DINAVEL NEWS - திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பேர்ணாம்பட்டு ஒன்றியம் 26ஊராட்சிகளை மாதனூர் ஒன்றியத்தில் சேர்க்கும் தமிழக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பேர்ணாம்பட்டு ஒன்றியம் 26ஊராட்சிகளை மாதனூர் ஒன்றியத்தில் சேர்க்கும் தமிழக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டமாக மூன்றாகப் பிரிக்கப்பட்டது இதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு ஒன்றியத்தில் 51 ஊராட்சிகளை 26 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளது வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் இருக்கும் 25 ஊராட்சிகளில் மோர்தனா ஊராட்சியை குடியாத்தம் ஒன்றியத்தில் சேர்த்துவிட்டு 24 ஊராட்சிகளை மட்டுமே உள்ள பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் தொடர்ந்து விட அரசு முடிவு செய்துள்ளது ஆனால் அரங்கல்தூர்கம், கதவாளம், கரும்பூர், குமரமங்கலம், வீராங்குப்பம், மேல் சான்றோர் குப்பம், மலையாம்பட்டு, வடகரை பார்சனாபள்ளி, வடசேரி, கொல்லகுப்பம், சின்னபள்ளிகுப்பம், வெங்கடசமுத்திரம், கைலாசகிரி,நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், பெரியவரிகம், சின்ன வரிகம் 26 ஊராட்சி ஒன்றிய பகுதிகளை முறையில்லாமல் அருகாமையிலுள்ள மாதனுர் ஒன்றியத்தில் சேர்த்துவிட அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதைக் கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பேர்ணம்பட்டு ஒன்றியம் துத்திப்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக இன்று தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்
Comments
Post a Comment