தினவேல் செய்திகள் #நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பாக கண்பார்வையிழந்த முதியவர் முதல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச முடித்திருத்தம்& முகச்சவரம் செய்தனர்



நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பாக கண்பார்வையிழந்த முதியவர் முதல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச முடித்திருத்தம்& முகச்சவரம் செய்தனர்

நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பானது கடந்த 20 ஆண்டு காலமாக சாலைகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் மனநிலை பாதித்தோர், வயது முதிந்தோர், அரசு மருத்துவமனையில் தங்கி இருக்கும் ஆதரவற்ற தொற்று நோய்,காசநோய்,ஹச்சைவி,நாள்ப்பட்ட உள்நோயாளிகள் என பலதரப்பட்ட நோயாளிகளுக்கும், ஆதரவற்றோர் காப்பகங்களில் தங்கி படிக்கும் குழந்தைகளுக்கும், ஆங்காங்கே சுற்றித் திரியும் மனநிலை பாதித்தோரையும், வயது முதிந்தோரையும் மீட்டெடுத்து அந்தந்த மாவட்ட காப்பகங்களில் உரிய சான்றிதழ் பெற்று இது போன்ற சேவைப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றோம் என்பதனை மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம்.

அவ்வப்போது அக்காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாத மாதம் தொடர்ந்து முடித்திருத்தம் செய்து கொடுத்தும் வந்துள்ளோம்...இதனைத் தொடர்ந்து இன்று 03-06-2020 புதன் மதியம் திருமுருகன்பூண்டியில் இயங்கி வரும் சுவாமி விவேகானந்த சேவாலைய ஆதரவற்றோர் குழந்தைகளுக்கும், வயது முதிர்வு பார்வையிழந்த முதியவருக்கும் முடித்திருத்தம் செய்து கொடுக்க வேண்டி ஐய்யா செந்தில்நாதன் அவர்கள் கேட்டுக்கொண்டார்...அதன் அடிப்படையில் இன்று வயது முதிர்வும்,பார்வையிழந்த நிலையிலும் கைத்தாங்கலாக கூட்டி வந்து அந்த முதியவருக்கு முடித்திருத்தம் முகச்சவரம் செய்தும் அக்காப்பகத்தில் ஆதரவின்றி தங்கி படிக்கும் குழந்தைகளுக்கும் இலவசமுடித்திருத்தம் செய்து அவர்களின் உடல் நலம் பேணிக்காத்து உதவியுள்ளோம் என்பதை பணிந்து தெரிவிக்கின்றோம்.

இன்றைய பணியில் நிறுவனர் ந. தெய்வராஜ், உறுப்பினர்கள் சிவகாமி,சண்முகராஜ், செல்வராஜ், கோமதி, பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு...
ந. தெய்வராஜ் நிறுவனர்.
நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை.
திருப்பூர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா