# DINAVEL NEWS # குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், NRC, NPR தயாரிப்பதை கைவிட கேட்டும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை என். சுரேஷ்ராஜன் துவக்கிவைத்தார். ஏராளமானோர் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று கையெழுத்து இயக்க படிவத்தில் கையெழுத்திட்டனர்.



மணிகுமார்
நாகர்கோவில்


குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், NRC, NPR தயாரிப்பதை கைவிட கேட்டும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை   என். சுரேஷ்ராஜன் துவக்கிவைத்தார். ஏராளமானோர் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று கையெழுத்து இயக்க படிவத்தில் கையெழுத்திட்டனர்.

      கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி  சார்பாக தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை  வாபஸ் பெற கோரியும், NPR மற்றும் NRC, ஆகியவை தயாரிப்பதை கைவிடக்கோரியும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான என். சுரேஷ்ராஜன் தலைமையில்  மாபெரும் கையெழுத்து இயக்கம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் துவங்கப்பட்டது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  மனித நேயமக்கள் கட்சி, உட்பட தோழைமை கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டு படிவத்தில் கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பை வெளிபடுத்தினர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், நகர செயலாளர் மகேஷ், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கு பெற்றனர். முன்னதாக மத்திய அரசுக்கு எதிராக திடீர் ஆர்பாட்டம் நடந்தது. பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று கையெழுத்து இயக்க படிவத்தில் கையெழுத்திட்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.