்வெப்போது இட வேண்டும் என்பது குறித்தும், பயிர்கள் மற்றும் மரங்களை தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகள் குறித்தும், அவற்றை எவ்வாறு அழிப்பது என்பது குறித்தும், விவசாயி

DINAVEL DAILY # பள்ளியாடியில் தமிழக காங்கிரஸ் பட்டதாரிகள் அணி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

Image
பள்ளியாடியில் தமிழக காங்கிரஸ் பட்டதாரிகள் அணி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம். கன்னியாகுமரி டிச: 10  தமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74வது பிறந்த நாள் விழா கட்சிக் கொடி ஏற்றி,₹ இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.  கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியில் தமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணி குமரி கிழக்கு மாவட்ட தலைவர் பென்றசல் தலைமை தாங்கினர்.சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.  நிகழ்ச்சியில் வாள்வச்சகோஷ்டம் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் டைன்ஸ் குமார் முன்னிலை வகித்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஜாய் போன், முளகுமுடு பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரிட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

DINAVEL DAILY # குமரி மாவட்ட போலீசார் சார்பில் சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரே நடித்த குறும்படத்தை குமரி மாவட்ட காவல்துறை கட்காணிப்பாளர் வெளியிட்டார்.

Image
கன்னியாகுமரி: டிச 10 குமரி மாவட்ட  போலீசார் சார்பில் சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரே நடித்த குறும்படத்தை குமரி மாவட்ட காவல்துறை  கட்காணிப்பாளர் வெளியிட்டார்.  நமது நாட்டில் வளர்ந்து வரும் புதிய நவீன தொழில்நுட்பத்தோடு அவற்றை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்களும் அதிக அளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றது.  வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடியாக திருடுவது, சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக தினந்தோறும் காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.  இதை கருத்தில் கொண்டு குமரி மாவட்ட காவல்துறை, சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் குறும்படத்தை வெளியிட்டுள்ளது. காவல்துறையினரே நடித்த இந்த குறும்படத்தை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் இன்று வெளியிட்டார். இந்த குறும்படத்தில், பொது மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது எனவும், அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வோடு இருப

DINAVEL DAILY # லீபுரம் கடற்கரையில் கலங்கி நிற்கும் மன்னர்கால கலங்கரை விளக்கம். கண்டுகொள்ளுமா அரசு? சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

Image
லீபுரம் கடற்கரையில் கலங்கி நிற்கும் மன்னர்கால கலங்கரை விளக்கம். கண்டுகொள்ளுமா அரசு?  சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.  கன்னியாகுமரி டிச 10 சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் லீபுரம் என்னும் கடற்கரை கிராமம் உள்ளது. இந்தக் கிராமமானது கன்னியாகுமரி முக்கடல் பகுதிக்கும் வட்டக்கோட்டை பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. வட்டக்கோட்டை பகுதியானது மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கடல் பகுதி ராணுவ கோட்டையாகச் செயல்பட்டுவந்தது. இந்தக் கடல் கோட்டையிலிருந்து கடல் வழியாக எதிரிகள் வருகிறார்களா? எனத் திருவிதாங்கூர் கடற்படை வீரர்கள் கண்காணித்துவந்தனர். அதேபோல இந்தக் கோட்டைக்கும், கன்னியாகுமரிக்கும் இடையில் உள்ள லீபுரம் பகுதியில் சிறிய அளவிலான துறைமுகம் செயல்பட்டுவந்தது. ஸ்ரீஇதற்குச் சான்றாக இன்றும் அந்தப் பகுதியில் பழங்கால எச்சங்களைக் சுமந்த படி காட்சி அளிக்கிறது சிறிய அளவிலான கலங்கரை விளக்கம். இந்த லீபுரம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக தோணியில் வாணிபம் நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக இங்கிருந்து இலங்கைக்கு கருப்பட்டி, புகையி

DINAVEL DAILY # கன்னியாகுமரி மாவட்டம் கொல்லம்கோடு அருகே மேற்கூரை வழியாக வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கோ வாலிபர் கைது புகாரின் பேரில் பொறி வைத்து பிடித்த போலீசார்

Image
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லம்கோடு அருகே மேற்கூரை வழியாக வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கோ வாலிபர் கைது புகாரின் பேரில் பொறி வைத்து பிடித்த போலீசார் கன்னியாகுமரி டிச 10 கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நித்திரவிளை சுற்றுவட்டார பகுதி வீடுகளில் நள்ளிரவு வீட்டின் மாடி வழியாகவும் கதவை திறந்தும் வீட்டிற்குள் புகும் மர்ம நபர் அயர்ந்து தூங்கும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் அவர்கள் சத்தம் போடவே அந்த மர்ம நபர் தப்பியோடும் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வந்தது ஆனால் அந்த பகுதி மக்கள் நகை பணம் திருடும் நோக்கத்தில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் புகாரளிப்பதோடு பெரிது படுத்தாமல் இருந்து வந்தனர் இந்நிலையில் கடந்த 6-ம் தேதி காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி இன்பசாகரன் தனது வீடு பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் ஆன மேற்கூரை அமைத்த வீட்டில் தனது மனைவியுடன் ஒரு அறையிலும் தனது 16-வயதான மகளையும் 12-வயதான மகனையும் பக்கத்து அறையும் தூங்க வைத்துள்ளார் இந்நிலையில் அன்றிரவு பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந

DINAVEL DAILY # குமரியில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் நெஞ்சுவலியால் சாவு. கன்னியாகுமரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Image
கன்னியாகுமரி: டிச 10 குமரியில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் நெஞ்சுவலியால் சாவு. கன்னியாகுமரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரத்தை சேர்ந்த மீனவர் ததேயூஸ் (43). இவர் உட்பட 5 பேர் ஜோன்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் ஆரோக்கியபுரம் கடற்கரையிலிருந்து நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளனர். இவர்கள் நடுக்கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ததேயூசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் படகில் சுருண்டு விழுந்த அவர் துடிதுடித்து அங்கேயே பரிதாப உயிரிழந்தார்.  இதனை தொடர்ந்து அவருடன் சென்றவர்கள் அவரது உடலை கரைக்கு கொண்டு வந்தனர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

DINAVEL DAILY # குமரியில் ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை. ஏஜென்சி உரிமையாளர் மீது வழக்கு பதிவு.

Image
கன்னியாகுமரி: டிச 10 குமரியில் ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை. ஏஜென்சி உரிமையாளர் மீது வழக்கு பதிவு. நாகர்கோவில் சைமன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரொமால்டு ஓயிட்ஸ் (45). இவர் ராமன்புதூர் பகுதியில் ரயில் ,பஸ் போன்றவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார்.  இவரது ஏஜென்சி நிறுவனத்தில் நாகர்கோவில் ரயில்வே மத்திய பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர் . அப்போது அங்கிருந்து இரண்டு கம்பியூட்டர்களை ஆய்வு செய்தபோது, ஆன்லைனில் பல்வேறு போலி ரயில்வே கணக்குகள் தொடங்கி அதன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த 42 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 63 ஆயிரம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏஜென்சி உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள ரொமால்டு ஒயிட்ஸை போலீசார் தேடி வருகின்றனர்.

DINAVEL DAILY # குமரி மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

Image
கன்னியாகுமரி: டிச 10 குமரி மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது . அதன்படி முதுகலை ,பாலிடெக்னிக், தொழிற் படிப்பு போன்ற படிப்புகளுக்கு மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. மேலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் படிவத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே பெற்று கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.  எனவே கல்வி நிறுவனங்கள் புதுப்பித்த கல்வி உதவித்தொகைக்கு வருகின்ற 31ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அ

DINAVEL DAILY # ராசி பலன்கள் 10.12.2020

Image
*ராசி பலன்கள்* மேஷம் டிசம்பர் 10, 2020 கார்த்திகை 25 - வியாழன்  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. மாமன்வழியில் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். சில செயல்களை பக்குவமாக பேசி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளும், உயர்வும் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் அஸ்வினி : மனம் மகிழ்வீர்கள். பரணி : மனக்கசப்புகள் குறையும். கிருத்திகை : பொறுப்புகள் கிடைக்கும். --------------------------------------- ரிஷபம் டிசம்பர் 10, 2020 கார்த்திகை 25 - வியாழன்  பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தாய்வழியில் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். வாகனப் பராமரிப்பு செலவுகள் குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள் கைகூடும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் கிருத்திகை : வசதிகள் மேம்படும்.

DINAVEL DAILY # தொடரும் தற்கொலைகள்

Image
தொடரும் தற்கொலைகள்... நேற்றைய செய்தியைப் பார்த்தபோது ஒரு அதிர்ச்சி. அந்த அதிர்ச்சி ஒரு சின்னத்திரை நடிகை என்றோ, ஒரு செலிபிரட்டி என்றோ அல்ல. ஒரு சின்ன வயது; வெறும் 28 வயது தான் ஆகிறது. தற்போது தான் அவர் வாழ்க்கையின் உச்சத்தை தொட தொடங்கியுள்ளார். அத்தகைய சூழலில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் சுஷாந்த் சிங் என்ற வாலிபரும் இதேபோல் தான். நம் கண்களுக்கு இவர்கள் போன்ற பிரபலங்கள் மட்டுமே தெரிகிறது. ஆனால் கண்ணுக்கு தெரியாத இன்னும் எத்தனையோ ஊர்களிலும், மாவட்டங்களிலும் சிறிய வயதுடைய பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது வேதனையான விஷயம். நம் பிள்ளைகளை நாம் கவனிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அவர்களோடு உரையாடுங்கள். நம் பிள்ளைகளோடு மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் வாழும் சூழல் சரியில்லை எனினும் அவர்களுக்கு அன்பால் புரியவையுங்கள்.  எந்த நேரமும் நிதானம் இழந்து பேசாதீர்கள். நம் பிள்ளைகளின் எதிர்காலம் தான் முக்கியம். அவர்களுக்காக வாழ்வோம். அவர்களோடு வாழ்வோம். *தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல என உணர்த்துங்கள்.*  தைரியத்தை கொடுங்

DINAVEL DAILY # நாகியம்பட்டி கிராமத்தில், சாலைகளில் நடந்து செல்லக்கூட வழியின்றி, சேறும் சகதியுமாக இருப்பதால், கறுப்பு கொடிகளுடன், பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Image
நாகியம்பட்டி கிராமத்தில், சாலைகளில் நடந்து செல்லக்கூட வழியின்றி, சேறும் சகதியுமாக இருப்பதால், கறுப்பு கொடிகளுடன், பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லி ஒன்றியம், நாகியம்பட்டி ஊராட்சி, ஏ.டி., காலனி பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலை, பல ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தற்போது பெய்த மழையால், சாலை முழுவதும் ஏர் உழுதது போன்று சேறும், சகதியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் பலரும் அந்த வழியே செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் பல முறை கெங்கவல்லி ஒன்றியம், நாகியம்பட்டி ஊராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, அப்பகுதி பெண்கள், கறுப்பு கொடிகளை ஏந்தி வந்து, சேற்றில் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DINAVEL DAILY B# வந்தவாசி அரசுப் பள்ளியில் இலவச சீருடை மற்றும் மிதியடி வழங்குதல்.

Image
வந்தவாசி அரசுப் பள்ளியில் இலவச சீருடை மற்றும் மிதியடி வழங்குதல்.  திருவண்ணாமலை, டிசம் 10: வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா சீருடைகள் மற்றும் மிதியடி வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் வகுப்பு ஆசிரியர்களே நேரடியாக மாணவர்களுக்கு வழங்கினர். மேலும் கொரோனா சூழல் தொடர்பான விழிப்புணர்வும் கூறப்பட்டது. செய்தி தொகுப்பு: பா. சீனிவாசன், வந்தவாசி.

DINAVEL DAILY # போடிநாயக்கனூர்:இம்பா மற்றும் தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் சங்கம் சார்பாக வேளாளர் வெள்ளாளர் சம்பந்தப்பட்ட பிரச்சனை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்

Image
*போடிநாயக்கனூர்:இம்பா மற்றும் தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் சங்கம்* *சார்பாக வேளாளர் வெள்ளாளர் சம்பந்தப்பட்ட* *பிரச்சனை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.* *இம்பா அமைப்பின் நிறுவன தலைவர்: டாக்டர் செவாலியே* *R.அருணாச்சல முதலியார் அவர்கள், மாநில பொதுச் *செயலாளர்:* *Rtn RSK ரகுராம் அவர்கள், மாநில பொருளாளர் :* *டாக்டர் அப்பு R சந்திரசேகர்* *அவர்கள் மற்றும் மாவட்டங்களின் தலைவர்:* *I. கிருஷ்ணன் பிள்ளை ஆகியோரின் வழிகாட்டுதலின்படி,* *தங்களது பாரம்பரிய அடையாளத்தையும் பண்பாட்டையும் சிதைக்கும் நோக்கத்தோடு வேளாளர் வெள்ளாளர் இனத்தின் பெயரை* *பிற சமுதாயத்திற்கு வழங்க பரிந்துரைக்கப்படும் என்ற தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து* *தேனி *மாவட்ட இம்பா மற்றும் தேனி மாவட்ட அனைத்து* *பிள்ளைமார் சங்கம் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை இன்று10.30 மணி முதல் 12 மணி வரை* *தேனி பங்களாமேடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் நடைபெற்றது.* *இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் தேனி, அல்லிநகரம்,* *பழனிசெட்டிபட்டி, தாமரைக் குளம் மேல்மங்கலம் ஜெயமங்கலம் சில்வார்பட்டி, குள்ளப்புரம், வடுகபட்டி,

DINAVEL DAILY # தேர்தல் வாக்காளர் சேர்த்தல்,நீக்கல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Image
தேர்தல் வாக்காளர் சேர்த்தல்,நீக்கல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.   கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் ஊராட்சி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில்வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், மற்றும் முகவரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணிநடைபெற்றது.           பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு துணை வட்டாச்சியர் ஜெயச்சந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு,விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தேர்தல் குறித்த சைக்கிள் பேரணியை வருவாய் வட்டாச்சியர் சையதுஅபுதாகீர் தொடங்கி வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள்,பயணிகள் உட்பட பலருக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர்கள் வினோத்கண்ணாகுட்டி, ராசு,பட்டதாரி ஆசிரியர் வீரமணி,கணினி ஆபரேட்டர் சுதாகர்,மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

DINAVEL DAILY # பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் RTI மனு அனுப்ப நிகழ்ச்சி நடைபெற்றது

Image
பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் RTI மனு அனுப்ப நிகழ்ச்சி நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் : பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் இன்று 09/11/2020 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய,ஊராட்சியில் இருந்தும் பத்து ரூபாய் இயக்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அஞ்சலக அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த தகவல் கேட்டு 150 மனுக்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மாநில துணைபொதுச்செயலாலர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர் திரு.G. கோவிந்தராஜ்,மாவட்ட செயலாலர் L. சக்கரவர்த்தி,மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணிசெயலாலர் G. திருமால்,ஊத்தங்கரை ஒன்றிய ஒருங்கினைப்பாளர் A. மணி,மத்தூர் ஒன்றிய ஒருங்கினைப்பாளர் V. திருமூர்த்தி,ஒன்றிய செயலாலர்P.C. பரமசிவம்,ஒன்றிய விவசாய அணிசெயலாலர்.S. துரை,பர்கூர் ஒன்றிய துணைச்செயலாலர் P. ரமேஷ் மற்றும் மாவட்டத்திலுள்ள ஒன்றிய,ஊராட்சி,நிர்வாகிகள் பலர் மனு அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

DINAVEL DAILY # கேடயம் திட்டம் மற்றும் VIRTUAL COP குறித்து விழிப்புணர்வு

Image
கேடயம் திட்டம் மற்றும் VIRTUAL COP குறித்து விழிப்புணர்வு.! இன்று 09.12.2020ந் தேதி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவாசன் மற்றும் அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ரஞ்சனா மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி.கன்னியம்மாள் இணைந்து அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில்  கேடயம் திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் உதவி தொலைபேசி எண்கள் 6383071800 , 9384501999 குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் Virtual Cop குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுமார் 5 நபர்கள் தங்களது செல்போனில் Virtual COP App பதிவிறக்கம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள்  குறித்தும் மற்றும் வெர்ச்சுவல் காப்பற்றியும் பெண்கள் மற்றும் குழந்தைகளு

DINAVEL DAILY # தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வள்ளிமதுரை அணை உபரிநீரால் ஏரிகளை நிரப்ப நடவடிக்கை :மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா. உத்தரவு. அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரால் ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா தெரிவித்தார்.தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணை நிரம்பிய நிலையில் தற்போது உபரி நீர் வெளியேறுகிறது. எனவே, வரட்டாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை பயன்படுத்தி ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, வள்ளிமதுரை அணையை தருமபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வள்ளிமதுரை அணையில் இருந்து கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி பகுதியிலுள்ள 20}க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்ப பாசன கால்வாய்களை தூய்மையாக பராமரிப்பு செய்து, ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார்.ரூ.11.06 கோடி மதிப்பிலான தார் சாலை ஆய்வு.பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி, செம்பியானூர், மோளையானூர், தேவராஜபாளையம், காந்திநகர், வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் ரூ. 11.06 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்த தார் சாலைகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், வட்டாட்சியர்கள் பார்வதி, செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், ராமஜெயம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். பட விளக்கம்...வள்ளிமதுரை வரட்டாறு அணையினை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா.சிற்றரசு அரூர்

Image
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வள்ளிமதுரை அணை உபரிநீரால் ஏரிகளை நிரப்ப நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா. உத்தரவு.  அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரால் ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணை நிரம்பிய நிலையில் தற்போது உபரி நீர் வெளியேறுகிறது. எனவே, வரட்டாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை பயன்படுத்தி ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, வள்ளிமதுரை அணையை தருமபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வள்ளிமதுரை அணையில் இருந்து கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி பகுதியிலுள்ள 20}க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்ப பாசன கால்வாய்களை தூய்மையாக பராமரிப்பு செய்து, ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார். ரூ.11.06 கோடி

DINAVEL DAILY # கேடயம் திட்டம்,சாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு

Image
கேடயம் திட்டம்,சாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மதன் அவர்கள் 09.12.2020 அன்று அரியலூர் நகரம் கல்லங்குறிச்சி ரவுண்டானாவில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பெண்களுக்கு கொரானா பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, Virtual Cop மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்களுக்கு எதிரான வன்முறையில் இருந்து பாதுகாக்கும் கேடயம் திட்டத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் கேடயம் திட்டம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வழங்கி *கேடயம் திட்டத்தின் உதவி எண்களை (6383071800,9384501999)* தங்கள் பகுதியில் உள்ள அனைவரிடமும் கொண்டு செல்ல கேட்டுக்கொண்டார். மேலும் Virtual Cop குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் தங்களது அலைபேசியில் *Virtual Cop Install செய்யும் முறை* குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் உடன

DINAVEL DAILY # தர்மபுரி மாவட்ட செய்தியாளர்செ.மோகன்ராஜ்தருமபுரி மாவட்டம், கெட்டுப்பட்டி கிராமத்தில், அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த மதுபாட்டில்களை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அதிரடியாக சென்று பறிமுதல் செய்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கெட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு அனுமதியின்றி வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இரவு பகலாக விற்பனை செய்து வந்துள்ளனர். அப்பகுதியில் விற்பனை செய்யும் மதுபாட்டில்களை வாங்க வரும் குடிமகன்கள் குடித்துவிட்டு மது போதையில் அங்குள்ள ஆடுகளையும் மற்றும் கோழிகளையும் திருடி செல்வது மட்டும் அல்லாமல் பெண்களை கேலி செய்வதும் வீடுகள் முன்பு சிறு நீர் கழிப்பது என குடிமகன்களால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வந்த அக்கிராம மக்கள் இது குறித்து தொப்பூர் காவல்நியைத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் பொதுமக்கள் புகார் மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். ஆனாலும் எந்த ஒரு அரசு அதிகாரிகளும் இக்கிராம மக்களின் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததையடுத்து இறுதியாக தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து இன்று நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கெட்டுப்பட்டி கிராமத்திற்கு நேரடியாக சென்று மது விற்பனை செய்த வீடுகளில் அதிரடியாக நுழைந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது வீட்டின் உள்ளே பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 177 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட பிறகு தொப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர் அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பறிமுதல் செய்த மதுபாட்டில்களை ஒப்படைத்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளத்தனமாக மது விற்பனை செய்தவர்களை தடுக்க முடியாத நிலையில் இன்று தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அக்கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Image
தர்மபுரி மாவட்ட செய்தியாளர் செ.மோகன்ராஜ் தருமபுரி மாவட்டம், கெட்டுப்பட்டி கிராமத்தில், அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த மதுபாட்டில்களை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அதிரடியாக சென்று பறிமுதல் செய்தார்.  தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கெட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு அனுமதியின்றி வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இரவு பகலாக விற்பனை செய்து வந்துள்ளனர். அப்பகுதியில் விற்பனை செய்யும் மதுபாட்டில்களை வாங்க வரும் குடிமகன்கள் குடித்துவிட்டு மது போதையில் அங்குள்ள ஆடுகளையும் மற்றும் கோழிகளையும் திருடி செல்வது மட்டும் அல்லாமல் பெண்களை கேலி செய்வதும் வீடுகள் முன்பு சிறு நீர் கழிப்பது என குடிமகன்களால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வந்த அக்கிராம மக்கள் இது குறித்து தொப்பூர் காவல்நியைத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் பொதுமக்கள் புகார் மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். ஆனாலும் எந்த ஒரு அரசு அதிகாரிகளும் இக்கிராம மக்களின் புகார் மனு மீது

DINAVEL DAILY # காங்கிரஸ் சார்பில் அரூரில் அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் விழா

Image
காங்கிரஸ் சார்பில் அரூரில் அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் விழா அரூர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தியின் 74 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அரூர் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் ஆர்.சுபாஷ் தலைமையில், கட்சியினர் ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில், முன்னாள் எம்எல்ஏ பி.அபரஞ்சி, நகரத் தலைவர் கே.கணேசன், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவர் ஜெ.நவீன், நிர்வாகிகள் பி.டி.ஆறுமுகம், தேசம் சுகுமார், மோகன், செல்வம், வேடியப்பன், வைரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிற்றரசு அரூர்

DINAVEL DAILY # தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கைலாயபுரம் பொது மக்கள் மனைப் பட்டா கோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பு

Image
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கைலாயபுரம் பொது மக்கள் மனைப் பட்டா கோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பு அரூர், அருகே வீட்டு மனைப் பட்டா கோரி அரூர் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம் மத்தியம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கைலாயபுரம். இந்த ஊரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் (சர்வே எண் 28 / 1) சுமார் 30 குடும்பத்தினர் 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள மக்கள் மின்சார இணைப்புகள், அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் பெறமுடியாமல் உள்ளனர். எனவே, கையலாயபுரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் நீண்ட வருடங்களாக குடியிருந்து வரும் மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் அரூர் வட்டாட்சியர் செல்வகுமாரிடம் 30 கோரிக்கை மனுக்களை வழங்கினர். சிற்றரசு அரூர்

DINAVEL DAILY # காமராஜர் நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரசு மகன்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியும் வழங்கினார்

Image
காமராஜர் நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரசு மகன்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியும் வழங்கினார்.. இரா.பாஸ்கர் செய்தியாளர் டிச.10 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகரில் கடந்த சில தினங்களுக்கு மின்சாரம் தாக்கி சரசு என்ற பெண் உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து நேரில் சென்று தாய் சரசு-வை இழந்த சதிஸ் மற்றும் சுரேஷ் இருவருக்கும் ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியும் வழங்கினார். இதில் ஒன்றியச் செயலாளர் பழனியாண்டி, தொட்டியம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நெடுஞ்செழியன்,இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாளர் செல்வக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

DINAVEL DAILY # திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

Image
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்:- உலகெங்கும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி தற்போது இந்தியாவில் மத்திய மாநில அரசுகளின் முயற்சியால் நாளுக்குநாள் தொற்று குறையத் துவங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நோய் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த ஒரு வார காலமாக நூறுக்கும்குறைவாகவே இருந்த கொரோனா தொற்று தற்போது 73 நபர்களுக்கு நேற்று புத்தாக தோற்று உறுதியாகியுள்ளது என்பதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 924 பேருக்கு தோற்று உறுதியாகி குணமாகி உள்ளனர் தற்போது 73 நபர்களும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.திருப்பூர் செய்தியாளர்:மா.துரை.T.யோகராஜ்

DINAVEL DAILY # விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

Image
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பு திமுகவினர் இராஜபாளையத்தில் போலீஸ் அதிகாரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கலவரத்தில் ஈடுபட்டனர்  முதல்வர் எடப்பாடி அவர்களையும் அம்மா அவர்களையும் தரக்குறைவாக பேசுவதற்காக திமுக தலைமை சொல்லியே இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளார் அவராக பேசவில்லை முதலமைச்சரை சவால் விடும் அளவிற்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர்கள் திறமைசாலி அல்ல இவர் இங்குள்ள ஒரு அதிமுக உறுப்பினர்களுடன் போட்டி போடட்டும்  திமுக வன்முறைக் கலாச்சாரத்தை கையில் எடுப்பது இன்று நேற்று அல்ல காலகாலமாக திமுக வன்முறை கால சரத்தை கையில் எடுக்கிறது  அண்ணாவின் மறைவிற்குப் பின்பு கலைஞர் தலைமையில் வன்முறை கலாச்சாரம் காலகாலமாக கையில் எடுக்கப்பட்டு வருகிறது அதை தற்போது ஸ்டாலினும் வன்முறையை முழுமையாக நம்புகிறார் அதை கையில் எடுத்து வருகிறார் அன்னை இந்திரா காந்தி மதுரைக்கு வந்த போது கைது செய்து ரத்தம் சொட்டசொட்ட அடித்து கட்சிதான் திமுக அதற்கு பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டபோது பெண்கள் என்றால் மாதவிடாய் காலம் இரத்தம் வரத்தான

DINAVEL DAILY # திருப்பூர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது

Image
திருப்பூர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது: திருப்பூரில் ஏர் கலப்பையுடன் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் திருத்தச் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ஏர் கலப்பையுடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெரியாரிய மக்கள் கூட்டமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்தபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

DINAVEL DAILY # குணகம்பூண்டி பள்ளியில் ஊரக புத்தாக்க திட்டம்

Image
குணகம்பூண்டி பள்ளியில் ஊரக புத்தாக்க திட்டம்... திருவண்ணாமலை, டிசம் 10: வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில், குணகம் பூண்டி ஊராட்சியில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த நிகழ்வு குண்ணகம்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை  சமூக ஆர்வலர்  கவிதா மற்றும் திட்டப் பணிக் குழு உறுப்பினர்களுடன்  கேட்டறிந்தனர். அப்போது பள்ளிக்கு தேவையான பிரிண்டர், நாற்காலிகள் மற்றும் பள்ளியின் நுழைவாயிலுக்கு முன்பாக ஒரு கழிவுநீர் செல்லும் கால்வாய் பாதை ஆகியன அமைத்து தரும்படி தலைமை ஆசிரியர் வ. மணி வேண்டுகோள் விடுத்தார். மேலும்  இவ்விழாவில் தொழிற்கல்வி ஆசிரியர் ப. மனோகர் மற்றும் கணினி ஆசிரியர் பா. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு: பா. சீனிவாசன், வந்தவாசி.

DINAVEL DAILY # தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 60 செல்போன்கள் மீட்கப்பட்டு அவற்றை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவீன் குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் ஒப்படைத்தார்.

Image
*தூத்துக்குடி மாவட்டம்:09.12.2020* தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 60 செல்போன்கள் மீட்கப்பட்டு அவற்றை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவீன் குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் ஒப்படைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 2019 முதல் இதுவரை காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வளார் திரு. சுதாகரன், திரு. பெர்லின் பிரகாஷ், காவலர்கள் சாபு, சதீஷ்குமார், எடிசன் மற்றும் புவனேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, ச

DINAVEL DAILY # தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட நரிப்பள்ளி அருகே உள்ள மோட்டூர், இ.பி.தண்டா ,மல்லிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 74 லட்ச மதிப்பீட்டில் ஏரி கால்வாய் மற்றும் கிராமபுர சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

Image
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட நரிப்பள்ளி அருகே உள்ள மோட்டூர்,இ.பி.தண்டா ,மல்லிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 74 லட்ச மதிப்பீட்டில் ஏரி கால்வாய் மற்றும் கிராமபுர சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.உடன் அரூர் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாகாலிங்கம்,எம்ஜீஆர் மன்ற இணைச்செயலாளர் சிற்றரசு, மாவட்ட பிரதிநிதி சாமிகண்ணு,மாவட்ட துணைச் செயலாளர் செண்பகம் சந்தோஷ்,நகர செயலாளர் பாபு(அ) அறிவழகன்,கூட்றவு சங்க தலைவர்கள், சிவன்,பன்னீர்,கவுண்சிலர் வேலு, பஞ்சாயத்து தலைவர் மோகனபிரியா, ஊராட்சி செயலாளர் மணி, வேடியப்பன், தொழில்நுட்ப பிரிவு அரவிந்தன்,வி.செந்தில் மற்றும் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

DINAVEL DAILY # பசியில்லா நத்தம் அறக்கட்டளையின் சார்பாக டிசம்பர் மாதத்திற்கான இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

Image
பசியில்லா நத்தம் அறக்கட்டளையின் சார்பாக டிசம்பர் மாதத்திற்கான இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில்., பசியில்லா அறக்கட்டளையின் சார்பாக இலவச ரேசன் கடை திட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான சமைக்க முடியாத இயலாதவர்கள் மற்றும் வாரிசுகளால் கைவிடப்பட்ட வர்கள் ஆகியோருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது... மேலும் நத்தம் கோவில்பட்டி., செட்டியார் குல தெரு, அசோக் நகர் , காமராஜர் நகர் பகுதியிலும் வசிக்க கூடிய பயனாளிகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள்  பொன்னி அரிசி,  நயம் துவரம் பருப்பு,  Gold வின்னர் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டது.. மேலும் பொருட்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள்  பசியில்லா நந்தம் அறக்கட்டளைக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்... மதுரை செய்தியாளர் : S.பெரியதுரை

DINAVEL DAILY # தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் கல்விசுடர் அறக்கட்டளை சார்பாக 40 குழந்தைகளின் கல்வி செலவு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது

Image
தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் கல்விசுடர் அறக்கட்டளை சார்பாக  40 குழந்தைகளின் கல்வி செலவு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது...  அனைத்து குழந்தைகளுக்கும் தைப்பொங்கலை முன்னிட்டு   தென்காசி காவல் ஆய்வாளர் உயர்திரு.கஆடிவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. மேலும் இந்நிகழ்வில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கலையரசி அவர்களால் கல்விசுடர் அறக்கட்டளை சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு புதிய உடை ,போர்வை,மற்றும் காலணிகள் வழங்கப்பட்டது.. இதில் ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள்., அனைத்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது... மேலும் உதவி ஆய்வாளர் இரவிச்சந்திரன்.,  அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிறுவனர் ராம்.சான்றோன்., சமூக நல அறக்கட்டளை உறுப்பினர்கள் இசக்கிமுத்து, தமிழரசன்,மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்... மதுரை செய்தியாளர் S.பெரியதுரை

DINAVEL DAILY # இராஜபாளையம் அருகே அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Image
இராஜபாளையம் அருகே அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டார த்தில் அட்மா திட்டத்தின் கீழ் மேலராஜகுலராமன் மற்றும் வடகரை கிராமங்களில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, நுண்ணீர் பாசனம், மண் பரிசோதனை, மக்காச்சோளம் படைப்பூழுவை கட்டுப்படுத்தும் முறைகள், பருத்தி பயிர் பாதுகாப்பு முறைகள், பயறு வகைகளுக்கு 2% டிஏபி கரைசல் தெளித்தல் போன்றவை கிராமிய பாடல்கள் மூலம் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையா, வேளாண்மை அலுவலர் தனலட்சுமி , உதவி வேளாண்மை அலுவலர்கள் சுருளிசாமி,வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர் வனஜா மற்றும் பிரபு செய்திருந்தனர்.

DINAVEL DAILY # கண்டமங்கலம் அருகே ஆற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி. கண்டமங்கலம் செய்தியாளர் கி.வேலு

Image
கண்டமங்கலம் அருகே ஆற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கெண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் குமார்( 44) இவர் தான் வளர்த்துவந்த மாடுகளை மேய்பதர்க்கு அருகில் உள்ள பம்பையாற்றின் கரையோரம் ஓட்டி சென்றுள்ளார். அப்போது பம்பையாற்றின் ஓரம் சென்ற மாடுகள் ஆற்றில் தண்ணீர் அருந்த சென்றுள்ளது  இதனையடுத்து அந்த மாடுகளை ஓட்டுவதற்காக குமார் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக கரை சரிந்து தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.  உடனடியாக சின்னபாபு சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர்வினோத்குமார் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வு செய்வதற்கு அனுப்பி வைத்தனர்.  இவருக்கு விஜி (36)என்கின்ற மனைவி,  நரேஷ் (16), நர்மதா (15), நந்தினி (11)ஆகிய பிள்ளைகள் உள்ளது என்பது குறிப்பி

DINAVEL DAILY # வேல்யாத்திரைக்கு தடை எதிரொலி. பாஜகவினரை தடுத்து நிறுத்த குமரி சோதனைச் சாவடிகளில் போலீசார் குவிப்பு. அஞ்சுகிராமம் சோதனைச்சாவடியில் எஸ்பி. பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு.

Image
வேல்யாத்திரைக்கு தடை எதிரொலி. பாஜகவினரை தடுத்து நிறுத்த குமரி சோதனைச் சாவடிகளில் போலீசார் குவிப்பு.  அஞ்சுகிராமம் சோதனைச்சாவடியில் எஸ்பி. பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு.  கன்னியாகுமரி டிச 7 வேலி யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் பாஜகவினரை தடுத்து நிறுத்த சோதனைச் சாவடிகள் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை எஸ்பி பத்ரிநாராயணன் ஆய்வு செய்தார்.  பாஜகவின் யாத்திரை இன்று திருச்செந்தூரில் நிறைவடைகிறது.ஆனால் வேல் யாத்திரைக்கு காவல்துறை சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று சட்டமேதை டாக்டர் அம்பேத்காரின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மாலை அணிவித்து தொண்டர்களிடையே உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் யாத்திரை நிறைவு செய்வதற்காக திருச்செந்தூருக்கு செல்வார்கள் என போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோத

DINAVEL DAILY # கன்னியாகுமரி டிச 7புதிய நாடாளுமன்ற கட்டிடத் திற்காக செலவிடும் நிதியை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் செலவிட மத்திய அரசு முன் வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் விஜய் வசந்த் கருத்து.சட்ட மேதை அம்பேத்கரின் 64 வது நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததால் வீதிக்கு வந்த டெல்லியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கொரோனாவால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உட்பட பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளதை கண்டித்தார். நாடாளுமன்ற கட்டிடத்துக்காக செலவிடும் பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி தொகுதி வளர்ச்சிக்கு பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும், ரஜினிகாந்த் கட்சியை துவங்கினாலும் அவர் எந்த கூட்டணியில் இணைந்தால் தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி எனவும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனவும் கூறினார்.

Image
கன்னியாகுமரி டிச 7 புதிய நாடாளுமன்ற கட்டிடத் திற்காக செலவிடும் நிதியை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் செலவிட மத்திய அரசு முன் வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் விஜய் வசந்த் கருத்து. சட்ட மேதை அம்பேத்கரின் 64 வது நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,  விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததால் வீதிக்கு வந்த டெல்லியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கொரோனாவால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உட்பட பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளதை கண்டித்தார். நாடாளுமன்ற கட்டிடத்துக்காக செலவிடும் பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்

DINAVEL DAILY # டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 64 வது நினைவுதினத்தை ஓட்டி நாகர்கோவிலில் அவரது திருஉருவசிலைக்கு பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Image
டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 64 வது நினைவுதினத்தை ஓட்டி நாகர்கோவிலில் அவரது திருஉருவசிலைக்கு பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி டிச 7 டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 64 வது நினைவுதினம் உலகம் முழுவதும்  அனுசரிக்கபடுகிறது. இதன்ஓரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில்  அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள அண்ணல் அம்பேத்காரின் நினைவு   தினத்தையோட்டி அவரது திருஉருவ சிலைக்கு பாஜக சார்பில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில்  தடையை மீறி வேல் யாத்திரை நிகழ்ச்சி நடக்கும். வேல் யாத்திரைக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்துள்ளது. ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பு யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ? என்ற  கேள்விக்கு ரஜினிகாந்த் கட்சி முதலில் ஆரம்பிக்கட்டும் அதன் பின்பு தேசிய தலைமை உடன் கலந்து ஆலோசித்த பிறகு எங்கள் க