DINAVEL NEWS - விமானத்தில் பறந்த ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவிகள்.



விமானத்தில் பறந்த ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவிகள்

JRC நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவிகள் தரண்யா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி இருவரும் 28-02-2020 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் மற்ற மாணவர்களுக்கு  போட்டியில் வெற்றி பெறும் மனப்பான்மையை வளர்க்கவும் அந்த இரு மாணவிகளையும் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்து இருந்தார் ஆயிங்குடியை சேர்ந்த திரு. சங்கர் அவர்கள். இதனையடுத்து இந்த இரண்டு மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியையும் இன்று 27-02-2020 மதியம் 4 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை சென்று அடைந்தனர். மாநில அளவில் நடைபெறும் போட்டிக்காக சென்னைக்கு விமானத்தில் சென்ற மாணவிகளை எண்ணி ஆவணத்தான்கோட்டை ‌ கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று 27-02-2020 திருச்சி விமான நிலையத்திலிருந்து நம் ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவிகள் தரண்யா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி நாளை நடக்கவிருக்கும் JRC மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க விமானம் மூலம் சென்னை சென்று அடைந்தனர்.


 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து A.S. சுகுமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.