# DINAVEL NEWS # தைப்பூசத் திருவிழா, பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும்.
தைப்பூசத் திருவிழா, பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி தங்கமயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, தந்தசப்பரம் என பல்வேறு வகையான வாகனங்களில் 4 ரத வீதி உலா எழுந்தருள்கிறாா்.
தொடா்ந்து, பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு 7.30 மணிக்கு வெள்ளித்தோ் உலாவும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் திருத்தேரோட்டம் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறுகிறது. பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் நண்பகல் 12 மணிக்கு மேல் சுவாமி தோ் ஏற்றமும், மாலை 4.30 மணிக்கு மேல் தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது.
நிறைவு நாள் நிகழ்ச்சியாக பிப்ரவரி 11 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் தேரோட்டமும், திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது.
தின வேல் செய்திக்காக பழனியிலிருந்து ஆதிமூலம்
Comments
Post a Comment