DINAVEL NEWS TODAY # அவினாசி சாலை ரோடு அனுப்பர்பாளையம் மாதேஸ்வரன் கோவில் எதிரில் உள்ள மெயின் ரோட்டில் பெரிய மரம் வேரோடு காய்ந்து கீழே விழும் நிலையில் பெரும் ஆபத்து நிலவக்கூடிய சூழலில் இருப்பதை நெடுஞ்சாலைத் துறை தக்க சமயத்தில் அகற்ற முன் வருமா என பொதுமக்கள் எதிர்பார்பு

அவினாசி சாலை ரோடு அனுப்பர்பாளையம் மாதேஸ்வரன் கோவில் எதிரில் உள்ள மெயின் ரோட்டில் பெரிய மரம் வேரோடு காய்ந்து கீழே விழும் நிலையில் பெரும் ஆபத்து நிலவக்கூடிய சூழலில் இருப்பதை நெடுஞ்சாலைத் துறை தக்க சமயத்தில் அகற்ற முன் வருமா என பொதுமக்கள் எதிர்பார்பு.



திருப்பூர் மாவட்டம் அவினாசி சாலை, அனுப்பர்பாளையம் முயின் ரோட்டில் சாலை ஓரத்தில் பெரிய மரம் வளர்ந்து இருந்தது தற்போது இந்த மரம் இப்போது வேற்கள் காய்ந்தும் மரத்தோடு கிளைகள் முழுதும் காய்ந்து எழும்புக்கூடுகளாய் காட்சி அளிக்கின்றது.

எனவே இப்பகுதியில் வாழும் பொதுமக்களின் உயிரை காப்பாற்றிடும் நோக்கில்  திருப்பூர் நிழல் அறக்கட்டளையின் உயிர் பாதுகாப்பின்மை கருதி சாலைகளில் நகர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளும், 24 மணி நேரமும் இந்த மரத்தை கடந்து போகும் வழித்தடத்தில் இருப்பதால் எந்த நேரத்தில் இந்த மரம்  கீழே சாய்ந்து உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்திடுமோ என்கின்ற அச்சத்தில் ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து செல்கின்றனர் இப்பகுதி பொதுமக்கள்  இதில் இந்த மரம் இருக்கும் இடத்தில் மின் கம்பமும் மரக்கிளைகளில் மோதிக் கொண்டு இருப்பதும் இன்னும் பெரும் அச்சத்தையும் பயத்தையும் நாளுக்கு நாள் உருவாகி வருகின்றது. இந்த மரத்தின் விளைவு தெரியாமல் அந்த மரத்தடியில் வயதான பாட்டி முகக்கவசம் கையுறை போன்றவகளை தள்ளு வண்டிகளில் வைத்து சிறு வியாபாரம் செய்து வருவதும், அடுத்த ஒரு நபர் மாற்றுத்திறனாளியான ஒரு குடும்ப தம்பதிகள் சின்னதா ஒரு தையல் எந்திரத்தையும் அந்த மரத்தடியில் வைத்து தைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தி வருவதும், மேலும் ஒரு நபர் செருப்பு தைக்கும் தொழிளாலாளியானவர் காய்ந்த மரத்தடியினுள்ளேயே உட்கார்ந்து இப்படி தன் உயிரின் நிலை அரியாது தன் வாழ்வின் பிழைப்பென அந்த மரத்தடியில் வசித்து வரும் அப்பாவி மக்களின் உயிர் நிலை கருதியும் மேலும் இது போன்ற அசாதாரன சூழ்நிலை நிலவிட கூடாது என்பதனை கருத்தில் கொண்டு திருப்பூர் நிழல் அறக்கட்டளை பொது மக்களின் நலன் கருதி தெரிவிக்கின்றோம். 

மேலும் இந்த பட்டுப்போன மரத்தை மிக விரைவில் நெடுஞ்சாலை துறை மூலமாகவோ, அல்லது திருப்பூர் மாநகராட்சியின் மூலமாகவோ இந்த பட்டுப்போன மரத்தை அப்பரப்படுத்தி பொது மக்களின் உயிரையும் வாகன ஓட்டிகளின் உயிர் சேதம் ஏற்படாதவாறு உரிய நேரத்தில் இந்த மரத்தை அகற்றிட அனுப்பர்பாளையம் பொதுமக்களின் நலன் கருதியும்  திருப்பூர் நிழல் அறக்கட்டளை  சார்பில் கோரிக்கை விடுக்கும் வகையில் தெரிவிக்கின்றோம்..

இங்ஙனம் 
சமூக பார்வையுடன் திருப்பூர் நிழல் அறக்கட்டளை ஆதுப்பாளையம், திருப்பூர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா