தினவேல் செய்திகள் - பழனியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் ஒரு வாரத்தில் திறப்பு



பழனியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் ஒரு வாரத்தில் திறப்பு...

TARATDAC சங்கத்தின் பத்தாண்டு கால போராட்டம் மாபெரும் வெற்றி...

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திரனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பழனியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் அமைக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தோம். தொடர் போராட்டத்தின் பலனாக கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் அமைக்க 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. நிதி ஒதுக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும் காப்பகம் துவங்க மாற்றுத்திரனாளிகள் நலத்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வருகிற 25.02.2020 அன்று பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உடனடியாக பழனியில் மனநல காப்பகம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். 

போராட்ட அறிவிப்பை ஒட்டி இன்று (21.02.2020) மாலை 05.00 மணிக்கு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு சார் ஆட்சியர் சார்பில் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் சங்கத்தின் பழனி நகர தலைவர் காளீஸ்வரி தலைமையில் நகர செயலாளர் தங்கவேல், நகர பொருளாளர் வெள்ளியங்கிரி, மாவட்ட செயலாளர் பகத்சிங் ஆகியோரும் பழனி காவல்றை துணைக் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன், நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு செந்தில் குமார் மற்றும் பழனி தாசில்தார் திரு.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பழனி தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் அமைக்க இன்னும் ஓராண்டு காலத்திற்குள் புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை தற்காலிகமாக பழனியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சத்திரப்பட்டி அருகில் உள்ள ரெட்டியபட்டி என்னும் கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகத்தை இன்னும் ஒரு வார காலத்திற்குள் அரசின் சார்பில் திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. சார் ஆட்சியர் அளித்த மேற்கண்ட வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை 25.02.2020 அன்று நடத்த இருந்த போராட்டத்தை விலக்கிக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. 

சங்கத்தின் கடுமையான முயற்சியின் பலனாக பழனிக்கு அருகில் மனநல காப்பகம் அமைக்க உத்தரவிட்ட தமிழக அரசிற்கும், மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், பத்திரிக்கை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

A.காளீஸ்வரி – நகர தலைவர்
P.தங்கவேல் – நகர செயலாளர்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், பழனி

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா