DINAVEL NEWS - விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே ஷோ் ஆட்டோவில் கடத்தமுயன்ற 500 எண்ணிக்கை கொண்ட அந்நிய மது பானபாட்டில்கள் பறிமுதல்.


விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே ஷோ் ஆட்டோவில் கடத்தமுயன்ற 500 எண்ணிக்கை கொண்ட அந்நிய மது பானபாட்டில்கள் பறிமுதல்

09-02-20 மாலை சுமார் 06.30 மணியளவில்விழுப்புரம் மத்திய புலனாய்வு புலனாய்வு பிரிவு தலைமை காவலர் திரு.குமரன் அவா்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்  போில் விழுப்புரம் மது அமலாக்க பிாிவு ஆய்வாளர் திரு  ரேணுகா தேவி தலைமையில் காவலர் களுடன்  விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு தலைமை காவலர் 1793 திரு குமரன் இணைந்து  விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து அதி வேகமாக சென்ற ஷோ் ஆட்டோ TN-32K-2801யை நிறுத்தி சோதனை செய்ததில் பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் 500 எண்ணிக்கை கொண்ட பிாிமியா் டாக்டர் இருப்பது தொிய வந்தது. மதுபான  பாட்டில்களை பறிமுதல் செய்து ஷோ் ஆட்டோவையும் ஒட்டி வந்த ஒட்டுனா்யையும் விழுப்புரம் மது அமலாக்க பிாிவில் ஒப்படைத்து விசாரணை செய்ததில் வாகனத்தின் ஒட்டுனா் காா்த்திகேயன்(35) த/பெ.கண்ணன்.அக்கரகாரதெரு.மரகதபுரம்.விழுப்புரம் என்பதும் பறிமுதல் செய்த சரக்கின் ஊாிமையாளா்கள் தலைமறைவு எதிாிகள்.1) பூங்கோடி க/பெ.மாதவன். மலையரசன் குப்பம்.2) எலிசபெத் க/பெ ராஜ்.முகையுா். என்பது ம் தொிய வருகிறது. வழக்கு பதிவு செய்து தலைமறைவு எதிரிகளை தேடி வருகின்றனர். மதுபான பாட்டில்கள் திருவண்ணைநல்லுருகு செல்வதாக தொிய வருகிறது.வாகனம் மற்றும் மது பானங்களின் மொத்த மதிப்பு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ஆகும்.

கடலூர் மாவட்டத்தில் 2,450 லிட்டர் பாண்டிச்சேரி எாி சாராயம் இரு சக்கர வாகனத்துடன் பறி முதல்.

விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு ஆய்வாளர் திரு.கோவிந்தராஐ் அவா்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் போில் உதவி ஆய்வாளர் திரு.அழகிாி மற்றும் விருத்தாசலம் மது அமலாக்க பிாிவுஆய்வாளர்வுடன்
10-02-20 அதி காலை 2-00 மணி அளவில் விருத்தாசலம் மது அமலாக்க பிாிவுக்குஉட்பட்ட ஏந்தல் கிராமத்தில் துரைசாமி(55) த/பெ மாாிமுத்து என்பவாின் வீட்டின் பின்புறம் எந்த வித அரசு அனுமதி இன்றி கள்ளத்தனமாக 50 லிட்டர் பிடிக்க கூடிய 49 கேன்களில் பாண்டிச்சேரி எரி சாராயம் மற்றும் சில்லறை சாரய வியாபாரிகளுக்கு எடுத்த செல்ல பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனம் ஹிரோ ஹேண்டா ஸ்பிளாண்டா்‌ TN-AW-2615 யும்  கண்டறியப்பட்டது.எதிாியைகைது செய்து இருசக்கர வாகனத்தடன் மது அமலாக்க பிாிவுக்குஒப்படைத்து விசாரணை மேற்கொண்டடதில் இவருடன் தலைமறைவு எதிாி ஏந்தல் கிராமத்தை சோ்ந்த சாமிதுரை த/பெ மாாிமுத்து என்பவரும் சோ்ந்து பாண்டிச்சேரி சென்று எரி சாராயத்தை நான்கு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்குவிற்பனை செய்வதாக தொிய வருகிறது.எாி சாராயம் மற்றும் இரு சக்கர வாகனத்தின் மொத்த மதிப்பு ஐந்து லட்சத்து இருபதாயிரம் ஆகும்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.