# DINAVEL NEWS # தன் கிராமத்தில் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக போராடும் ஒரு வாலிபர்.
தன் கிராமத்தில் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக போராடும் ஒரு வாலிபர்.
திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நந்தனார் புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் திரு. செல்வகணேஷ் அவர்கள்.
தன்னுடைய கிராமம் ஒரு படிப்பறிவு இல்லாத கிராமம் என்று மற்றவர்கள் கூறுவதை கேட்டு மனம் வேதனைப்பட்டு, தன் கிராமத்தை ஒரு படிப்பறிவு மிக்க கிராமமாக மாற்ற வேண்டுமென்று குறிக்கோளோடு கடந்த 20 ஆண்டுகளாக பாரதி பாடசாலை என்ற ஒரு பாடசாலையை இலவசமாக நடத்தி வருகிறார். அங்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மாலை நேரத்தில் வந்து கல்விகற்று செல்கிறார்கள்.
அவரது முயற்சிக்கு சில ஆசிரியர்களும் உதவி செய்கிறார்கள். இதுவரை அந்த கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட பட்டதாரிகளும், 20க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்களும் இருக்கிறார்கள். இன்னும் 10 வருடத்தில் அந்த கிராமத்தில் வீட்டுக்கு ஒரு பட்டதாரி இருப்பார்கள் என்று அவர் கூறினார். அவரைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டு அவரது இடத்திற்கு சென்று இன்று அவரை மனதார பாராட்டினோம். இவரைப்போல் கிராமத்திற்கு ஒரு செல்வகணேஷ் இருந்தால் நமது தமிழ்நாடு நூற்றுக்குநூறு பட்டதாரி மாநிலமாக மாறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. நன்றி வாழ்க வளமுடன்.
Comments
Post a Comment