DINAVEL NEWS TODAY # சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்டதை கண்டித்து திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!!


சாத்தான்குளத்தில்  தந்தை, மகன் கொல்லப்பட்டதை கண்டித்து திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!!

கொரனா  தொற்று பாதிப்பு அடுத்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் நேரம் கடந்து கடை திறந்திருந்ததால் கடை உரிமையாளர் மற்றும் அவரது தந்தை இருவரையும் போலீசார்  விசாரணை செய்வதாக கூறி காவல் நிலையம் அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தாக்கப்பட்டு உயிரிழந்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 
தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரபாகரன் தலைமையில்
திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில் படுகொலையை கண்டித்தும்,   போலீசார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும், சிபிஐ விசாரணை கோரியும் 100க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈடுப்பட்டனர்.


இதில் அச்சு, ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் தங்கதுரை,  கணியமுதன், ஆல்பர்ட், அரசு, ஜெய்கணேஷ், புல்லட்லாரன்ஸ், சதீஷ், குணா, முல்லைவளவன்,
செல்வகுமார், அல்பர்ட் ஹென்றி நீலவானன், முத்தழகன், இனியவன், தங்கராஜ், சதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.