# DINAVEL NEWS # கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு பெற்ற அருள் மிகு நாகராஜா கோவிலில் தை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்சியான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இவ் விழாவினை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.



மணிகுமார்
நாகர்கோவில்


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 2  ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு பெற்ற அருள் மிகு நாகராஜா கோவிலில் தை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்சியான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இவ் விழாவினை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.  
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்து பெற்ற கோவிகளில் நாகர்கோவிலில் அருள் மிகு நாகராஜா கோவில்  2  ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு பெற்ற  கோவிலாகும். இக் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தை பெருந்திரு விழா பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாட படுத்தது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான தை பெருந்திரு விழா கடந்த 31 ஆம் தேதி  கொடியற்றதுடன் தொடங்கியது. பத்து நாட்கள் விழாவில் ஒவ்வொரு நாளும் புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளல், மண்டகப்படி, சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற உள்ளன.  ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று விழாவின் முக்கிய நிகழ்சியான தேரோட்டம் நடைபெற்றது. கோவிலில் இருந்து சுவாமி விக்ரகங்கள் பல்லாக்கில் கொண்டு வரபட்டு பின்னர் தேரில் ஸ்வாமிகள் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து வருகை தந்த ஏராளமான  மக்கள்  வடம் பிடித்து தேரை இழுத்தனர்.  பத்தாம் நாள் திருவிழாவான நாளை சுவாமி ஆராட்டு நிகழ்சியுடன்  திருவிழவும் நிறைவு பெரும். இன்றைய தேர் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா