தினவேல் செய்திகள் - கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திட்டக்குடி நகரில் மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 72 வது பிறந்த நாள் விழா.


கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திட்டக்குடி நகரில் மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 72 வது பிறந்த நாள் விழா.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகரில்  மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் கலந்துகொண்டு திட்டக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் புகைப்படத்திற்கு  மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

திட்டக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் அம்மா பொதுக்கூட்ட அரங்கத்தினை திறந்து வைத்து அங்கு நடை பெற்ற நிகழ்ச்சியில்  மூன்றாயிரம்   பேருக்கு சலவை பெட்டி, தையல் எந்திரம், விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி அன்னதானம் செய்தனர்  அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால்  பழங்கள் பிரட்  உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது.

 பின்னர் மாவட்ட  மருத்துவ அணி சார்பில் நடத்தப்பட்ட பொதுமருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்  இதில் விருத்தாச்சலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செல்வேந்திரன்.ம

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.