தினவேல் செய்திகள் - முதல்முறையாக போக்குவரத்துக்கு பிரிவு போலிசார்களுக்கு 35 பாடி கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.



மணிகுமார்
நாகர்கோவில்


கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்கவும் தலைகவசம் அணிந்து இரு சக்கர வாகனணலில் வந்து வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில்   முதல்முறையாக போக்குவரத்துக்கு பிரிவு போலிசார்களுக்கு  35 பாடி கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தனர்.
       கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அதிக வேகம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் 65 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும்,  தலைகவசம் அணிந்து இரு சக்கர வாகனணலில் வந்து வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் எஸ்பி தெரிவித்துள்ள நிலையில் இன்று முதல் முறையாக 35 பாடி கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த இந்த செயல்பாடு துவக்க விழாவில்  ஆட்சியர் பிரசாந்த் வட நேரே , போலீஸ் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கேமராக்கள் போக்குவரத்து ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அளவிலான அதிகாரிகள் தோள்பட்டையில் பொருத்தப்பட்டிருக்கும் இதன்படி அதிகமாகவோ அல்லது ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களை எளிதில் மடக்கி பிடித்து அபராதம் விதிக்க ஏதுவாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 5 மீட்டர் தொலைவில் வரைக்கும் இந்த கேமரா இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஐ படம் பிடிக்கும். 32 ஜிபி கொள்ளவு கொண்ட இந்த கேமரா மூலம் இருசக்கர வாகனங்களில் விதிகளை மீறுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா