DINAVEL NEWS - கழுதூர் ஸ்டேட் வங்கியில் இருக்கையில் அமர்ந்து பணி செய்து வரும் வங்கி காவலாளி
கழுதூர் ஸ்டேட் வங்கியில் இருக்கையில் அமர்ந்து பணி செய்து வரும் வங்கி காவலாளி.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா வேப்பூர் அருகில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை கழுதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் பாரத ஸ்டேட் பேங்க் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
இந்த வங்கியில் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கும் பணம் செலுத்துவதற்கும் நிறைய வந்து செல்லுகின்றனர்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கான சலான் சீட்டு வழங்கப்படுவதில்லை மாறுதலாக ஏடிஎம் கார்டு கொண்டு வந்து பணம் செலுத்துங்கள் என்று அந்த வங்கியில் பணிபுரியும் காவலாளி வாட்ச்மேன் ரமேஷ் பாபு கூறி வருகிறார்.
வங்கிக்கு படிப்பறிவு இல்லாமல் வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் முதியவர்களிடம் வாட்ச்மென் ரமேஷ் பாபு என்பவர் காரசாரமாக பதில் அளித்து வருகிறார்.
இதனால் வாடிக்கையாளர்களும் முதியவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் வங்கியில் வெளியே நின்று பணி செய்யக்கூடிய வாட்ச்மேன் வெளியில் நின்று பணி செய்யாமல் வங்கியின் உள்ளே இருக்கையில் அமர்ந்து பணி செய்து வருகிறார்.
அவர் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெற்று எண்ணுவது மற்றும் புதிதாக அக்கவுண்ட் செய்ய வருபவர்களிடம் விண்ணப்ப படிவம் வழங்குவது அதற்கான ஆதாரங்களை சோதனை செய்து போன்ற நிகழ்வுகள் செய்து வருகிறார்.
இவர் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மிரட்டும் பாணியில் பதிலளித்து வருகிறார்.
இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர் அதோடு வாடிக்கையாளர்களின் பணிகளை சரியான முறையில் முடித்து தருவதில்லை மற்றும் அலைக்கழித்து வருகின்றனர்.
இந்த வங்கியில் வாட்ச்மேன் ரமேஷ்பாபு வங்கி மேலாளர் போல் செயல்பட்டு வருகிறார் இவரை வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.
இவர் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் வாடிக்கையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Comments
Post a Comment