DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மலர்தூவி-கழக கொடியேற்றி – இனிப்புகள் வழங்கி1000திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கபட்டது.
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மலர்தூவி-கழக கொடியேற்றி – இனிப்புகள் வழங்கி1000திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கபட்டது.
******
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகம், உதகை கலைஞர் அறிவாலய முகப்பிலுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கபட்ட தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தி-கழக கொடியேற்றி, தூய்மை பணியாளர்கள் 1000திற்கும் மேற்பட்டவர்களுக்கு முககவசங்கள், லுங்கி, சேலை, பெட்ஷீட்கள், நைட்டி உட்பட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அனைவரையும் வரவேற்றார். தலைமை தேர்தல் பணி செயலாளர் ராமசந்திரன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் பில்லன், மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, நகர ஒன்றிய செயலாளர்கள் ஜார்ஜ், தொரை, பிரேம்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சசிகுமார், ஆனந்தன், காந்தல் ரவி, எல்கில் ரவி, யோகேஸ்வரன், தேவராஜ், நகர துணை செயலாளர் ரீட்டாமேரி, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதி ராஜா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகராஜ், வாணீஸ்வரி, ஜெயராமன், ஆட்டோ ராஜன், தியாகு, மார்கெட் ரவி, அமலநாதன், பர்னபாஸ், வெங்கடேஷ், ஊராட்சி செயலாளர்கள் குண்டன், பெள்ளன் உட்பட கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள், பேரூர் – ஊராட்சி செயலாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் உதகை நகர செயலாளர் ஜார்ஜ் நன்றி கூறினார்.
Comments
Post a Comment