DINAVEL NEWS - வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறுகுறு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.
வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறுகுறு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைவர் தயா. பேரின்பம் தலைமை தாங்கினார்.
சங்கத்தின் நிர்வாகிகள் பொருளாளர் பாண்டுரங்கன், துணைச் செயலாளர் பழனிச்சாமி, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெல்லிங்டன் நீர்தேக்கத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் மாற்றுப் பயிர்களான பருத்தி சோளம் சாகுபடி செய்து வந்தனர் சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் பயிர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகின இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
காவிரி நீரை வெலிங்டன் நீர்த்தேக்க பாசன விவசாயிகளின் நலன் கருதி கொண்டு வர வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடிக் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும் மற்றும் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் விவசாயிகளிடம் பணம் (லஞ்சம்) பெறுவதற்கான அரசாணை வெளியிடவும் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் சங்கத்தின் கிளை நிர்வாகிகள் குருசாமி கலியன் வீரராஜன் செல்வம் பழனிவேல் தனசேகர் பிரபாகர் வைத்தியலிங்கம் பொன்மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மணு வட்டாட்சியர் செந்தில்வேல் இடம் கொடுத்தனர்.
Comments
Post a Comment