# DINAVEL NEWS # ஜப்பானில் குடும்ப கட்டுபாடு திட்டத்தை தீவீரபடுத்தியதால் தற்போது அந்த நாட்டில் இளங்கர்கள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது.



மணிகுமார்
நாகர்கோவில்


ஜப்பானில் குடும்ப கட்டுபாடு திட்டத்தை தீவீரபடுத்தியதால் தற்போது அந்த நாட்டில் இளங்கர்கள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. பொறியியல் சார்ந்த பணியிடங்களுக்கு இந்தியவில் உள்ள  பொறியியல் பட்டதாரி இளங்கர்களுக்கு அந்த வேலை வாய்ப்புகளை வழங்க தயாராக இருப்பதாக  கன்னியாகுமரி அருகே பொறியியல் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக பதிவாளர் டாக்ட்ர் சந்தோஸ் பாபு செய்தியாளர்களிடம் கூறினார்.
கன்னியாகுமரி அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் 15  வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கல்லூரி தாளாளர் கிருஷ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் உறுபினராக இருந்த விஜயேந்திர அகர்வால், மற்றும் தமிழகத்தில் உள்ள பலவேறு பல்கலைகழக துணை வேந்தர்கள், மாணவ மாணவியர்கள்  உட்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர். இதில் விஜயேந்திர அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்கா நிறுவனங்கள், இந்திய இளங்கர்களிடம் கல்வி தகுதியோடு கூட்டாக வேலை செய்வதையும், மொழி ஆளுமையும், கடும் உழைப்பையும் எதிர்பார்கின்றனர் என்றும், தற்போது கம்ப்யூட்டர் படித்த படதாரிகளுக்கு அதனை சார்ந்த ரோபோடிக்ஸ் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது அதிலும் உலகமயமாக்களுக்கு பின்னர் அமெரிக்காவில் இந்திய இளங்கர்களின் தேவை அதிகரித்து உள்ளது என கூறினார். விழாவில் சிறப்பு விருந்துனராக கலந்து கொண்ட   நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக பதிவாளர் டாக்ட்ர் சந்தோஸ் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜப்பானில் குடும்ப கட்டுபாடு திட்டத்தை தீவீரபடுத்தியதால் தற்போது அந்த நாட்டில் இளங்கர்கள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. பொறியியல் சார்ந்த பணியிடங்களுக்கு இந்தியவில் உள்ள  பொறியியல் பட்டதாரி இளங்கர்களுக்கு அந்த வேலை வாய்ப்புகளை வழங்க தயாராக இருப்பதாகவும்,    உலக அளவில் பார்க்கும் போது, ஒரு  மிலியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கி வருவதாகவும், உலக அளவில் தொழில் நுட்பங்கள், வேலை வாய்ப்புகளுக்கான படிப்புகள் பற்றி தமிழக மாணவர்கள் தெரிந்து கொள்ள அமெரிக்கா , ஐரோப்பா உள்ளிட்ட 20  நாட்டு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் க்ளோபல் கண்காட்சி வரும்  செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாகவும் இதனை தமிழக மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள அரிய வாய்ப்பு என்றும்  அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா