DINAVEL NEWS - தனி நபர் மசோதா தாக்கலாகிறது



தனி நபர் மசோதா தாக்கலாகிறது


இது பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தெரிவித்த மசோதா.
"இதர மதங்கள் தன்னிச்சையாக செயல்படும்போது இந்து மதம் மட்டும் அரசு பிடியில் அல்லல் படுவது ஏன்?" என்று சிந்தித்தார்.அதன் தாக்கம் தான் இன்று அவர் மத்திய ஆட்சி பீடத்தில் ஏறிவிட்டதால் மசோதாவாக தாக்கலாகிறது.

இந்துக் கோவில்கள் இனிமேல் மத்திய அரசு நியமனம் பண்ணும் தனி வாரியத்திடம் கொடுக்கப்படும்.
மாநில அரசுகளின் கீழ் இயங்கும் அறநிலயத்துறை,தேவஸ்வம்போர்டு முதலியன யாவையும் கலைக்கப்பட்டுவிடும்.

உண்மையான சமத்துவம் என்பது எந்த மத விஷயத்திலும் அரசு தலையீடு கூடாது என்ற நீதிமன்ற ஆலோசனைக்கு இணங்க எடுக்கப்படும் முடிவு.

வக்ப் போர்டு,கிறுத்துவ டயோஷியஸ் போன்றே தன்னிச்சையாக இயங்கவுள்ள இந்து ஆணையத்திடம் மத்திய அரசு நிர்வாகத்தை ஒப்படைத்துவிடும்.

எல்லா மாநில அரசுகளும் இந்துக் கோவில் விவகாரங்களிலிருந்து விலகி விடவேண்டும்.இந்துக் கோவில் சொத்துக்கள்,வருமானங்கள் அனைத்தும் இனி மத்திய அரசு நியமிக்கும் ஆணையத்தின்கீழ்தான் வரும்.இந்துக்கோவில் பராமரிப்பு மற்றும் முன்னேற்றத்துக்கே அதன் சொத்துக்களும் வருமானமும் பயன்படுத்தப்படும்.

இது ஒரு நல்ல திருப்பம்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா