தினவேல் செய்திகள் - தலித் இளைஞரை வட இந்திய மாநிலங்களில் நடப்பது போன்று தமிழகத்திலும்அடித்துக்கொலை செய்த சாதி ஆதிக்கவாதிகள்.


செஞ்சி அருகே மலம் கழிக்க சென்ற தலித் இளைஞரை வட இந்திய மாநிலங்களில் நடப்பது போன்று தமிழகத்திலும்அடித்துக்கொலை செய்த சாதி ஆதிக்கவாதிகள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த காரை கிராமத்தை சேர்ந்தவர் #சக்திவேல்(26). இவர் விழுப்புரம் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் தனது வீட்டிலிருந்து பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது செ.புதூர் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதி அருகே மலம் கழிப்பதற்காக ஆடையை கழட்டி உள்ளார். அப்போது அருகில் உள்ள வயலில் வேலை செய்திருந்த பெண்மணி தவறாக நினைத்து கத்தி கூச்சலிட்டு அருகிலிருந்தவர்கள் மற்றும் உறவினர்களையும் அழைத்துள்ளார். இதனிடையே பயந்து அங்கிருந்து ஓடிய சக்திவேலை விரட்டிச் சென்று பிடித்து கை கால்களை கட்டி எந்த சாதி என்று கேட்டுள்ளார்கள் காரைக்கால் என்று சொன்னவுடன் சாதி ஆதிக்கத் தோடுதாக்கியுள்ளனர். இதில் சக்திவேலுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அங்கு வந்த பெரியதச்சூர் காவல் உதவி ஆய்வாளர் வினோத் காயமடைந்த #சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல் நாளைக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி உள்ளார். அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற சக்திவேல் வீட்டுக்குச் சென்ற உடனே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

#சக்திவேல் தவறே செய்திருந்தாலும் சட்டத்தை கையில் எடுத்து அவரை தாக்கியது சரியா??

அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் வினோத் ரத்த காயத்துடன் இருந்த சக்திவேல் மருத்துவமனைக்கு அனுப்பாமல் நாளைக்கு விசாரணைக்கு ஆஜராக சொல்லியது சரியா??

சக்திவேலை தாக்கியவர்கள் மீதும் துரித நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளர் #வினோத் மீதம் எவ்வித பாரபட்சமின்றி விழுப்புரம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா??

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.