தினவேல் செய்திகள் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
பழனி ஊராட்சி ஒன்றியம் பெரியம்மாபட்டி ஊராட்சி உட்கிடை கிராமமான புளியம்பட்டியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி உயர் திரு.சார் ஆட்சியர் அவர்களின் தலைமையிலும், உயர் திரு. வட்டாட்சியர் மற்றும் பெரியம்மா பட்டி ஊராட்சிமன்றதலைவர்* G.சதிஷ் குமார் B.A., அவர்களின் முன்னிலையிலும் சிறப்பு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சி பழனி ஒன்றிய துணை பெருந்தலைவர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Comments
Post a Comment