# DINAVEL NEWS # பத்மாவதிபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.


பத்மாவதிபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில்  அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா


  திருப்பூர் மாவட்டம் பத்மாவதிபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 31.1.2020 அன்று அறிவுத் திறன் வகுப்பறை  துவங்கப்பட்டது.  இப்பள்ளியில் 684 மாணவ மாணவியர்கள் படித்துக் கொண்டு வருகிறார்கள் . இப்பள்ளியில்   சென்னை - திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை  சார்பில் அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு துவங்கப்பட்டது .  மேலும் ஆசியர்களுக்கு அதைப் பயன்படுத்தும் விதமும் பயிற்சி அளிக்கப்பட்டது  அறக்கட்டளையின் சார்பாக திரு நூருல்லா  அவர்களும் மற்றும் சமூக சேவகரும் தினவேல் நாளிதழ் சேலம் தெற்கு நிருபர் திரு பிரபு அவர்களும் கலந்து கொண்டனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டு  இவ்விழாவை சிறப்பாக நடத்தினர்.  மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த அறிவுத் திறன் வகுப்பறையை பயன்படுத்தி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று மாணவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்தி பேசினர். 


தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.