DINAVEL NEWS - கொண்டப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி .



தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இணைத் தலைவரும் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் செயலாளரும் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமரச தீர்வு வல்லுனருமான வழக்கறிஞர் திரு சரவணன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் கொண்டப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ட்ரல் சட்டக்கல்லூரி மாணவர்கள் வீதி நாடகம் ஒன்றை 26.2.2020 மாலை 5 மணி அளவில் நடித்து காட்டினார்கள்.

இந்த வீதி நாடகத்தில் பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பாலியல் ரீதியான வன்முறைகள் பற்றி விளக்கப்பட்டது மேலும் அதிலிருந்து  பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவி பெற அரசு ஏற்படுத்தியுள்ள இலவச உதவி எண், காவலன் செயலி மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் விளக்கப்பட்டது,  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இலவச சட்ட உதவிகளையும் அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
 இந்நிகழ்ச்சிக்கு மாண்புமிகு சார்பு நீதிபதி மற்றும் சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
செயலாளர்  திரு சக்திவேல் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், ஊர் பொதுமக்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள், சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள்  திரளாக பங்கேற்றனர், உதவி பேராசிரியர் திரு.சாஜ் அவர்கள் முழு நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சி அரசு ஏற்படுத்தியுள்ள பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை தெரிந்து கொள்ளவும் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சட்ட உதவிகளை பற்றி அறிந்து கொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக ஊர் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

 தினவேல் செய்திகளுக்காக சேலம்தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா