# DINAVEL NEWS # நீலகிரி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 4.2.2020 அன்று அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட்டது.




தேவர்சோலை மேல்நிலைப் பள்ளியில்  அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா



 நீலகிரி  மாவட்டம்  அரசு மேல்நிலைப்பள்ளியில் 4.2.2020 அன்று அறிவுத் திறன் வகுப்பறை  துவங்கப்பட்டது.  இப்பள்ளியில் சுமார் 450 மாணவ மாணவியர்கள் படித்துக் கொண்டு வருகிறார்கள் . இப்பள்ளியில்   சென்னை - திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை  சார்பில் அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது மேலும் திரு நூருல்லா அவர்களால் பொருத்தப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதை பயன்படுத்தும் விதம் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது சிறப்பு விருந்தினராக  கூடலூர் தாசில்தார்  திருமதி சங்கீதா அவர்கள் கலந்துகொண்டு  இதைத் திறந்து வைத்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும்   இவ்விழாவை சிறப்பாக நடத்தினர் இதைப்பற்றி மாணவர்கள் தெரிவிக்கும்போது சரியான படிக்கத் தேவையான வசதி இல்லாமல் படிக்கும் ஏழை மலைவாழ் கிராம மாணவர்களாகிய எங்களுக்கு மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த அறிவுத் திறன் வகுப்பறையை வழங்கிய  சமூகநல அறக்கட்டளைக்கு நன்றி என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர் இறுதியாக பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஆனந்தி குமாரி அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் இதை வழங்கிய அறக்கட்டளை நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார்


தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா