Posts

Showing posts from January, 2020

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் நிருபர் நியமனம்: P. J. மகிமை வினோத் விழுப்புர மாவட்ட புகைப்பட கலைஞர்

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் நிருபர் நியமனம்: P. J. மகிமை வினோத் விழுப்புர மாவட்ட புகைப்பட கலைஞர்

# DINAVEL NEWS # ஆம்பூர் அருகே உமராபாத் முன்னாள் கூட்டுறவு கடன் சங்கத்தின் பெண் தலைவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Image
ஆம்பூர் அருகே உமராபாத் முன்னாள் கூட்டுறவு கடன் சங்கத்தின் பெண் தலைவர்  விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து பெண்களை அழைத்துவந்து விபச்சாரம் செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த அதிமுக சேர்ந்த பெண் பிரமுகர் பிரேமா  கைது ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை.

# DINAVEL NEWS # மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (28.01.2020), பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையர் திரு.ஜெ.சி.ரெட்டி அவர்கள் சந்தித்து "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூச திருவிழாவிற்கான" அழைப்பிதழை வழங்கினார்.

Image
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (28.01.2020), பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையர் திரு.ஜெ.சி.ரெட்டி அவர்கள் சந்தித்து "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூச திருவிழாவிற்கான" அழைப்பிதழை வழங்கினார்.

# DINAVEL NEWS # பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் வேன் மரத்தில் மோதி விபத்து.

Image
பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த 11 பேரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   தினவேல் நிருபர்  ஆதிமூலம்

# DINAVEL NEWS # முதல்வரின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டுள்ளன இதனால் பயன் அடைந்த பயனாளிகள் முதல்வருக்கு நன்றி.

Image
வேலூர் மாவட்டம் வேலூர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொங்கல் விழா முன்னிட்டு 10, 25, 220, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன இதை தமிழகத்தில் ஏழை மக்கள் பொங்கல் பண்டிகையை சீரும் சிறப்புடனும் கொண்டாடும் வகையில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவின் பேரில் கடந்த 28. 11. 2019 அன்று ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது அதாவது ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சக்கரை இரண்டடி நீள கரும்புத் துண்டு 20 கிராம் முந்திரி 20 கிராம் திராட்சை 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பாக இது துவங்கப்பட்டது கடந்த ஆண்டில் முதல்வர் ஒரு படி சென்று பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப் பணத்தையும் கொடுத்தார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10, 25, 220 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வரின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டுள்ளன இதனால் பயன் அடைந்த பயனாளிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் குடி

# DINAVEL NEWS # சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

Image
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல் துறையின் சார்பில் வி கோட்டா ரோடு சந்திப்பில் சாலை  விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வில் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க  சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்டவும்  படியில் பயணம் நொடியில் மரணம்  தலைக்கவசம் உயிர்க்கவசம் தலைக்கவசம் அணிவது பாதுகாப்பு இதுவே உனது உயிர் காப்பு  வாகனம் ஓட்டும் போது அலைபேசி அழைப்பு அழைப்பது எமனாகவும் இருக்கலாம்  மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள் வளவில் முந்தி செல்ல வேண்டாம் எனஎடுத்துரைத்து வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இதில் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு இனிப்பு பிஸ்கட் மற்றும் டீ  கொடுத்தனர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில் பேரணாம்பட்டு    காவல்நிலைய ஆய்வாளர் குமார்  உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் காவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

# DINAVEL NEWS # தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரிகூட புரத்தில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி.

Image
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரிகூட புரத்தில் கணவன் மனைவி தகராறு காரணமாக கணவர் அன்புச்செல்வன் (25) என்பவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி தகவலறிந்த சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வேல் பாண்டியன் பத்திரமாக மீட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

# DINAVEL NEWS # திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிபட்டி தட்டாங்குளம் சுவாமி மெட்ரிகுலேஷன் சுவாமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விளையாட்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனி  சிவகிரிபட்டி  தட்டாங்குளம் சுவாமி மெட்ரிகுலேஷன்  சுவாமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விளையாட்டு தினம்  சிறப்பாக கொண்டாடப்பட்டது.  பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்  பெற்றோர்களும்  மியூசிக் சேர் போட்டியில்  ஆர்வமுடன் கலந்து கொண்டனர்  மியூசிக் தேர்வில் வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு சுவாமி மெட்ரிகுலேஷன் தாளாளர் அவர்கள் பரிசு வழங்கினார் நன்றி தெரிவித்தார் மதிய உணவு குழந்தைகளுக்கு சுகாதார முறையில் பள்ளி உன்னுடைய தலைமையாசிரியர் உணவு வழங்கினார். ஆதிமூலம் தினவேல்  பழனி நிருபர் 

# DINAVEL NEWS # திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிபட்டி தட்டாங்குளம் சுவாமி மெட்ரிகுலேஷன் சுவாமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விளையாட்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளியின் உடைய தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனி  சிவகிரிபட்டி  தட்டாங்குளம் சுவாமி மெட்ரிகுலேஷன்  சுவாமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விளையாட்டு தினம்  சிறப்பாக கொண்டாடப்பட்டது  பள்ளியின் உடைய  தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.   தினவேல் பழனி நிருபர்  ஆதிமூலம்

# DINAVEL NEWS # வேலூரில் 31 ஆவது சாலைபாதுகாப்பு வாரவிழா.

Image
வேலூரில் 31 ஆவது சாலைபாதுகாப்பு வாரவிழா  வேலூர் மாவட்டம்,வேலூரில் 31 ஆவது சாலைபாதுகாப்பு வாரவிழா நிறைவு விழாவை முன்னிட்டு பொதுமக்களிடையே சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவ,மாணவிகள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரையில் வரிசையாக மனித சங்கிலி நடத்தினார்கள் இதில் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மனித சங்கிலியில் கலந்துகொண்டு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினார் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் காட்பாடி முதல் கிரின் சர்கிள் வரையில் நின்றிருந்தனர் இன்றுடன் சாலைபாதுகாப்பு வார விழா நிறைவுபெற்றது.

# DINAVEL NEWS # வேலூர் மாவட்டம்- ஜெயில் கைதிகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது:டி.ஐ.ஜி காமினி பேச்சு.

Image
வேலூர் மாவட்டம் - ஜெயில் கைதிகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது:டி.ஐ.ஜி காமினி பேச்சு வேலூர் சிறைத்துறை காவலர் பயிற்சி மையத்தில் (APCA) ஜெயில் அதிகாரிகளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் திங்கட்கிழமை தொடங்கியது.வேலூர் சரக டிஐஜி காமினி குத்துவிளக்கேற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது,இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஜெயில் கைதிகளுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் உள்ளது ஆனால் அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது.ஜெயிலில் உள்ள கைதிகளிடம் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது .அவர்களுடைய மதம் மற்றும் நிறம் சார்ந்த பாகுபாடு காட்டாமல்* நடந்துகொள்ளவேண்டும்.கைதிகளுக்கு மனித உரிமைகள் அனைத்தும் உள்ளது அதனை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சிறைத்துறை காவலர் பயிற்சி மைய இயக்குனர் சந்திரசேகர் இணை இயக்குனர் கருப்பணன்,சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதில் தமிழ்நாடு ,தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத், நாகாலாந்து ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.

Image
அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா  ஈரோடு  மாவட்டம் அறச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 25.1.2020 அன்று அறிவுத் திறன் வகுப்பறை  துவங்கப்பட்டது.  இப்பள்ளியில் 956 மாணவ மாணவியர்கள் படித்துக் கொண்டு வருகிறார்கள் . பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் முதன்முதலாக  சென்னை - திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை  சார்பில் அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு துவங்கப்பட்டது .    பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர்  திரு.ரத்தினசாமி கவுண்டர் அவர்களும் மற்றும் அறக்கட்டளையின் சார்பாக சமூக சேவகரும் தினவேல் நாளிதழ் சேலம் தெற்கு நிருபர் திரு பிரபு அவர்களும் கலந்து கொண்டனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ஐ. கோபால் அவர்கள் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று இவ்விழாவை சிறப்பாக நடத்தினார்.  மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த அறிவுத் திறன் வகுப்பறையை பயன்படுத்தி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள விருந்தினர்கள் அனைவரும் மாணவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்தி பேசினர். ஆசிரியர் திரு.த.செந்தில்நாதன் அவர்கள் நன்றி

# DINAVEL NEWS # கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் 11 ம் நாளாள் தை திருவிழாவின் நிறைவு நாளாக இன்று தேர் திருவிழா நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிடத் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அய்யா வழி பக்தர்கள் வருகை தந்தனர்.

Image
மணிகுமார் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம்  சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில்  11 ம் நாளாள் தை திருவிழாவின் நிறைவு நாளாக இன்று தேர் திருவிழா நடைபெற்றது.   இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிடத் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அய்யா வழி பக்தர்கள் வருகை தந்தனர்.  கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட தை திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் வடக்கு வாசலில் அன்னதர்மமும், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும், யுகப்படிப்பு,  பஜனை, கலிவேட்டையாடும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது. 11 நாட்கள் தை திருவிழாவன நிறைவு நாள் விழாவான இன்று தேர் திருவிழா  நடைபெற்றது. தலைமை பதியில் இருந்து பல்லாக்கில் ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருளிய அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து   திருவிழாவிற்கு வருகை தந்த அய்யா வழிமக்கள் நீண்ட கியூ

# DINAVEL NEWS# பொதுமக்கள் மத்தியில் கலாச்சாரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ தஜ் விஜயன்(31) என்பவர் குமரி முதல் காஷ்மீர் வரையில் மேற்கொண்ட சைக்கிள் சாதனை பயணத்தை இன்று கன்னியாகுமரியில் நிறைவு செய்தார்.

Image
மணிகுமார் நாகர்கோவில் பொதுமக்கள் மத்தியில் கலாச்சாரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ தஜ் விஜயன்(31) என்பவர் குமரி முதல் காஷ்மீர் வரையில் மேற்கொண்ட சைக்கிள் சாதனை பயணத்தை இன்று கன்னியாகுமரியில் நிறைவு செய்தார்.              கன்னியாகுமரி.ஜன.27. கன்னியாகுமரி மாவட்டம் சிதறாலை சேர்ந்தவர் ஸ்ரீ தஜ் விஜயன்(31). எம்எஸ்ஸி பட்டதாரியான இவர் நாகர்கோவிலில் சுய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நம் தேசத்தின் உணவு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை சீர்படுத்தவும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றைக்குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைய தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் வகையிலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான சுமார் 4000 கிலோமீட்டர் தூரத்தை  சைக்கிளில் கடந்து சாதனை பயணம் மேற்கொண்டார். இந்த சாதனை  பயணத்தை இன்று அவர் கன்னியாகுமரியில்   நிறைவு செய்தார். அவருக்கு பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கன்னியாகுமரியில் உற்சாகமான வரவேற்ப

#DINAVEL NEWS# கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி இணைந்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்

Image
மணிகுமார் நாகர்கோவில் கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி இணைந்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.  மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகள் இந்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நியாயம் கிடைக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியு

# DINAVEL NEWS # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் சாமி தரிசனம் செய்த அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த பக்தர் கார்ல்பாபா.

Image
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் சாமி தரிசனம் செய்த அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த பக்தர் கார்ல்பாபா.

# DINAVEL NEWS # ஒருநாள் தலைமையாசிரியராக பத்தாம் வகுப்பு மாணவி - ஆரணி அருகே அசத்தல்.

Image
ஒருநாள் தலைமையாசிரியராக பத்தாம் வகுப்பு மாணவி - ஆரணி அருகே அசத்தல் ஆரணி அருகே உள்ள நெசல் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு  படிக்கும் மாணவி மதுமிதா இன்று ஒருநாள் தலைமையாசிரியர் பொறுப்பேற்று அப்பள்ளி நிர்வாகம் செய்கிறார் .  கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை கவுரவிக்கும் வகையில் மாணவர்கள் நிர்வாகத் திறன் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது  ஒரு நாள் தலைமை ஆசிரியருக்கு ஆசிரியர்களும் , மாணவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

# DINAVEL NEWS # வேலூர் பாராளுமன்ற அலுவலகத்தை தி.மு.கழக பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தர்.

Image
வேலூர் பாராளுமன்ற  அலுவலகத்தை தி.மு.கழக பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தர்.  அருகில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த்,  வேலூர் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி,  ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வேலூர் மாவட்ட கழக செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. திருப்பத்தூர்  மாவட்ட தி.மு. கழக பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், ஆற்காடு எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் குடியாத்தம் காத்தவராயன் எம்எல்ஏ மற்றும் கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

# DINAVEL NEWS # வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லெத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் திரு. சண்முகசுந்தரம் மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை பெற்று கனிவுடன் குறைகளை கேட்டறிந்தார்.

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லெத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் திரு. சண்முகசுந்தரம் மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை பெற்று கனிவுடன் குறைகளை கேட்டறிந்தார்.

# DINAVEL NEWS # திருச்சி பாஜக பாலக்கரை மண்டல் செயலாளர் விஜய ரகு அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது திருச்சி அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் உள்ளது.

Image
திருச்சி பாஜக பாலக்கரை மண்டல் செயலாளர் விஜய ரகு அவர்கள்  படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது திருச்சி அரசு மருத்துவமனை  பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் உள்ளது. முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் வெட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவரை காந்தி சந்தை காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

# DINAVEL NEWS # 27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரம் வழங்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் முருகபெருமான்.

Image
சுயம்பு முருகபெருமான்! 27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரம் வழங்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் முருகபெருமான்! சுயம்பு முருகனை காண்பது அரிது. அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம். வில்வாரணி நட்சத்திரகிரியில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தனிச்சிறப்பு பெற்றது. முருகப்பெருமானின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே காண இயலும். 27 நட்சத்திரங்களும், சிவ சர்பமும் முருகப் பெருமா னை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை. வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப்பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க கோயில் எனும் பெருமையும் இத்திருதலத்துக்கு உண்டு. 27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் அமைந்திருக்கிறது. எனவேதான், நட்சத்திர கோயில் எனும் சிறப்புடன் பக்தர்கள் அழைக்

# DINAVEL NEWS # தென்காசி மாவட்ட சிறந்த சுகாதார அலுவலருக்கான சான்று கடையநல்லூர் நாராயணனுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Image
தென்காசி மாவட்ட சிறந்த சுகாதார அலுவலருக்கான சான்று கடையநல்லூர் நாராயணனுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கடையநல்லூர் ஜன 26.  கடையநல்லூர் நகராட்சியில் துப்புரவு அலுவலராக பணிபுரியும் நாராயணன் அவர்களுக்கு கடையநல்லூர் நகரை டெங்கு இல்லாநதர மாத மாற்றியமைக்காக 2019 ஆம் ஆண்டின் சிறந்த துப்புரவு அலுவலருக்கான சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டினார். மேலும் கடையநல்லூர் புளியங்குடி தென்காசி செங்கோட்டை சங்கரன் கோவில் நகராட்சிகளிலும் சிறப்பாத பணி புரிந்த சுகாதார ஆய்வாளர்கள் எழுத்தர்கள், கணினி இயக்குனர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற தென்காசி மாவட்ட முதல் குடியரசு தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கடையநல்லூர் நத ராட்சி சுகாதார அலுவலர் நாராயணனை தொடர்ந்து தேர்தல் மற்றும் தணிக்கையில் சிறப்பாக Vணி புரிந்தமைக்காக மாரியப்பன் புளியங்குடி தகராட்சியில் பணிபுரியும் முருகன் சேகர் சங்கரன்கோவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிச்சையா பாஸ்கர் தென்காசி நகராட்சி சுகாதார ஆய்வாளர் கைலாச சுந்தரம் செங்கோட்டை நகராட்சி சுகாதார ஆய்வா

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.

Image
அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா  ஈரோடு  மாவட்டம் அறச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 25.1.2020 அன்று அறிவுத் திறன் வகுப்பறை  துவங்கப்பட்டது.  இப்பள்ளியில் 956 மாணவ மாணவியர்கள் படித்துக் கொண்டு வருகிறார்கள் . பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் முதன்முதலாக  சென்னை - திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை  சார்பில் அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு துவங்கப்பட்டது .    பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர்  திரு.ரத்தினசாமி கவுண்டர் அவர்களும் மற்றும் அறக்கட்டளையின் சார்பாக சமூக சேவகரும் தினவேல் நாளிதழ் சேலம் தெற்கு நிருபர் திரு பிரபு அவர்களும் கலந்து கொண்டனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ஐ. கோபால் அவர்கள் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று இவ்விழாவை சிறப்பாக நடத்தினார்.  மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த அறிவுத் திறன் வகுப்பறையை பயன்படுத்தி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள விருந்தினர்கள் அனைவரும் மாணவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்தி பேசினர். ஆசிரியர் திரு.த.செந்தில்நாதன் அவர்கள் நன்றி

# DINAVEL NEWS # கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலிஸ் காவலில் உள்ள குற்றவாளிகள் குறித்த தேசிய அளவிலான தொடர்புகளை விசாரிக்க தற்போதைய கால அவகாசம் போதாது என்பதால், கூடுதல் கால அவகாசம் கோரியும், விசாரணையில் இதுவரையில் கிடைத்த விவரங்களையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நாளை போலீசார் தாக்கல் செய்ய உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்.

Image
மணிகுமார் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி  பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலிஸ் காவலில் உள்ள குற்றவாளிகள் குறித்த தேசிய அளவிலான தொடர்புகளை விசாரிக்க தற்போதைய கால அவகாசம் போதாது என்பதால், கூடுதல் கால அவகாசம் கோரியும், விசாரணையில் இதுவரையில் கிடைத்த விவரங்களையும்  நாகர்கோவில்  நீதிமன்றத்தில்  நாளை போலீசார் தாக்கல் செய்ய உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்.               கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில்  எஸ்.ஐ.வில்சன் கடந்த எட்டாம் தேதி மர்ம நபர்களால்  கொலை செய்யப்பட்டார். இந்த  வழக்கில் அப்துல் சமீம், தௌபீக்  ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் அவர்களை பத்து நாட்கள்  நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில்  எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே துப்பாக்கி மீட்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகே கொலைக்கு பயன்படுத்திய கத்தி மீட்கப்பட்டது.  கொலையாளிகள்  கொலைக்கு முன்  நெய்யாற்றின்கரை பகுதியில்  தங்கி இருந்துள்ளனர். போலீஸ் அந

# DINAVEL NEWS # இன்று கணியாம்பூண்டி ஊராட்சி முதலாவது கிராம சபை கூட்டம் 26/01/2020 புதிய நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

Image
இன்று கணியாம்பூண்டி ஊராட்சி முதலாவது கிராம சபை கூட்டம் 26/01/2020 புதிய நிர்வாகிகளுடன் நடைபெற்றது.  இந்த கிராமசபை கூட்டத்தில் எந்த வரவு செலவு கணக்குகளும் பார்க்கப்படவில்லை ஏனென்றால் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று 11 நாட்கள் மட்டுமே ஆகிறது.  மேலும் பங்கேற்ற பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த மனுக்களை ஏற்று புதிய நிர்வாகம் சிறப்புடன் செயல்பட வாழ்த்துகிறோம்

# DINAVEL NEWS # ஆம் ஆத்மி கட்சி குமரிமாவட்டம் குடியரசு தின கொண்டாட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது,

Image
*மணிகுமார்* நாகர்கோவில் ஆம் ஆத்மி கட்சி குமரிமாவட்டம் குடியரசு  தின  கொண்டாட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது, கட்சி நிர்வாகிகள் அலெக்ஸாண்ட்ரப்ரெஸ் ரோடு வியாபாரிகள்  மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷெல்லி தலைமை உரையாற்றி தேசியக்கொடியேற்றினார் . இனிப்புக்கள் வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச்செயலர் பெஞ்சமின் ஜெயராஜ் , நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மணிபட்டேல், பொருளர் சுப்பிரமணியன் செய்திருந்தனர் . காட்சன் , சஜித் ,  குளச்சல் சட்டமன்ற தொகுதி  ஒருங்கிணைப்பாளர் அமலராஜ் , செயலர் ரெஜு,  மகளிரணி சாந்தி ,  ஆகியோர் கலந்துகொண்டனர்

# DINAVEL NEWS # இன்று ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப., அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

Image
இராணிப்பேட்டை நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில், இன்று ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப.,  அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 16 காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கத்தினை வழங்கியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மயில்வாகனன் அவர்கள் முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் திருமதி கீதா, துணை காவல் கண்காணிப்பாளர், ராணிப்பேட்டை உட்கோட்டம் அவர்களும் இதர அரசுத்துறை அலுவலர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

# DINAVEL NEWS # வட்டார இளநிலை உதவியாளர் ஷகிலா, ஊராட்சி துணை தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி எழுத்தர் சபிதா , மற்றும் உறுப்பினர்கள் முருகேசன், குமார் உள்ளிட்ட பல கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Image
வட்டார இளநிலை உதவியாளர் ஷகிலா, ஊராட்சி துணை தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி எழுத்தர் சபிதா , மற்றும் உறுப்பினர்கள் முருகேசன், குமார் உள்ளிட்ட பல கலந்துகொண்டு சிறப்பித்தனர் வாரணவாசி ஊராட்சியில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 1, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல். 2,கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுத்தல். 3,பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மாற்றுதல். 4,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மூலம் குடிசை வீடு இல்லாத ஊராட்சியாக மாற்றுதல். 5,குழந்தைக் கடத்தல்,குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல்,குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்தல். 6,திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சியாக மாற்றுதல். 7, வாக்காளர் உறுதி மொழி ஏற்றது 8,தொழுநோய் கண்டறிந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும், அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும் உறுதிமொழி ஏடுக்கப்பட்டது. வாரணவாசி கே.ராசேந்திரன் தலைவர் வானணவாசி ஊராட்சி

# DINAVEL NEWS # நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் ஒன்றியம் தாளம்பாடி கிராமத்தில் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

Image
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் ஒன்றியம் தாளம்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் V.சதிஸ்குமார் 71 வது குடியரசு தினம் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது மேலும் இவ்விழாவில் துணை தலைவர் P.உசாராணி மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனார்,  பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களால் தேசிய கீதம் பாடப்பட்டது. பின்பு 2019 - 2020 வரவு செலவு கணக்கு படிக்கப்பட்டது,  இதில் வருவாய் துறை உயர் அதிகாரி அவர்களால் மனு பெறப்பட்டது மற்றும் இதில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கூட்டுறவு துறை ஊழியர், அங்கன்வாடி ஊழியர் மற்றும் கிராம செவிளியர் பங்கேற்றனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கையொப்பம் பெறப்பட்டு விழா சிறப்பாக நடந்து.  இதில் கோட்டாசியர் கோட்டைகுமார் மற்றும் பீடிஓ பிரபாகரன் மற்றும் 11 அரசு அதிகாரிகள் பங்கேற்று 3 பயனாளிகளுக்கு ஓஏபி மனு பெற்று உடணடியாக தீர்வு காணப்பட்டது கோட்டாச்சியர் அவர்கள் தலைமையில் மேலும் இவ்விழாவில் கவுன்சிலர் R.கோபிநாத் பங்கேற்றார்.  K.S. வேல்முருகன் தினவேல் நாமக்கல் மாவட்ட நிருபர்

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

Image
வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

# DINAVEL NEWS # குடியரசு தின விழாவில் மனித உரிமை பாதுகாப்பு சமூக நல அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தனர்.

Image
மணிகுமார் நாகர்கோவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலை மார்க்கமாக இனைப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வான் வழியாக இனைப்பை ஏற்படுத்த கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் அமைத்து தர வேண்டும் என நாகர்கோவிலில் நடைபெற்ற  குடியரசு தின விழாவில் மனித உரிமை பாதுகாப்பு சமூக நல அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கையை  முன் வைத்தனர். அடுத்த ஆண்டு குடியரசு தினத்திற்கு முன் சர்வதேச சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இந்த திட்டத்தை நிறைவேற்றவும் வலியுறுத்தி சூளுரை.   நாடு முழுவதும் 71  ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடபட்டது. அரசு சார்பில் இந்த விழாக்கள் கொண்டடபடுவது போலவே  சமூக நல அமைப்புகளும் குடியரசு தின விழாவினை உற்சாகமாக கொண்டாடினார்கள்.  அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மனித உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில்குடியரசு தின விழா கொண்டடபட்டு பொது மக்களுக்கு இனிப்புகளும் இலவச சேலைகளும் வழங்கப்பட்டன. பின்னர் விழாவில்,   காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலை மார்க்கமாக இனைப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வான் வழியாக இனைப்பை ஏற்படுத்த கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் அமைத்த

# DINAVEL NEWS # தேசிய அளவிலான வளைய பந்து போட்டியில் தமிழகம் அணி சாம்பியன்.

Image
தேசிய அளவிலான வளைய பந்து போட்டியில் தமிழகம் அணி சாம்பியன். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மினி விளையாட்டு அரங்கில் நடைப்பெற்ற 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு  தேசிய அளவில் 12அணிகள் பங்கேற்ற  வளைய பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழக அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை புதுச்சேரி அணியும் மூன்றாம் இடத்தை ஆந்திரா அணியும் பிடித்தது. பெண்கள் பிரிவில்  இரண்டாம் இடத்தை ஆந்திரா அணியும் மூன்றாம் இடத்தை சத்தீஸ்கர் அணியும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கோப்பையை வழங்கி சான்றிதழ் வழங்கினார். இந்த போட்டியில் முதல் இடம் பிடித்த தமிழக அணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி அவர்களால் 2லட்சம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள்  முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் திருப்பத்தூர் மாவட்ட கைப்பந்து விளையாட்டு மாவட்ட தலைவரும்  ஜோலார்பேட்டை நகர  கழகம் செயளாளர்

# DINAVEL NEWS # தேசிய அளவிலான வளைய பந்து போட்டியில் தமிழகம் அணி சாம்பியன்.

Image
தேசிய அளவிலான வளைய பந்து போட்டியில் தமிழகம் அணி சாம்பியன். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மினி விளையாட்டு அரங்கில் நடைப்பெற்ற 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு  தேசிய அளவில் 12அணிகள் பங்கேற்ற  வளைய பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழக அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை புதுச்சேரி அணியும் மூன்றாம் இடத்தை ஆந்திரா அணியும் பிடித்தது. பெண்கள் பிரிவில்  இரண்டாம் இடத்தை ஆந்திரா அணியும் மூன்றாம் இடத்தை சத்தீஸ்கர் அணியும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கோப்பையை வழங்கி சான்றிதழ் வழங்கினார். இந்த போட்டியில் முதல் இடம் பிடித்த தமிழக அணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி அவர்களால் 2லட்சம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள்  முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் திருப்பத்தூர் மாவட்ட கைப்பந்து விளையாட்டு மாவட்ட தலைவரும்  ஜோலார்பேட்டை நகர  கழகம் செயளாளர்

# DINAVEL NEWS # சத்துவாச்சாரியில் நீச்சல் குளத்தை கலெக்டர் ஆய்வு.

Image
சத்துவாச்சாரியில் நீச்சல் குளத்தை கலெக்டர் ஆய்வு..... வேலூர் சத்துவாச்சாரியில் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசு சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் கட்டப்பட்டதே இந்த குளம் கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை இதனால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தனியார் நீச்சல் குளத்தை தேடிச் சென்றனர் இந்த நீச்சல் குளத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் இந்நிலையில் கலெக்டர் சண்முகம் சுந்தரம் இன்று காலை இந்த நீச்சல் குளத்தை நேரில் சென்று ஆய்வு செய்து கூறியதாவது.. இந்த நீச்சல் குளம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் ஏறும் மாநகராட்சி வருவாய் துறை குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியோர் இணைந்து கண்காணிக்க வேண்டும் மேலும் இந்த நீச்சல் குளம் நுழைவு வாயிலில் சிசிடிவி கேமரா மற்றும் விளக்குகள் அமைக்கப்படும் இது என்னுடைய நிதியிலிருந்து அமைக்கப்படும் மேலும் குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் இதில் இரண்டாவது மண்டல அலுவலர் மதிவாணன் மற்றும் தாசில்தார் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

# DINAVEL NEWS # வேலூர் முழுவதும் குற்றச் செயல்களை தடுக்க ரூபாய் 72 லட்சம் மதிப்பில் சிசிடிவி மாவட்ட ஆட்சியர் தகவல்..

Image
வேலூர் முழுவதும் குற்றச் செயல்களை தடுக்க ரூபாய் 72 லட்சம் மதிப்பில் சிசிடிவி மாவட்ட ஆட்சியர் தகவல்.... காட்பாடி பி சி கே நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சிசிடிவி கேமரா தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார் முன்னாள் நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார் கலெக்டர் சண்முகசுந்தரம் எஸ்.பி. பிரவேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிசிடிவி கேமராக்களை தொடக்கிவைத்த வைத்தனர் பின்னர் கலெக்டர் கூறி பேசியதாவது குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் பாதுகாப்பை பலப்படுத்தும் சுமார் 4.5 லட்சம் செலவில் 27 கண்காணிப்பு கேமராக்கள் இந்த பி சி கே நகர் முழுவதும் அமைத்துள்ளது வரவேற்கக் கூடிய ஒன்று மாநகரில் உள்ள சாலைகள் பெரும்பாலும் சிமெண்ட் சாலைகளாக உள்ளது இந்த சாலைகளில் ஓரம் பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் இதனால் தட்பவெப்ப நிலை மாறுபாடு ஏற்பட்டு சரியான தட்ப வெப்பநிலை நிலவும் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் மனு அள

# DINAVEL NEWS # கேரளா வில் ஜூம்மா தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்கள். CAA எதிர்த்து ஊர்வலம் சென்றனர்.

Image
கேரளா வில் ஜூம்மா தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்கள். CAA எதிர்த்து ஊர்வலம் சென்றனர்.அப்போது 1921ல் நடந்த இனபடுகொலையை செய்த  மாப்ளா கலவரக்காரர்கள் போல் உடை அணிந்து நாங்கள் 1921 ல் பயன்படுத்திய கத்திகளை அரபிக்கடலில் வீச வில்லை.இன்னும் கையில் வைத்து இருக்கிறோம் என முழக்கம்.

# DINAVEL NEWS # கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் பேரணி.

Image
மணிகுமார் நாகர்கோவில் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தவ்ஹீத் ஜமாஅத்  அமைப்பின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் பேரணி.   பால்பண்ணை அருகே  பேரணியாக துவங்கி வந்து  ஆட்சியர்  அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம். ஏராளமான போலீசார் குவிப்பு. வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடபட்டன. இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் அதனை  ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பு நிறுவனங்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் என பல்வேறு தரப்புகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  அந்தவகையில் இன்று நாகர்கோவிலில் தவ்ஹீத் ஜமாஅத்  அமைப்பின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது. அரசு   பால்பண்ணை அருகே இருந்து  பேரணியாக புறபட்டு வந்து   ஆட்சியர்  அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஏராளமான போலீசார் குவிக்கபட்டனர்.  வாகனங்கள்  அனைத

#DINAVEL NEWS# வேலூரில் 12 அரசு நிதிஉதவி பள்ளிகளை சேர்ந்த 2350 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.

Image
வேலூரில் 12 அரசு நிதிஉதவி பள்ளிகளை சேர்ந்த 2350 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள். வேலூரில் ஊரீசு மேல்நிலைப்பள்ளி வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி ஈவேரா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  உள்பட 12 அரசு நிதிஉதவி பள்ளிகளை சேர்ந்த 2350 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சாரதாருக்மணி முன்னிலை வகித்தார் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் வீரமணி வழங்கி னார் விழாவில் ஆவின் சேர்மன் வேலழகன்  அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

# DINAVEL NEWS # தேசிய வாக்காளர் தின விழா 2020 பேரணி.

Image
தேசிய வாக்காளர் தின விழா 2020 பேரணி. தேசிய வாக்காளர் தின விழா 2020    பேரணியை வேலூர் அண்ணாகலைரங்கம் அருகிலிருந்து மாவட்ட ஆட்சியர் A.சண்முகசுந்தரம் அவர்கள் கொடியசைத்து  துவக்கிவைத்தார். வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள அண்ணாகலையரங்கம் அருகிலிருந்து கிளம்பிய பேரணியில்  டி.கே.எம். மகளிர் கல்லூரி, ஊரீசு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். வாக்குரிமையையும், வாக்களிப்பதன் அவசியத்தையும், வலியுறுத்தும் வாசகங்களை கையில் ஏந்தி கல்லூரி மாணவ, மாணவியர் பேரணியாக புறப்பட்டு வேலூர் மாநகரை வலம் வந்து வாக்களிப்பது குறித்த   விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

Image
கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில்  அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா  சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கே.ஏ.நாச்சியப்பா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 24.1.2020 அன்று அறிவுத் திறன் வகுப்பறை  துவங்கப்பட்டது.  இப்பள்ளியில் 570 மாணவர்கள் படித்துக் கொண்டு வருகிறார்கள் .  இப்பள்ளியில் முதன்முதலாக  சென்னை - திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை  சார்பில் அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு துவங்கப்பட்டது .  எடப்பாடி கல்வி மாவட்ட -மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.ம.விஜயா அவர்களும் கொங்கணாபுரம் ஒன்றிய சேர்மன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்  திரு K.K. மணி அவர்களும் மற்றும் அறக்கட்டளையின் சார்பாக சமூக சேவகரும் தினவேல் நாளிதழ் சேலம் தெற்கு நிருபர் திரு பிரபு அவர்களும் கலந்து கொண்டனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.செந்திலாதிபன் அவர்கள் அனைவரையும் வரவேற்று இவ்விழாவை சிறப்பாக நடத்தினர்.  மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த அறிவுத் திறன் வகுப்பறையை பயன்படுத்தி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள விருந்தினர்கள் அனைவரும் மாணவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்தி பே

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Image
மணிகுமார் நாகர்கோவில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட தை திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் நாள் திருவிழாவான இன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து முத்திரிகிணற்றங்கரையில் "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" என்ற கோஷம் முழங்க வைகுண்டசாமி கலிவேட்டையாடினார். இந்நிகழ்ச்சிக்கு பூஜிதகுரு பாலஜனாதிபதி தலைமை வகித்தார். தொடர்ந்து தலைமை பதி அருகே உள்ள செட்டிவிளை, சாஸ்தான்கோயில்விளை,சோட்டபணிக்கன்தேரிவிளை,காமராஜபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக குதிரைவாகனத்தில் வந்த அய்யாவை பக்தர்கள் பூ பழம் போன்ற சுருள்வைத்து வழிபட்டனர். 11ம் திருவிழாவான 27ம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மாலை கலைநிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடக்கிறது

# தினவேல் செய்திகள் # தொடர்ந்து நான்காவது நாளாக குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Image
மணிகுமார் நாகர்கோவில் கன்னியாகுமரி  மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர்  வில்சன் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் நேற்று கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இன்று திருவனந்தபுரம் கரமனை அருகே பேருந்து நிலையம் அருகே கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் தனி படையினர் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து நான்காவது நாளாக குற்றவாளிகளிடம் விசாரணை.   கன்னியாகுமரி மாவட்டம்   களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும்  நாகர்கோவில் நீதி மன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி அருள் முருகன்  முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பத்து நாட்கள் விசாரனைக்காக போலிஸ் காவலில் எடுத்தனர். இரண்டு நாட்கள் நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்தி வந்தனர். நாகர்கோவிலில்   நேற்று முன் தினம் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் கூறியதை தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து தனி படையினர்   அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவருடன் இன்று கேரளா மாநிலம் ஏர்ணா

# தினவேல் செய்திகள் # பெரியார் பற்றி தெரியாமலே படிக்காமலே ரஜினி பேசி வருகிறார்.

Image
மணிகுமார் நாகர்கோவில் பெரியார் பற்றி தெரியாமலே படிக்காமலே ரஜினி பேசி வருகிறார் என்றும் பாஜக எதை சொல்ல வேண்டும் என நினைக்கிறதோ அதை ரஜினி வழியாக நிறைவேற்றி வருவதாகவும், வழக்கு போட்டால் நான் சந்திக்கிறேன் என ரஜினி சொல்வது, புகார் கொடுத்தால் தமிழகத்தில் எந்த காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வார்கள் ? காரணம் இங்கே எடப்பாடி அரசு பாஜக அரசாக செயல்பட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பாவரசு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட   இக் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பாவரசு  செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகளில் தாழ்த்தபட்ட மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க படுவது இல்லை என்றும், ரஜனி பாஜகவின் கைப்பாவையாக திகழ்ந்து வருகிறார்,   பெரியார் பற்றி தெரியாமலே படிக்காமலே ரஜினி பேசி வருகிறார் என்றும் பாஜக எதை சொல்ல வேண்டும் என நினைக்கிறதோ அதை ரஜினி வழியாக நிறைவேற்றி வருவதாகவும், ரஜினியின் இரண்டாவது மகள்

# தினவேல் செய்திகள் # வேலூரில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முயற்சிக்கப்படும் என்று உரம் மற்றும் ரசாயன பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்பி கூறினார்.

Image
வேலூரில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முயற்சிக்கப்படும் என்று உரம் மற்றும் ரசாயன பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்பி கூறினார். தமிழக வேளாண் துறையும் எம் எப் எல் உர நிறுவனமும் இணைந்து கனிமொழி எம்பி தலைமையிலான கதிர் ஆனந்த் வசந்தகுமார் உள்பட 11 பேர் கொண்ட பாராளுமன்ற நிலைக்குழு மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார் எம் எப. எப். எல். முதன்மை மேலாண்மை இயக்குனர் சரவணன் வரவேற்றார் இதில் கனிமொழி எம்பி பேசுகையில் இங்கு உங்களையெல்லாம் சந்தித்து உங்க பிரச்சினைகள் சிரமங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக உருமாற்றும் ரசாயனம் பார்லிமென்ட் நிலைக்குழு வந்துள்ளது உங்கள் பிரச்சினைகளை தயக்கமின்றி சொன்னால்தான் அதை புரிந்துகொண்டு மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி உங்கள் தேவைகளுக்கு தீர்வு காண முடியும் என்று கூறினார் இதில் விவசாயிகள் கூறிய குறைகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் எந்த கடை என்று குறிப்பிட்டு சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை வாட

# DINAVEL NEWS # வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கழக மாநில மகளிர் அணிஅமைப்பாளர் கவிஞர்.கனிமொழி MP.

Image
வேலூர். 24/01/2020 இன்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கழக மாநில  மகளிர் அணிஅமைப்பாளர் கவிஞர்.கனிமொழி MP அவர்களை வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ExMP  அவர்கள் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA அவர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் சால்வை தந்து வரவேற்றார்கள் அவருடன் வேலூர் ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன் அவர்கள் மற்றும்  கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்..

# DINAVEL NEWS # தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் சோதனை.

Image
வேலூர் மாவட்டம்  காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு கிராமம், ஆழ்வார்த்தாங்கல் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து  காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் சோதனை செய்ததில் அப்பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை..

# DINAVEL NEWS # திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் வந்திருந்தார் அவருக்கு மாவட்ட கலெக்டர் சிவன் அருள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Image
திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் வந்திருந்தார் அவருக்கு மாவட்ட கலெக்டர் சிவன் அருள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்