DINAVEL NEWS TODAY # தமிழ்நாடு முதலமைச்சர் தனி கவனம் செலுத்த தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்


9 மாதம் சம்பளம் இல்லாமல் தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்.

கொரோனாவிலும் மே மாதம் சம்பளம்  கைவிரிப்பு. 

தமிழ்நாடு முதலமைச்சர் தனி கவனம் செலுத்த  தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் !!

கொரோனாவால் மற்றவர்களை போலவே பகுதிநேர ஆசிரியர்களும்  முடங்கி உள்ளோம்.

மத்திய அரசும் நாடு முழுவதும் உள்ள  அனைத்து  பணியாளர்களின் சம்பளத்தை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

 இந்த நிலையில் கூட மே மாதம் சம்பளம் வழங்காமல் தமிழக அரசு இருப்பது பகுதிநேர ஆசிரியர்களை மேலும் கவலை அடைய செய்கிறது.

10வது கல்வியாண்டு ஆரம்பித்துவிட்டது.

ஆனாலும் முடிந்துபோன  ஒன்பது வருடங்களுக்கு  மே  மாத சம்பளம்கூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அரசு கொடுக்க முன்வராதது வேதனையிலும் வேதனை. 

இதனால் ஒவ்வொருவரும் ₹58000 இழந்து தவிக்கிறோம். 

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

அவரால் மட்டுமே  சாத்தியம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில  ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : 

படித்து பட்டம் பெற்று ஆசிரியர் பணி கிடைக்காமல் வறுமையில் வாழும் உடற்கல்வி,
ஓவியம், கணினிஅறிவியல், இசை, தையல், தோட்டகலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய பட்டதாரிகள் நிலையறிந்து அவர்களை பகுதிநேர ஆசிரியர்களாக தமிழ்நாடு அரசுப்  பள்ளிகளில் பணிபுரிய  உத்தரவிட்டதுடன் 16549 ஆசிரியர்களையும் பணிநியமனம் செய்தவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான்.

கடந்த 2011 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று  சட்டப்பேரவை விதி 110-படி, ஆண்டு முழுவதும் ஊதியம் பெறும் வகையில்  99 கோடியே 29 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியில்  அமர்த்தப்பட்டனர்.

ஆனாலும் 5000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற நிலையில் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கப்படவில்லை.

தொடர்ந்து ஏப்ரல் மாதமும் பணி செய்திருந்த போதிலும்,  அம்மாதத்திற்கான  ஊதியமும் வழங்கப்படவில்லை.

பின்னர் வந்த மே மாதம் பள்ளி முழுஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறையும்  சென்று விட்டது. 

ஆனால் மாத ஊதியம் குறித்து தகவல் எதுவுமே தெரியவில்லை. 

அடுத்த கல்வியாண்டும் பின்னர் துவங்கிவிட்டது.
ஜூன் மாதம் பள்ளிதொடங்கியதும் வேலைக்கு சேர்ந்த 4வது மாதத்தில்தான் முதன்முதலில் வழங்கப்பட்ட ஊதியத்தில்  மே மாதம் தவிர மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்கு மட்டுமே ஊதியம்  வழங்கப்பட்டது. 
இதுவே சம்பள சிக்கலுக்கு முதல் காரணம்.

இப்படி முதல் முறை விடுபட்ட  2012 ஆம் ஆண்டிற்கான மே மாத ஊதியம் தொடங்கி 2020ஆம் ஆண்டு மே மாதம்வரை  இதுவரை கடந்த 9 வருடமாக வழங்கப்படவில்லை என்பது தான் வேதனை. 

2017ஆம் ஆண்டு சட்டசபையில் பணிநிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு செய்ததை நடைமுறைப்படுத்தி இருந்தால், மே மாதம் சம்பளம் எப்போதே ஒழிந்திருக்கும்.

பணிநிரந்தரம் கேட்கும் நேரத்தில், தராமல் விடுபட்ட சம்பளத்தை கேட்கும் நிலையில் தள்ளியது வேதனை இல்லையா?. 

அரசுக்கு உறுதுணையாக இருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டாமா? 

ஆட்சியாளர்களே  எங்கள் கோரிக்கைகளை, அரசு  சிறுதும்  கவனம் செலுத்துவதில்லை என்ற எங்களின் மனக்குமுறலை எப்போது கவனம் செலுத்துவீர்கள்?. 

16549 பகுதிநேர ஆசிரியர்களில்  தற்போதுள்ள 12ஆயிரம் பேருக்கு,  இன்றைய நிலையில் தரப்படும் ₹7700 சம்பளம் வாழ்வாதாரத்தை மீட்குமா?. 

10 ஆண்டுகளில் எங்களின் நிலையை உயர்த்த அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது? 

வருடாவருடம் ஒருமாதம் சம்பளம் இல்லாததால், வங்கியில்கூட கடன் கொடுக்க முடியாது என்கிறார்கள்.
இந்த அவலநிலையை மாற்றுங்கள்.
  
அரசை நம்பி வந்த எங்களை கைவிடாதீர்கள்.

முதலில் 9 ஆண்டாக தொடர்ந்து மறுக்கப்படும் மே மாதம் சம்பளத்தை வழங்க முதல்வர் உத்தரவு பிறபிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள்  கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்  செந்தில்குமார் தெரிவித்தார் .

தொடர்புக்கு :-
சி.செந்தில்குமார் 
மாநில ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு 
செல் : 9487257203

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா