Posts

Showing posts from February, 2020

DINAVEL NEWS - பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது இக்கேவிலில் வருடா வருடம் மயானக்கொள்ளை திருவிழா.

Image
மயானக்கொள்ளை திருவிழா.   கடலூர் மாவட்டம்  வேப்பூர்  அடுத்த காட்டுமயிலூர்    கிராமத்தில் சுமார்  3000 க்கும் மேற்ப்பட்டோர் வசித்து வருகின்றனர்.   இந்த கிராமத்தில் பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது இக்கேவிலில் வருடா வருடம்  மயானக்கொள்ளை திருவிழா   நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில் இந்த வருடம் திருவிழா நேற்று  பெரும் விமர்சையாக நடைபெற்றது.       இத்திருவிழாவில்  பக்தர்கள்     காளி வேடமிட்டு மயானத்தில் வேட்டையாடி வலம் வந்து பின் பொங்கலிட்டு கொண்டாடினார்கள். பின்னர் முக்கிய வீதி  வழியாக     ஊர்வலம் வந்து அம்மனுக்கு தீபாரதனை காட்டி வழிபட்டனர். இதில் ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும்  பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். செய்தியாளர் பாசார் செல்வேந்திரன்.ம

DINAVEL NEWS - கொண்டப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி .

Image
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இணைத் தலைவரும் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் செயலாளரும் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமரச தீர்வு வல்லுனருமான வழக்கறிஞர் திரு சரவணன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் கொண்டப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ட்ரல் சட்டக்கல்லூரி மாணவர்கள் வீதி நாடகம் ஒன்றை 26.2.2020 மாலை 5 மணி அளவில் நடித்து காட்டினார்கள். இந்த வீதி நாடகத்தில் பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பாலியல் ரீதியான வன்முறைகள் பற்றி விளக்கப்பட்டது மேலும் அதிலிருந்து  பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவி பெற அரசு ஏற்படுத்தியுள்ள இலவச உதவி எண், காவலன் செயலி மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் விளக்கப்பட்டது,  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இலவச சட்ட உதவிகளையும் அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்க

DINAVEL NEWS - ஆதித்யா கல்வி அறக்கட்டளையின் முப்பெரும் விழா 2020.

Image
ஆதித்யா கல்வி அறக்கட்டளையின் முப்பெரும் விழா 2020

DINAVEL NEWS - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம் ஆவணக்கோட்டை மேற்கு பள்ளியில் கணித ஆசிரியை திருமதி மேகலா அவர்களுக்கு திசைகளின் சிறந்த ஆசிரியருக்கான C J R மணி ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

Image
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம் ஆவணக்கோட்டை மேற்கு பள்ளியில் கணித ஆசிரியை திருமதி மேகலா அவர்களுக்கு திசைகளின் சிறந்த ஆசிரியருக்கான C J R மணி ஆசிரியர் விருது வழங்கப்பட்டது அனைவரின் சார்பாக நன்றிகள். நமது  அறந்தாங்கி   தினவேல்  நிருபர்A.S சுகுமார்

DINAVEL NEWS - மாவட்ட ஆட்சியாளர் M.பல்லவி பல்தேவ் உத்தரவின் படி போடிநாயக்கனுர் நகராட்சி பேருந்து நிலையத்தில் அத்துமீறி உள்ளே இருந்த இருசக்கர வாகனங்களை போடிநாயக்கனுர் நகராட்சி தொழிலாளர்கள் காவல்துறை உதவியுடன் வாகனங்களை கைப்பற்றினர்.

Image
மாவட்ட ஆட்சியாளர் M.பல்லவி பல்தேவ் உத்தரவின் படி போடிநாயக்கனுர்  நகராட்சி பேருந்து நிலையத்தில் அத்துமீறி உள்ளே இருந்த இருசக்கர வாகனங்களை போடிநாயக்கனுர் நகராட்சி தொழிலாளர்கள் காவல்துறை உதவியுடன் வாகனங்களை கைப்பற்றினர்.

DINAVEL NEWS - திருப்பூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக CAA ஆதரவு பேரணி நடைபெற்றது நிறைவாக மாவட்ட ஆட்ச்சியர் அலுவலகம் நிறைவு பெற்றது இதில் ஆயிரகணக்கில் பரதிய ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டனர் மற்றும் இந்து முன்னனி தொண்டர்களும் கலந்து கொண்டனர்

Image
திருப்பூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக CAA ஆதரவு பேரணி நடைபெற்றது நிறைவாக மாவட்ட ஆட்ச்சியர் அலுவலகம் நிறைவு பெற்றது இதில் ஆயிரகணக்கில் பரதிய ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டனர் மற்றும் இந்து முன்னனி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

DINAVEL NEWS - புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்.

Image
புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்.  ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவு.

DINAVEL NEWS - வரதட்சணை கேட்ட IAS அதிகாரி... அதிர்ந்த மணமகள்...

Image
வரதட்சணை கேட்ட IAS அதிகாரி... அதிர்ந்த மணமகள்... இன்று பேராவூரணி யில் நடைபெற்ற  திரு சிவகுரு_பிரபாகரன் IAS துணை ஆட்சியர் திருநெல்வேலி மாவட்டம் அவர்களின் திருமண விழா வரதட்சணை.... பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே ஐஏஎஸ் அதிகாரியான பிறகு திருமணம் செய்ய வேண்டிய நிலையில்,பல படித்த பெண்களும் IAS,IPS,IRS,படித்த பெண்களும் மணமகளாய் வர தயாராக இருந்தும்,ஒரு மருத்துவரை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தார்.. இதை மனதில் கொண்டு அவர்களுடைய பெற்றோர்கள் மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்த நிலையில் பல மருத்துவம்  படித்த பெண்கள் கிடைத்தும், இவருடைய நிபந்தனைகளை கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.. கடைசியாக சென்னை நந்தனம்_கல்லூரியில் கணித பேராசிரியரின் மகள் செல்வி.Dr_கிருஷ்ணபாரதி. MBBS  அவர் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்த பின் இன்று திருமணம் நடந்தது.இதில் என்ன ஆச்சரியம் என்றால், அவருடைய நிபந்தனை தன்னை திருமணம் செய்துகொள்ளும்  மருத்துவர் வாரத்தில் இரண்டு நாள்..தான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும் சுற்றியிருக்கும் கிராமத்திற்கும

DINAVEL NEWS - திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதியதாக 6வது நீதிமன்ற மாக கூடுதல் சார்பு நீதிமன்றம் திறப்புவிழா.

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதியதாக 6வது நீதிமன்ற மாக கூடுதல் சார்பு நீதிமன்றம் திறப்புவிழா  இன்று 28-02-2020 நடைபெற்றது. பழனி ஒருங்கிணைந்தநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற திறப்புவிழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி மாண்புமிகு M.K.ஜமுனா, M. L. அவர்கள் திறந்து வைத்தார். ஏராளமானோர் பங்கேற்றனர்.

DINAVEL NEWS - கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார்.

Image
கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார்.  உடன் இணை இயக்குனர் மருத்துவர்கள்குபேந்திரன் உதவி இயக்குனர்கள் லதா கஸ்தூரி மோகன் ராஜேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

DINAVEL NEWS - திண்டுக்கல் ரோடு அம்மன் பெட்ரோல் பங்க் அருகில் மினி பஸ் மற்றும் தனியார் பேருந்து மோதி சாலை விபத்து

Image
திண்டுக்கல் ரோடு அம்மன் பெட்ரோல் பங்க் அருகில் மினி பஸ் மற்றும் தனியார் பேருந்து  மோதி சாலை விபத்து டிரைவருக்கு பெரிய அளவில் காயம், மற்றும் 4 பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது 5திற்கும் மேற்பட்டோர் காயம் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதி.

DINAVEL NEWS - வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறுகுறு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

Image
வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறுகுறு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம். கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் தயா. பேரின்பம் தலைமை தாங்கினார். சங்கத்தின் நிர்வாகிகள் பொருளாளர் பாண்டுரங்கன், துணைச் செயலாளர் பழனிச்சாமி, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெல்லிங்டன் நீர்தேக்கத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் மாற்றுப் பயிர்களான பருத்தி சோளம் சாகுபடி செய்து வந்தனர் சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் பயிர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகின இதனால்  தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த  விவசாயிகளுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி நீரை வெலிங்டன் நீர்த்தேக்க பாசன விவசாயிகளின் நலன் கருதி கொண்டு வர வேண்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடிக் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும் மற்றும் அங்கு  பணிபுரியும் பணியாளர்கள் விவசாயிகளிடம் பணம் (லஞ்சம்) பெறுவதற்கான அரசாணை வெளியிடவும்

DINAVEL NEWS - பழனியாண்டவர் படம் சிதைக்கபட்டுள்ளது குற்றவாளிகளை காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும்.

Image
பழனியில் CAA எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் இசுலாமிய பயங்கரவாதிகள் அராஜகம் இந்த பாரதமே வணங்கும்  பழனியாண்டவர் படம் சிதைக்கபட்டுள்ளது குற்றவாளிகளை காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும் ஹிந்து அறநிலைய துறையின் கீழ் மாற்றுமதத்திற்கு எந்த ஒரு டெண்டர் தர அனுமதி இல்லாத பொழுது பழனியில் மட்டும் டெண்டர் தரப்பட்டது எப்படி விதியை மீறுகிறதா தேவஸ்தானம் ?  CAA எதிர்ப்பு போராட்டத்தில் பழனி தேவஸ்தனா வாகனம் எப்படி ? MLA தலைமையில் அராஜகமா பழனி வாழ் புலம்பல்

DINAVEL NEWS - ஆழ்ந்த இரங்கல்கள்:தினமலர் பங்குதாரர் தெய்வதிரு ஆர்.ராகவன் அவர்களின் மனைவியும், தினமலர் ஆசிரியர் டாக்டர் ஆர். ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆன்மிகசெம்மல் திரு. ஆர்ஆர். கோபால்ஜி அவர்களின் தாயாருமான திருமதி ஆர். சுப்புலட்சுமி (77) அவர்கள் 27–02–2020 இன்று மதியம் திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Image
ஆழ்ந்த இரங்கல்கள்: தினமலர் பங்குதாரர் தெய்வதிரு ஆர்.ராகவன் அவர்களின் மனைவியும், தினமலர் ஆசிரியர் டாக்டர் ஆர். ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆன்மிகசெம்மல் திரு. ஆர்ஆர். கோபால்ஜி அவர்களின் தாயாருமான திருமதி ஆர். சுப்புலட்சுமி (77) அவர்கள் 27–02–2020 இன்று மதியம் திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன் திருச்சி தினமலர் அலுவலகம் அருகில் உள்ள அவரது இல்லத்தில் (எண் 2, பறவைகள் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி) 28.02.2020 நாளை(வெள்ளிக்கிழமை) இறுதிச் சடங்குகள் நடைபெறும்....

DINAVEL NEWS - வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் CAA,NPR,NRC ஆகிய சட்டங்களுக்கு எதிராக 9வது நாளாக நோன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image
வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் CAA,NPR,NRC  ஆகிய சட்டங்களுக்கு எதிராக 9வது நாளாக  நோன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வரும் 2ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒட்டுமொத்தமாக சேர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நிற்போம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இன்று  9வது நாளாக போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டு 4:50 மணிக்கு தொடங்கிய நோன்பு பின்னர் மாலை 6 மணிக்கு வடைமா வந்திருந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று ஒன்பதாவது நாள் போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசுகையில் வாணியம்பாடி மக்கள் வேலூர் மக்கள் உங்களோடு இருக்கக்கூடிய என்னை நாடாளும

DINAVEL NEWS - பழனி மக்கள், வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூடுதல் சார்பு நீதிமன்றம் புதிதாக ஏற்படுத்தப்பட்டு நாளை ( 28-02-2020 ) மாண்புமிகு திண்டுக்கல் மாவட்ட நீதிபதி செல்வி M. K. ஜமுனா M. L. அவர்களால் திறந்துவைக்கப்படுகிறது....அனைவரும் வருக.....

Image
பழனி மக்கள், வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூடுதல் சார்பு நீதிமன்றம் புதிதாக ஏற்படுத்தப்பட்டு நாளை ( 28-02-2020 ) மாண்புமிகு திண்டுக்கல் மாவட்ட நீதிபதி செல்வி M. K. ஜமுனா M.L. அவர்களால் திறந்துவைக்கப்படுகிறது.... அனைவரும் வருக.....

DINAVEL NEWS - திருப்பத்தூர் மாவட்ட14 வயதுக்குட்பட்ட போட்டியில் வாணியம்பாடி சேர்ந்த இளம் வீரர் சாதனை.

Image
திருப்பத்தூர் மாவட்ட14 வயதுக்குட்பட்ட  போட்டியில் வாணியம்பாடி சேர்ந்த இளம் வீரர் சாதனை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி   நடைபெற்றது ஆம்பூர் நளினி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கும் மற்றும் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற போட்டியில் 51 பந்துகளை சந்தித்து 50 ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதை பெற்றார் ஆதர்ஷ் பள்ளி மாணவன் முகமது ஆகிப்  பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

DINAVEL NEWS - அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோயில் திருத்தேர் ஓட்டம்

Image
  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம்   எலவனாசூர்கோட்டையில்   திருக்கோவிலூர் மெயின் ரோடு பூசாரி தெருவில்  அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோயில் திருத்தேர் ஓட்டம்  பக்கங்களும் ஊர்  முக்கியஸ்தர்களும்   ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளார்   கட்டளைகரர்களும்  பூசாரிகள் மாவட்ட தலைவர் கோ.பழனிபூசாரி  கலந்து கொண்டு  தேரை வடம் பிடித்து இழுத்தார். கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் தமிழ் நாடு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனிபூசாரி

DINAVEL NEWS - கழுதூர் ஸ்டேட் வங்கியில் இருக்கையில் அமர்ந்து பணி செய்து வரும் வங்கி காவலாளி

Image
கழுதூர் ஸ்டேட் வங்கியில் இருக்கையில் அமர்ந்து பணி செய்து வரும் வங்கி காவலாளி . கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா வேப்பூர் அருகில்  திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை கழுதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில்  பாரத ஸ்டேட் பேங்க் சுமார் 10 ஆண்டுகளுக்கும்  மேலாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது.  வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கும் பணம் செலுத்துவதற்கும் நிறைய  வந்து செல்லுகின்றனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கான சலான் சீட்டு வழங்கப்படுவதில்லை மாறுதலாக ஏடிஎம் கார்டு கொண்டு வந்து பணம் செலுத்துங்கள் என்று அந்த வங்கியில் பணிபுரியும் காவலாளி வாட்ச்மேன் ரமேஷ் பாபு கூறி வருகிறார்.  வங்கிக்கு  படிப்பறிவு இல்லாமல் வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் முதியவர்களிடம் வாட்ச்மென் ரமேஷ் பாபு என்பவர் காரசாரமாக பதில் அளித்து வருகிறார். இதனால் வாடிக்கையாளர்களும் முதியவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் வங்கியில் வெளியே நின்று பணி செய்யக்கூடிய வாட்ச்மேன் வெளியில் நின்று பணி செய்யாமல் வங்கிய

DINAVEL NEWS - பழனியில் மின்தடை

Image

DINAVEL NEWS - விமானத்தில் பறந்த ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவிகள்.

Image
விமானத்தில் பறந்த ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவிகள் JRC நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவிகள் தரண்யா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி இருவரும் 28-02-2020 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் மற்ற மாணவர்களுக்கு  போட்டியில் வெற்றி பெறும் மனப்பான்மையை வளர்க்கவும் அந்த இரு மாணவிகளையும் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்து இருந்தார் ஆயிங்குடியை சேர்ந்த திரு. சங்கர் அவர்கள். இதனையடுத்து இந்த இரண்டு மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியையும் இன்று 27-02-2020 மதியம் 4 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை சென்று அடைந்தனர். மாநில அளவில் நடைபெறும் போட்டிக்காக சென்னைக்கு விமானத்தில் சென்ற மாணவிகளை எண்ணி ஆவணத்தான்கோட்டை ‌ கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 27-02-2020 திருச்சி விமான நிலையத்திலிருந்து நம் ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவ

DINAVEL NEWS - திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையம் அருகில் எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மக்கள்பழனி ஜமாஅத் சார்பாக ஏசிசி எதிர்த்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் பழனி ரயில் நிலையம் அருகே நடந்து கொண்டிருக்கின்றது

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனி  ரயில் நிலையம் அருகில்  எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய  மக்கள்பழனி ஜமாஅத்  சார்பாக  ஏசிசி எதிர்த்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்  பழனி ரயில் நிலையம் அருகே நடந்து கொண்டிருக்கின்றது

DINAVEL NEWS - பின்னலூரில் நடைபெற்ற மனுநீதி முகாமில் கலெக்டர் வெ. அன்புச்செல்வன் பயனாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்கினார். புவனகிரி எம்.எல்.ஏ சரவணன், மருத்துவர்கள் குபேந்திரன், மோகன் உடன் உள்ளனர்.

Image
பின்னலூரில் நடைபெற்ற மனுநீதி முகாமில் கலெக்டர் வெ. அன்புச்செல்வன் பயனாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்கினார். புவனகிரி எம்.எல்.ஏ சரவணன், மருத்துவர்கள் குபேந்திரன், மோகன் உடன் உள்ளனர்.

DINAVEL NEWS - தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பழனி பக்தர்கள் எடுத்து வந்த பறவை காவடி இன்று

Image
தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்  பழனி பக்தர்கள் எடுத்து வந்த பறவை காவடி இன்று

DINAVEL NEWS - திருப்பத்தூர் :வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் CAA,NPR,NRC ஆகிய சட்டங்களுக்கு எதிராக 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image
திருப்பத்தூர் :வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் CAA,NPR,NRC  ஆகிய சட்டங்களுக்கு எதிராக 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் CAA,NPR,NRC  ஆகிய சட்டங்களுக்கு எதிராக 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் வாணியம்பாடியில் இறந்தவர்களுக்கும் வெளிநாட்டில் உள்ளவர்கள் மீதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கலந்துகொண்டதாக வழக்குப்பதிவு விடுதலை சிறுத்தை கட்சி துணை பொதுசெயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேட்டி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இன்று  8வது நாளாக போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டு கைகளில் பதாகைகளை ஏந்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்  தொடர்ந்து     தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர் இன்று போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ்

DINAVEL NEWS - தனி நபர் மசோதா தாக்கலாகிறது

Image
தனி நபர் மசோதா தாக்கலாகிறது இது பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தெரிவித்த மசோதா. "இதர மதங்கள் தன்னிச்சையாக செயல்படும்போது இந்து மதம் மட்டும் அரசு பிடியில் அல்லல் படுவது ஏன்?" என்று சிந்தித்தார்.அதன் தாக்கம் தான் இன்று அவர் மத்திய ஆட்சி பீடத்தில் ஏறிவிட்டதால் மசோதாவாக தாக்கலாகிறது. இந்துக் கோவில்கள் இனிமேல் மத்திய அரசு நியமனம் பண்ணும் தனி வாரியத்திடம் கொடுக்கப்படும். மாநில அரசுகளின் கீழ் இயங்கும் அறநிலயத்துறை,தேவஸ்வம்போர்டு முதலியன யாவையும் கலைக்கப்பட்டுவிடும். உண்மையான சமத்துவம் என்பது எந்த மத விஷயத்திலும் அரசு தலையீடு கூடாது என்ற நீதிமன்ற ஆலோசனைக்கு இணங்க எடுக்கப்படும் முடிவு. வக்ப் போர்டு,கிறுத்துவ டயோஷியஸ் போன்றே தன்னிச்சையாக இயங்கவுள்ள இந்து ஆணையத்திடம் மத்திய அரசு நிர்வாகத்தை ஒப்படைத்துவிடும். எல்லா மாநில அரசுகளும் இந்துக் கோவில் விவகாரங்களிலிருந்து விலகி விடவேண்டும்.இந்துக் கோவில் சொத்துக்கள்,வருமானங்கள் அனைத்தும் இனி மத்திய அரசு நியமிக்கும் ஆணையத்தின்கீழ்தான் வரும்.இந்துக்கோவில் பராமரிப்பு மற்றும் முன்னேற்றத்துக்கே அதன் சொத்துக்களும் வருமானமும் ப

DINAVEL NEWS - அரசு பேருந்து மோதி விபத்து 18 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

Image
அரசு பேருந்து மோதி விபத்து 18 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மாங்குளம் பேருந்து நிலையம் அருகே செம்மறி ஆடுகள்  மேய்ச்சல் முடித்து  விட்டு சாலையை கடக்க முயன்றனர்.  அப்போது  டி என் 30 என் 18 என் கொண்ட அரசு பேருந்து  சேலத்தில் இருந்து சிதம்பரம் சென்றுகொண்டிருந்தபோது மாங்குளம் பேருந்து நிலையம் அருகில்  நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில்  ஆடுகளின் மீது எதிர்பாராத  விதமாக மோதி விபத்துக்குள்ளானது.    இதில் 18 க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இது பற்றி அங்கிருந்தவர்கள் வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வந்த வேப்பூர் போலிஸார் விசாரணை செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாசார் செல்வேந்திரன்

DINAVEL NEWS - பழனியில் மாபெரும் கண்டன பொதுக் கூட்டம்

Image
மாபெரும் கண்டன பொதுக் கூட்டம்

DINAVEL NEWS - திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல் இருந்து விழா தொடங்கியது

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல் இருந்து விழா தொடங்கியது   அருள்மிகு  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உப கோவிலான மாரியம்மன் கோவில் கோவிலின் உடைய ஆணையர் இணை ஆணையர் பழனி நகர காவல் உயர் அதிகாரிகளும்  கோவிலின் உடைய  பட்டைய பரம்பரை அறங்காவலர் ஊர் பண்ணாடி மற்றும்  பழனி சுற்றியுள்ள  ஊர்கள்  மானூர்  நெய்க்காரப்பட்டி ஆ கலையா முத்தூர் அக்ரஹாரம்  சண்முகநதி நகர்  கோதைமங்கலம்  மற்றும் பழனி நகரம்  ஆயக்குடி  புது ஆயக்குடி கணக்கன்பட்டி தொப்பம்பட்டி  பொருளூர்  புளியம்பட்டி மருத்துவ நகர் திருநகர் பெரியப்பா நகர் பழனி அண்டர் நகர் அனைத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு  25.2.2020 இரவு சரியாக 11.00 மணி அளவில் பழனி நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வையாபுரி குளத்திலிருந்து அம்மனுடைய  கம்பம் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் உடைய காணியாள கவுண்டர் அவர்களும் ஊர் பொதுமக்களும் கம்பத்தை தோளில் சுமந்து கோவிலில் கம்பம் சாத்துதல் அதிகாலை 4.00 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும்  கோயில் நிர்வாகம் அறிவிப்பு

DINAVEL NEWS - லஞ்சம் கேட்ட சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயப்பிரபா மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட கார்த்திக் ஆகிய இருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

Image
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விவசாயியின் மகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்காக லஞ்சம் கேட்ட சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயப்பிரபா மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட கார்த்திக் ஆகிய இருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.  தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பரிந்துரை செய்ய 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விருத்தாசலம் சமூக நல திட்ட விரிவாக்க அலுவலர் ஜெயபிரபாவை லஞ்ச ஒழிப்பு போலிசார் கைது செய்தனர்

தினவேல் செய்திகள் - கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திட்டக்குடி நகரில் மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 72 வது பிறந்த நாள் விழா.

Image
கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திட்டக்குடி நகரில் மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 72 வது பிறந்த நாள் விழா. கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகரில்  மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் கலந்துகொண்டு திட்டக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் புகைப்படத்திற்கு  மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  திட்டக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் அம்மா பொதுக்கூட்ட அரங்கத்தினை திறந்து வைத்து அங்கு நடை பெற்ற நிகழ்ச்சியில்  மூன்றாயிரம்   பேருக்கு சலவை பெட்டி, தையல் எந்திரம், விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி அன்னதானம் செய்தனர்  அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால்  பழங்கள் பிரட்  உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது.  பின்னர் மாவட்ட  மருத்துவ அணி சார்பில் நடத்தப்பட்ட பொதுமருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்  இதில் விருத்தாச்சலம் அதிமுக சட்ட

தினவேல் செய்திகள் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் வருகை

Image
பெருமாநல்லூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு 22-2-2020 ஞாயிறு மதியம் 2 மணிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் வருகை தந்து தான் திறந்து வைத்த பள்ளியை பார்வையிட்டு பள்ளியை ஆய்வு செய்து பள்ளியை நன்றாக வைத்துள்ளீர்கள் என்று பாராட்டி விட்டு, மாணவிகள் அனைவரும் நன்றாகப்படித்து , இப்பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறி,இந்த வருடமே இப்பள்ளியை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி விரைவில் உத்தரவிடுவதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயகுமார் அவர்கள், பள்ளி ஆசிரியைகள்,பள்ளி வளர்ச்சி குழு டாக்டர் கோவிந்தராஜ்,உத்தமேஸ்வரன்,  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருமதி சரஸ்வதி, முன்னாள் மாணவர்கள் அமைப்பு திரு செந்தில் குமார், முன்னாள்  அமைச்சர் உயர்திரு எம் எஸ் ஆனந்தன், ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர், பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.  கிருஷ்ணவேணி, ஈட்டீவீரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி  சிவசாமி மற்றும் முருகேஷ், காளிமுத்து, மோகன்ராஜ், ராசப்பன், செந்தில் உட்பட பலர் கலந்த

தினவேல் செய்திகள் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

Image
பழனி ஊராட்சி ஒன்றியம் பெரியம்மாபட்டி ஊராட்சி  உட்கிடை கிராமமான  புளியம்பட்டியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை  சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு  அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி உயர் திரு.சார் ஆட்சியர் அவர்களின்  தலைமையிலும், உயர் திரு. வட்டாட்சியர் மற்றும் பெரியம்மா பட்டி ஊராட்சிமன்றதலைவர்* G.சதிஷ் குமார் B.A., அவர்களின் முன்னிலையிலும் சிறப்பு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் மற்றும்  மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சி பழனி ஒன்றிய துணை பெருந்தலைவர்  கோபாலகிருஷ்ணன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

தினவேல் செய்திகள் - பாலசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாய்வுதளம் அமைக்க TARATDAC சார்பில் வலியுறுத்தல்

Image
பாலசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாய்வுதளம் அமைக்க TARATDAC சார்பில் வலியுறுத்தல்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பாலசமுத்திரம் கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் இல்லாமல் இருக்கிறது. இதனால் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமின்றி பிரசவம் மற்றும் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாய்வுதளம் பழுதாகியுள்ளது. மேற்கண்ட இரண்டு பணிகளையும் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் செய்து கொடுக்க வேண்டும்  ஊர் பொதுமக்கள்

தினவேல் செய்திகள் - எங்கு பார்த்தாலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் இல்லாமல் இருக்கிறது.

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா தும்பலப்பட்டி கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக்கடை, பஞ்சாயத்து அலுவலகம், நூலகம் என எங்கு பார்த்தாலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் இல்லாமல் இருக்கிறது. இதனால் மேற்கண்ட இடங்களுக்கு செல்லும் அனைவருமே குறிப்பாக நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கண்ட அனைத்து இடங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து கொடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது ஊர் பொதுமக்கள்

தினவேல் செய்திகள் - பழனியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் ஒரு வாரத்தில் திறப்பு

Image
பழனியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் ஒரு வாரத்தில் திறப்பு... TARATDAC சங்கத்தின் பத்தாண்டு கால போராட்டம் மாபெரும் வெற்றி... தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திரனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பழனியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் அமைக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தோம். தொடர் போராட்டத்தின் பலனாக கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் அமைக்க 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. நிதி ஒதுக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும் காப்பகம் துவங்க மாற்றுத்திரனாளிகள் நலத்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வருகிற 25.02.2020 அன்று பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உடனடியாக பழனியில் மனநல காப்பகம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.  போராட்ட அறிவிப்பை ஒட்டி இன்று (21.02.2020) மாலை 05.00 மணிக்கு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு சார் ஆட்சியர் சார்பில் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அ

DINAVEL NEWS - பழனி மாரியம்மன் கோவில் கம்பம் செதுக்கும் பணி தற்சமயம் நடந்து கொண்டிருக்கின்றது இரவு 11.00 மணி அளவில் இன்று கம்பம் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் சாற்றப்படும்

Image
பழனி மாரியம்மன் கோவில் கம்பம் செதுக்கும் பணி தற்சமயம் நடந்து கொண்டிருக்கின்றது இரவு 11.00 மணி அளவில் இன்று கம்பம் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் சாற்றப்படும்

தினவேல் செய்திகள் -' சரக்குக்கு மிக்ஸிங் செய்ய தண்ணி கொடு ’ - குடிமகன்களின் தொந்தரவால் பள்ளிக்குச் செல்ல அஞ்சும் மாணவர்கள்

Image
' சரக்குக்கு மிக்ஸிங் செய்ய தண்ணி கொடு’ - குடிமகன்களின் தொந்தரவால் பள்ளிக்குச் செல்ல அஞ்சும் மாணவர்கள் சென்னை அசோக்நகரில் பள்ளிக்கு அருகில் மதுபானக் கடை இருப்பதால் குடிமகன்கள் தொல்லைக் கொடுப்பதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  சென்னை அசோக்நகரில் ஜி.ஆர்.டி மகாலட்சுமி வித்யாலயா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு அருகில் 7-வது அவென்யூவில்அரசு மதுபானக் கடை உள்ளது.  தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் கல்வி நிறுவனங்கள் அருகே 50 மீட்டர் தொலைவவிற்கு மதுபானக் கடை அமைக்கக்கூடாது.  எனவே, இந்தக் கடையை அகற்றக்கோரி பள்ளி நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புகார் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளி மாணவன் விஷால் கூறுகையில், ’பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, டாஸ்மாக் கடை முன்பு ரோட்டில் நின்றுகொண்டே பலரும் மது அருந்துவதோடு, பலரும் போதையில் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துவதால் அந்த பகுதியைக் கடந்து வரமுடிவதில்லை.  மேலும் சிலர் சரக்கு மிக்ஸிங் செய்ய தண்ணீர் பாட்டிலை கொடு, சரக்கு வாங்க காசு கொடு என்கின்

Dinavel News - அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணிகள்திட்ட சிறப்புமுகாம் இன்று காலை நெய்க்காரபட்டி கே. வேலுலரில் நடைபெற்றது.

Image
அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணிகள்திட்ட சிறப்புமுகாம் இன்று காலை நெய்க்காரபட்டி கே. வேலுலரில்  நடைபெற்றது.  அதுசமயம் நலப்பணியில் ஈடுபட்ட கல்லூரிமாணவிகளுக்கும் இதில் கலந்துகொண்ட ஊ.ஒ..ந.பள்ளி கே.வேலூர் பள்ளி மாணவ மாணவியருக்கும் ஆரோக்கிய வாழ்வின் முக்கியத்துவம் பற்றியும் கொரோனா  விழிப்புணர்வு பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது  பின்பு நாட்டுநலத்திட்ட மாணவிகள்  உதவியுடன் வீடு வீடாக மற்றும் கடைகளுக்கும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது இந்த நலப்பணியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள்Mrs. V. வனிதா. முனைவர் க.மகேஸ்வரி முனைவர் இரா.வசந்தி மற்றும் ஊ.ஒ.ந.பள்ளி கே.வேலூர் தலைமை ஆசிரியர் D.கார்த்திகேயாயினி பட்டாதாரி ஆசிரியர்காள் V.ரவிச்சந்திரன் R. யாமினிபூர்ணதிலகம்  பள்ளி மாணவர்கள் 90 பேரும் நாட்டு நலத்திட்ட மாணவிகள் 100 பேரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்