தினவேல் செய்திகள் - ஊதிய உயர்வு மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.



மணிகுமார்
நாகர்கோவில்




ஊதிய உயர்வு மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து  கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 கோட்டங்களுக்கு உட்பட்ட ஒன்பது டிவிசெனல்களில் பணிபுரியும் அனைத்து தொழிற்சங்க அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட்டத்தில்  ஈடுபட உள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு அரசுக்கு 3  கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் நாகர்கோவிலில் அனைத்து தொழிற்சங்க ஒருகிணைப்பு குழு அறிவிப்பு.
      தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தான் அரசு ரப்பர் கழகம் இயங்கி வருகிறது. இங்கு நான்கு கோட்டங்களுக்குட்பட்ட 9 டிவிஷன் களில் 3500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் வெட்டும் மற்றும் இதர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு குறித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளுடனும் மற்றும் அமைச்சர்களுடனும் 46 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் தரப்பில் 100 ரூபாய் கூடுதலாக ஊதியம் கேட்கப்பட்டது ஆனால் அரசு தரப்பில் 23 ரூபாய் இடைக்கால ஊதிய உயர்வாக அறிவிக்கப்பட்டது பின்னர் சட்டசபையில் இது குறித்து பேசிய பின்னர் கூடுதல் உயர்வு ஊதிய உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று அரசு அறிவித்ததால் அப்போது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த படி ஊதிய உயர்வு அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து கடைசி கட்டமாக நேற்று முன்தினம் நாகர்கோவிலில் இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அனைத்து தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இணைந்து நாளை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது இதன்படி நாளை முதல் அரசு ரப்பர் தோட்டங்களில் பால் வெட்டு மற்றும் அனைத்து பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு அரசுக்கு 3  கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் நாகர்கோவிலில் அனைத்து தொழிற்சங்க ஒருகிணைப்பு குழு அறிவிப்பு.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா