Posts

Showing posts from August, 2020

DINAVEL MEDIA 7 # தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், 4வது வார்டு, 7வது வார்டு, கோட்டூர் அத்திவாக்கம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கேமரா துவக்க விழா ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தலைவர் கவிதா டேவிட்சன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் அருண்குமார் வரவேற்புரையாற்றினார்.

Image
தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சியில் கேமரா துவக்கம் தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், 4வது வார்டு, 7வது வார்டு, கோட்டூர் அத்திவாக்கம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கேமரா துவக்க விழா ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தலைவர் கவிதா டேவிட்சன் தலைமையில் நடைபெற்றது.  ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் அருண்குமார் வரவேற்புரையாற்றினார்.  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தி மூர்த்தி, கீதா விஜி, டி.தரணிதரன், வேளாங்கண்ணி சரவணன், நாகஜோதி வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  புழல் சரக உதவி ஆணையாளர் ராம.ஸ்ரீகாந்த், செங்குன்றம் காவல் நிலையம் ஆய்வாளர் ஜவஹர் பீட்டர், புழல் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால், துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேமராவை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் ஊக்குநர் என்.வேல்விழி, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெ.முருகன், ஜெ.டேவிட்சன், மூர்த்தி, விஜி, வாசுதேவன், எம்.சரவணன், அப்பு, பாலவாயில் சரவணன், எஸ்.நாகா, ஜி.வினோத், ரூபன், எஸ்.குருசாமி, பி.எழில்மணி, வி.சுரேஷ், எஸ்.வேலாயுதம், ஏ.கௌதமன், நாகராஜ், அஸ்வின

DINAVELMEDIA7 # தேனி மற்றும் போடிநாயக்கனூரில் மாலை முதல் சாரல் மழை .

Image
தேனி மாவட்டம் : தேனி மற்றும் போடிநாயக்கனூரில் மாலை முதல் சாரல் மழை பெய்தது,சற்று நேரத்திற்கு முன்பு (இரவு) 8.10 மணியளவில் இடியுடன் கூடிய மழை விழுந்து வருகிறது, இதே போன்று தேனி மற்றும் அதே சுற்றியுள்ள ஊர்களிலும் இடியுடன் கூடிய மழை விழுந்து வருகிறது,

DINAVELMEDIA7 # தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Image
* இனி இல்லம் தேடி விலையில்லா ரேஷன் பொருட்கள் அஇஅதிமுக அம்மாவின் அரசு* தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நாளில் 200 டோக்கன்கள் என செப்டம்பர் 1 முதல் 4 வரை டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வந்து விநியோகம் செய்யப்படும் என்று *மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார்* அவர்கள் அறிவிப்பு.!!

DINAVELMEDIA7 # நாமக்கல் மாவட்டம் முதலபட்டிலிருந்து சேலம் பைபாஸ் செல்லும் நகர சாலை விரிவுபடுத்தும் பணி மிக விரைவாக நடந்து வருகிறது.

Image
நாமக்கல் மாவட்டம் முதலபட்டிலிருந்து சேலம் பைபாஸ் செல்லும் நகர சாலை விரிவுபடுத்தும் பணி மிக விரைவாக நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்ட நிருபர் கே.எஸ்.வேல்முருகன்.

DINAVELMEDIA7 # கொடைக்கானலில் சாலையில் பெண் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம்: ஒருவர் மீது வழக்கு.

Image
கொடைக்கானலில் சாலையில் பெண் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம்: ஒருவர் மீது வழக்கு கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் உடலில் பெட்ரோல் ஊற்றி பெண் ஒருவர் நடுரோட்டில் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி ஆடலூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி மாலதி(32). இவர் சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து கே.சி.பட்டியை சேர்ந்த சதீஷ்(30) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளார்.   இந்நிலையில் சதீஷ் வேறொரு பெண்ணை சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு மாலதியுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதையடுத்து மாலதி, சதீஷ் வீட்டின்முன்பு நின்றுகொண்டு நியாயம் கேட்டுள்ளார்.   அப்போது சதீஷ் வீட்டினர் இவரை அவமதிக்கவே தான் கொண்டுசென்ற பெட்ரோல் கேனை உடலில் ஊற்றி திடீரென தீவைத்துக்கொண்டார். தீ மளமளவென பற்றி எரியவே சாலையின் நடுவே தீக்காயங்களுடன் அலறியபடி மாலதி இறந்தார்.  அப்பகுதியின் நின்றுகொண்டிருந்த யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. தகவலறிந்த தாண்டிக்குடி போலீஸார

DINAVELMEDIA7 # மின்இழுவைரயில் மற்றும் ரோப்கார் ஆகியவை இயக்கப்படாது எனவும்.

Image
பழனி படிப்பாதைகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதி.. மின்இழுவைரயில் மற்றும் ரோப்கார் ஆகியவை இயக்கப்படாது எனவும் காலபூசை மற்றும் அபிஷேக நேரங்களில் உபயதாரர்கள்‌ உட்பட பக்தர்கள் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது மறு அறிவிப்பு வரும்வரை அன்னதானம், தங்கரத புறப்பாடு உள்ளிட்ட சேவைகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு

DINAVELMEDIA7 # தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரி அரியலூரில் ஆர்ப்பாட்டம் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

Image
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரி அரியலூரில் ஆர்ப்பாட்டம் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், CPIM மாவட்ட செயற்குழு துரைசாமி, CITU மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், DYFI மாவட்ட செயலாளர் அருண்பாண்டியன், திருமானூர் ஒன்றிய செயலாளர் சாமிதுரை, மாவட்ட துணை தலைவர் துரை.அருணன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிருபர் சவுக்கத்

DINAVELMEDIA7 # பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய இணையவழி முன்பதிவு அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

Image
பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய இணையவழி முன்பதிவு அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நாளைமுதல் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து தரிசன அனுமதி சீட்டு பெற்றுமட்டுமே வரவேண்டும் எனவும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு.படிப்பாதைகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதி.. மின்இழுவைரயில் மற்றும் ரோப்கார் ஆகியவை இயக்கப்படாது எனவும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு.காலபூசை மற்றும் அபிஷேக நேரங்களில் உபயதாரர்கள்‌ உட்பட பக்தர்கள் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது எனவும் அறிவிப்பு.மறு அறிவிப்பு வரும்வரை அன்னதானம், தங்கரத புறப்பாடு உள்ளிட்ட சேவைகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு

DINAVELMEDIA7 # பழனி முருகன் கோயிலில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம்.

Image
பழனி முருகன் கோயிலில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம். அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு. குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம். கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். கோயில் வளாகத்தில் கீழே விழுந்து வணங்க வேண்டாம். அர்ச்சகரிடம் பிரசாதம் கேட்டு தொல்லை செய்ய வேண்டாம். காய்ச்சல், சளி அறிகுறி இருந்தால் கோயிலுக்கு வர வேண்டாம். அரசின் வழிகாட்டுதல் நெறிமுறை படி மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். என பழனி கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் போடி கோயில்கள் பிரதோஷ சிறப்பு பூஜை.

Image
தேனி மாவட்டம் போடி கோயில்கள் பிரதோஷ சிறப்பு பூஜை போடி:போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனை தலைவர் திவாகரன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜசேகர், துணைத்தலைவர் குமரேசன், துணை செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். அலங்காரங்களை சரவண சாஸ்திரிகள் செய்திருந்தார். *போடி பிச்சாங்கரை மலை கயிலாய கீழச்சொக்க நாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில்,போடி பரமசிவன் கோயில், சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. *வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, தீபாரதனைகள் நடந்தது.

DINAVELMEDIA7 # மூணாறில் அரசு தொழில் பயிற்சி மேல் நிலை பள்ளியின் சுற்றுச் சுவரை காட்டு யானை சேதப்படுத்தியது.

Image
மூணாறில் அரசு தொழில் பயிற்சி மேல் நிலை பள்ளியின் சுற்றுச் சுவரை காட்டு யானை சேதப்படுத்தியது. *கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட பிறகு மூணாறில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துஇரவில் நகருக்குள் வலம் வருவது வழக்கமாகி விட்டது. சில நாட்களாக நகரைச் சுற்றிநடமாடி வரும் ஆண் காட்டு யானை நேற்று முன்தினம் இரவு பழைய மூணாறில் சுற்றித்திரிந்தது. அங்கு அதிகாலை 3:00 மணிக்கு சுற்றித்திரிந்தபோது, அந்த வழியில் வந்த லாரிக்கு வழி விட முயன்ற யானை அரசு தொழில் பயிற்சி மேல் நிலை பள்ளியின் சுற்றுச் சுவரை சேதப் படுத்தியது. காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

DINAVELMEDIA7 # வீட்டில் தனிமையிலிருந்த போது துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Image
தேவாரம்:தேவாரம் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பிரபாகரன் 25. இரு ஆண்டுகளுக்கு முன் கேரளா பாரத்தோடு விஜயராணியை திருமணம் செய்தார். இவர் மதுவிற்கு அடிமையானதால் அவரது மனைவி 3 மாதங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு பிரிந்து சென்றார். விரக்தியிலிருந்த பிரபாகரன் வீட்டில் தனிமையிலிருந்த போது துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

DINAVELMEDIA7 # கம்பத்தில் தாய், தந்தையை அரிவளால் வெட்டிய மகன் பெல்டால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.

Image
கம்பம்:கம்பத்தில் தாய், தந்தையை அரிவளால் வெட்டிய மகன் பெல்டால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார். *தேனி மாவட்டம் கம்பம் நாகமணியம்மாள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள காலனியை சேர்ந்த ஓய்வு எஸ்.ஐ., முருகேசன் 59, இவரது மனைவி இந்துராணி 55. மகன் மனோஜ்குமார் 26. பி.இ., பட்டதாரி. விரும்பிய பெண்ணை திருமணம் செய்து வைக்கவில்லை என பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.   நேற்று முன்தினம் காலை வெளியே சென்ற மகனை தந்தை தடுத்தார். *இதில் ஏற்பட்ட தகராறில் தந்தை,தாய் இருவரையும் மனோஜ்குமார் அரிவாளால் வெட்டினார்.பின் தனது அறைக்குள் சென்று தாழ் போட்டுள்ளார். காயமடைந்த பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். கம்பம் தெற்கு போலீசார் முருகேசன் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது, மனோஜ்குமார் 'பெல்டால்' தனது கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார். இன்ஸ்பெக்டர் கீதா விசாரிக்கிறார்.

DINAVELMEDIA7 # கம்பம்:கேரள கோயில்களில் உள்ள ஆயிரம் கிலோ தங்கத்தை டெபாசிட் ,அடமானம் வைப்பது.

Image
கம்பம்:கேரள கோயில்களில் உள்ள ஆயிரம் கிலோ தங்கத்தை டெபாசிட் ,அடமானம் வைப்பது என தேவசம்போர்டு முடிவுசெய்து ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை செய்து வருவதாக அறிவித்துள்ளது. *கேரளாவில் 1248 கோயில்களை தேவசம் போர்டு நிர்வகிக்கிறது. கொரோனாவால் 5 மாதங்களாக கோயில்கள் மூடி வருவாய் பாதிக்கப்பட்டது. சபரிமலை கோயிலில் 100 கோடி வருவாய் சீசனில் கிடைக்கும். கோயில் நிர்வாகம், சம்பளத்திற்கென சபரிமலை கோயிலிற்கு மட்டும் மாதம் ரூ. 50 கோடி தேவைப்படுகிறது. 1200 கோயில்களில் பக்தர்கள் வழங்கிய சுமார் ஆயிரம் கிலோ தங்கத்தை, ரிசர்வ் வங்கியில் அடமானம் அல்லது டெபாசிட் செய்வது என்று தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதில் சுவாமிகளுக்கு சாத்தப்படும் நகைகள் இடம் பெறாது. கோயில்களுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட தங்கநாணயங்கள், தங்க கட்டிகள் மட்டுமே அடங்கும். 2017ல் திருப்பதி கோயில் நிர்வாகம் ஸ்டேட் வங்கியில் 2780 கிலோ தங்கத்தையும், சாய்பாபா கோயில் நிர்வாகம் 200 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்துள்ளது. எனவே, இது புதிய விஷயம் அல்ல. இதில் கிடைக்கும் நிதியை பயன்படுத்தி, 1200 கோயில்களின் நிர்வாகத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம், என தேவ

DINAVELMEDIA7 # தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழையின்றி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

Image
தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழையின்றி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. *நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.75 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 334 கன அடியாகும். தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4428 மில்லியன் கன அடியாகும். தென்மேற்கு பருவ மழையால் அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக ஆக. 13 ல் 137 அடியை எட்டியது. கடந்த 17 நாட்களில் 8 அடிக்கும் மேல் நீர்மட்டம் குறைந்துள்ளது. *நீர்பிடிப்பில் தொடர்ந்து மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்திறப்பை குறைக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வைகை அணை நீர்மட்டம் 58.92 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்வரத்து 1356 கன அடியாகவும், நீர்திறப்பு 72 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 3406 மில்லியன் கன அடியாகும்.

DINAVELMEDIA7 # கொரானா அச்சத்தில் இருந்து மீண்டு 6 மாதங்களுக்கு பின் கிராம பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்பிய திருமண வைபகங்கள்.

Image
கொரானா அச்சத்தில் இருந்து மீண்டு 6 மாதங்களுக்கு பின் கிராம பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்பிய திருமண வைபகங்கள் கடந்த 6 மாதங்களாக கொரானா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்திய நிலையல் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக கோயில் திருவிழாக்கள் - திருமணம் - அரசியல் மற்றும் தனி அமைப்பு சார்ந்த பொதுக் கூட்டம் இவகளுக்கு தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை மத்திய மாநில அரசுகள் பொது நலன் கருதி தடை விதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் 6 மாதங்கருக்கு பிறகு மெல்ல மெல்ல கிராம புறங்களில் திருமண வைபங்கங்கள் சில தளர்வோடு நடைபெற்று வருகிறது. இதனால் முற்றிலும் வாழ்வாதாரம் முடங்கி போன புரோகிதர் - ஸ்டுடியோ தொழிலாளர்கள் - மேள வாத்தியம் தொழிலாளர்கள் - பந்தல் அலங்கார தொழிலார்கள் - சமையல் தொழிலாளர்கள் என இதனையே நம்பியிருந்தவர்களின் வாழ்வில் இயல்பு நிலை இத்திருமண வைபோகத்தால் திரும்பி மீண்டும் வாழ்வாதாரம் கிடைக்கும் என்ற புதிய நம்மிக்கை ஏற்படுத்தி உள்ளதாக மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர். கொரானா எனும் அரக்கனால் ஸ்தம்பித்து போ

DINAVELMEDIA7 # தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்.

Image
தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்: திருப்பூர் தமிழகத்தில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடைபெறும் சாதி ரீதியிலான தாக்குதல்களை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல்வேறு ஊராட்சி மன்றங்களில் தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது சாதிய ரீதியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும் வரக் கூடிய சூழ்நிலையில் ஒரு சில புகார்கள் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உடனடியாக தமிழக அரசு இப்பிரச்சனையை தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக மக்கள் பணியாற்ற பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன் தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணியின் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் செய்தியாளர்கள். மா.துரை. T யோகராஜ்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி DINAVELMEDIA7 # அருகே திருநாளூரில் பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

Image
சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை பேராசிரியர் ஆய்வு  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநாளூரில் பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர்  திருநாலூர் வடக்கில் உள்ள பெரிய குளத்தின் அருகே உள்ள திடல் போன்ற பகுதியில் கடந்த 2005ஆம் ஆண்டு இரண்டு அடி ஆழத்தில் புதையுண்டு இருந்த ஆவுடை துர்க்கை தட்சிணாமூர்த்தி அம்மன் என ஆறு சிலைகளை அப்பகுதி மக்கள் கண்டெடுத்து வழிபட்டு வருகின்றனர் மேலும் பழைய கட்டுமானத்திற்கான செங்கல்கள் ஆங்காங்கே திட்டுத்திட்டாக மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த ஜீவானந்தம் கூறியபோது இங்கு கிடைத்த பழமையான கற்சிலைகளை மீட்டு இங்கேயே வைத்து வழிபட்டு வருகிறோம் இதை கதிரேசன் கோவில் என்று அழைத்து வருகிறோம் இப்பகுதியில் கிடைத்த பழமையான நாணயத்தை பத்திரப்படுத்தி வைத்துள்ளோம் மேலும் வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓடுகள் பழைய செங்கல் கற்கள் உள்ளன இப்பகுதியே அகழ்வு  செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்  இந்நிலையில் அந்த இடத்தை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்

DINAVELMEDIA7 # ஓணம் பண்டிகை -திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.

Image
ஓணம் பண்டிகை -திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை: திருப்பூர் மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையை அறிவித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திரு விஜய கார்த்திகேயன் அவர்கள்.திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை 26 9 2020 சனிக்கிழமை அன்று பணி நாளாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் வேலை நாட்களாக செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு விஜய கார்த்திகேயன் அறிவித்துள்ளார். திருப்பூர் செய்தியாளர்கள். மா.துரை . T. யோகராஜ்

DINAVELMEDIA7 # விளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு:திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள.

Image
விளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு:திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2018 , 2019 ஆம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம், வென்ற விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணம் வாங்குவதற்கான உதவித்தொகை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வழங்கப்படுகிறது. தங்கம் வென்றவர் 6000 ரூபாய் வெள்ளி ,வெண்கலம், வென்ற அவருக்கு முறையே 4000 மற்றும் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. தகுதியான தகுதியான விளையாட்டு வீரர்கள் செப்டம்பர் 10க்குள் காலேஜ் ரோட்டில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் அசல் சான்றிதழ்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மேலும் விபரங்களுக்கு 740 1703 515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அவர் கூறியுள்ளார். திருப்பூர்  செய்தியாளர்கள்.   மா .துரை. T யோகராஜ்

DINAVELMEDIA7 # திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவில் நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சித்தமருத்துவர்.

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவில் நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சித்தமருத்துவர் மகேந்திரன் வாலாம்பிகை செல்வராஜ் பாக்கியா சைக்கிள் பாஸ்கரன் சமூக ஆர்வலர்கள் கருப்பையா நுருல் அமீர் செல்வராஜ் லயன் சிவக்குமார் Cpm குருசாமி மற்றும் பலர் தனிநபர் இடைவெளி மற்றும் முககவசம் அணிந்து பின்பற்றினர்.

DINAVELMEDIA7 # நாமக்கல் அன்பு நகர் பொதுமக்கள் மற்றும் மெல்வின் மெட்ரோ அரிமா சங்கம் சார்பாக 27 ராசிக்குறிய மரக்கன்று நடும் விழா ...

Image
இன்று நமது நாமக்கல் அன்பு நகர் பொதுமக்கள் மற்றும் மெல்வின் மெட்ரோ அரிமா சங்கம் சார்பாக 27 ராசிக்குறிய மரக்கன்று நடும் விழா நாமக்கல்லில் நடைபெற்றது.இவ்விழாவினை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.KPP.பாஸ்கர் MLA அவர்கள் துவக்கி வைத்தார்.  தின வேல் செய்திகளுக்காக நாமக்கல் மாவட்ட நிருபர் கே.எஸ்.வேல்முருகன்

DINAVELMEDIA7 # நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.P.P.பாஸ்கர் MLA, அவர்களின் பொற்கரங்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாமக்கல்...

Image
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.P.P.பாஸ்கர் MLA, அவர்களின் பொற்கரங்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாமக்கல் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா (எ) செல்வகுமார் அவர்கள், நாமக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர் அவர்கள், மோகனூர் ஒன்றிய செயலாளர்  கரும்மன்னன் அவர்கள், புதுச்சத்திரம் ஒன்றிய கழக செயலாளர் கோபிநாத் அவர்கள் மற்றும் கழக ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நகர பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.  தின வேல் செய்திகளுக்காக நாமக்கல் மாவட்ட நிருபர் கே.எஸ்.வேல்முருகன்

DINAVELMEDIA7# சேலம் இணை ஆணையராக பணி புரியும் நடராஜன் பழனி முருகன் கோவில் இணை ஆணையராக நியமனம்...

Image
சேலம் இணை ஆணையராக பணி புரியும் நடராஜன் பழனி முருகன் கோவில் இணை ஆணையராக நியமனம் தின வேல் செய்திகளுக்காக பழனி நிருபர் ஆதிமூலம்

DINAVELMEDIA7 # புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் செயல்படாத சிடி ஸ்கேன்.

Image
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் செயல்படாத சிடி ஸ்கேன்  அறந்தாங்கியில் இயங்கிவரும் அறிஞர் அண்ணாஅரசு மருத்துவமனையில் சில நாட்களாக சிடி ஸ்கேன் செயல்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் சில நாட்களுக்கு முன் இடி தாக்கியதில் சிடி ஸ்கேன் பழுதானதால் கூறப்படுகிறது பல கோடி ரூபாய் மதிப்பிலான சிடி ஸ்கேன் இயந்திரத்தை மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் கொடுத்துள்ளார் ஆனால்  பழுதான சிடி ஸ்கேன் சீரமைக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாதது ஏன் ஒவ்வொரு மாதம்தோறும் வரும் நிதி எங்கே போகிறது என தெரியவில்லை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக உள்ளது அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையை நம்பி அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மணமேல்குடி ஆவுடையார் கோவில் கட்டுமாவடி மீமிசல் கோட்டைப்பட்டினம் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனை நம்பிதான் உள்ளனர் எனவே இது சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறையும் அரசும் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை முன்வ

DINAVELMEDIA7 # செங்கம் அருகே சாலை சரியாக அமைக்காததால் குத்தகைதாரர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.

Image
செங்கம் அருகே சாலை சரியாக அமைக்காததால் குத்தகைதாரர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரட்டவாடி ஊராட்சிக்கு உட்பட்ட அரட்டவாடிto மாணிக்கராஜபுரம் வரையிலான தார் சாலை அமைப்பதற்காக, சங்கர் மாதவன் என்பவருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. பொது நிதியில் இருந்து ரூபாய் 30 லட்சம் அரசாங்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்க அரசாங்கத்தால் 2 அங்குல உயரத்தில் அமைதல் வேண்டும் ஆனால் அரை அங்குலம் கூட போடாததால் ரோடுகள் ஆங்காங்கே பெயர்ந்தும் சில இடத்தில் போடாமலும் விட்டு வைத்திருக்கிறார் இதனை கண்ட பொதுமக்கள் சரியாக போடாததை கண்டித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு தின வேல் செய்திகளுக்காக  திருவண்ணாமலை  மாவட்ட நிருபர் எஸ். ராமராஜ்

DINAVELMEDIA7 # தேனிமாவட்டம்: வடுகப்பட்டியில் விவாசயில்கள் கோரிக்கை .

Image
தேனிமாவட்டம்: வடுகப்பட்டியில் விவாசயில்கள் கோரிக்கை : தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் விவாசயிகள் நெல், தென்னை,வாழை, ஆகியவற்றிற்கு காப்பீடு வழங்குவது போல் வெற்றிலைக்கு காப்பீடு வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவாசயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். தின வேல் செய்திகளுக்காக போடி நிருபர் சிவக்குமார்

DINAVELMEDIA7 # அரியலூர் மாவட்டத்தில் முதன்முதலில் கொரனாவை தடுக்கும்விதமாக கோவை கிருஷ்ணா பேக்கிரி & ஸ்வீட்ஸ் வருகின்ற அனைத்து வாடிக்கையாளர்கள் ...

Image
அரியலூர் மாவட்டத்தில் முதன்முதலில் கொரனாவை தடுக்கும்விதமாக கோவை கிருஷ்ணா பேக்கிரி & ஸ்வீட்ஸ் வருகின்ற அனைத்து வாடிக்கையாளர்கள் கைகளைசுத்தம்செய்து மிகுந்தபாதுகாப்புடன் வாங்கி செல்ல ஆட்டோ சானிடைசர் மிஷின் பொருத்தப்பட்டுள்ளது இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைபெற்றுள்ளது அதேவேளையில் மக்கள் அனைவறும் கண்டிபாக முககவசம் அனிந்து பாதுகாப்புடன் வாங்கிசெல்லுமாறு கேட்டுகொன்டனர்.          தின வேல் செய்திகளுக்காக அரியலூர் நிருபர் சவுக்கத்

DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள வ.உ.சி.நகர்.ராஜா விநாயகர் கோயில் அருகில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர்,

Image
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள வ.உ.சி.நகர்.ராஜா விநாயகர் கோயில் அருகில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர், மேலும் இப்பகுதி குப்பைகளால் சுகாதாரமற்ற பகுதியாக காட்சியளிக்கிறது. தின வேல் செய்திகளுக்காக போடி நிருபர் சிவக்குமார்

DINAVELMEDIA7 # திருப்பூரில் முழு ஊரடங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரம் : ஆகஸ்ட் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ...

Image
திருப்பூரில் முழு ஊரடங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரம் : ஆகஸ்ட் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.திருப்பூரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2557 ஆக உயர்ந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்டம் முழுவதும் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களை விசாரணைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர். புதிய சாலைகள் அனைத்தும் ஏரிக்காடு மூலம் மூடப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.  தின வேல் செய்திகளுக்காக திருப்பூர் செய்தியாளர்கள்.:  M. துரை T யோகராஜ்

DINAVELMEDIA7 # கனிம வளங்கள் மர்ம நபர்களால்தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகிறது...

Image
கனிம வளங்கள் மர்ம நபர்களால்தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகிறது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தாழையூத்து பஞ்சாயத்துக்குட்பட்ட இடங்களிலுள்ள கனிம வளங்களை தங்கள் சுயலாபத்திற்காக வெட்டி எடுத்து கள்ளத்தனமாக சந்தையில் விற்பனை செய்வதாக பொது மக்களிடையே பரவலாக பேசப்பட்டது அதனடிப்படையில் போலீசார் விசாரணையில். மேட்டு தண்டா அதே பகுதியை சேர்ந்த. சில நபர்கள் இந்த செயலை செய்வதாக தெரியவந்துள்ளது. இதனை தடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . தின வேல் செய்திகளுக்காக திருவண்ணாமலை  மாவட்ட செய்தியாளர்  எஸ். ராமராஜ்

DINAVELMEDIA7 # விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சீலியம்பட்டி ஊராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில்...

Image
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சீலியம்பட்டி ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சீலியம்பட்டி ஊராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மரக்கன்று நடும் விழா மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளவற்றை அப்பகுதி மக்களுக்கு கொடுத்தனர் இவ்விழாவில்  மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வீ.ந.சுந்தர் அவர்களும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் மூ.க செல்வம் அவர்களும் ஆத்தூர் ஒன்றிய செயலாளர்  பா. ராஜீவ்காந்தி ஆத்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் சு.மனோஜ் பிரபாகரன் மற்றும் சிறுத்தை பாலாஜி ஆத்தூர் நகர ஒன்றிய கிளை முகாம் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்:க.புதுப்பட்டிநந்தகோபால் 58. அங்குள்ள பள்ளத்தில் இறந்துகிடந்தார்.

Image
  தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்:க.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலக தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் 58. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் ஆடுமேய்க்க சென்றார். மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளன. அவர் அங்குள்ள பள்ளத்தில் இறந்துகிடந்தார். தவறிவிழுந்து இறந்ததாக உத்தமபாளையம் போலீசார் தெரிவித்தனர். தின வேல் செய்திகளுக்காக போடி நிருபர் சிவக்குமார்

DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில்.காலை வீட்டிற்குள் துாக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Image
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் கோகிலாபுரம் கிழக்கு தெரு வனராஜ் மனைவி தனலட்சுமி 48 வயது. நேற்று காலை வீட்டிற்குள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என உத்தமபாளையம் போலீசார் தெரிவித்தனர். தின வேல் செய்திகளுக்காக போடி நிருபர் சிவக்குமார்

DINAVELMEDIA7 # மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.

Image
மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது. திண்டுக்கல் புறநகர் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலை சார்பு ஆய்வாளர் திரு.அழகு பாண்டி அவர்களின் தலைமையிலான காவலர்குழு வாகன சோதனை மேற்கொண்டனர்.         அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை விசாரணை நடத்தினர். அதில் அவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது.        இதனையடுத்து அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது  . தின வேல் செய்திகளுக்காக பழனி நிருபர் ஆதிமூலம்.

DINAVELMEDIA7 # தேனி மாவட்டம்( ஆண்டிபட்டி):மழையால் ஓடையில் அதிக நீர்வரத்து...

Image
தேனி மாவட்டம் ( ஆண்டிபட்டி):மழையால் ஓடையில் அதிக நீர்வரத்து ஆண்டிபட்டி:ஆண்டிபட்டியில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு துவங்கிய மழை அரை மணி நேரம் நீடித்தது. ஆண்டிபட்டி தென்பகுதி, சக்கம்பட்டி பகுதியில் இருந்து ஓடை கன்னியமங்கலம் வழியாக சென்று வைகை ஆற்றில் சேர்கிறது. இப்பகுதியில் நீரை தேக்கி வைப்பதற்கான குளம், கண்மாய் இல்லை. இதனால் ஓடை தரைப்பாலத்தில் சென்ற அதிகப்படியான நீர் அதனை கடந்து நடந்து, டூவீலர்களில் சென்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இப்பகுதியில் பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தின வேல் செய்திகளுக்காக போடி நிருபர். சிவக்குமார்

DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் குமுளி பகுதி (தேக்கடி ):ஓணம் பண்டிகைக்காக தேக்கடியில் படகு சவாரி இயக்க வேண்டும்,

Image
தேனி மாவட்டம் குமுளி பகுதி  (தேக்கடி ):ஓணம் பண்டிகைக்காக தேக்கடியில் படகு சவாரி இயக்க வேண்டும், என கேரள மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கேரளாவில் அனைத்து மதத்தினரும் இணைந்து கொண்டாடும் முக்கியமான பண்டிகை ஓணம். நாளை ஓணம் கொண்டாடப்படுகிறது. விழாவின்போது சுற்றுலாதலங்களுக்கு குடும்பத்துடன் செல்வது கேரள மக்கள் வழக்கம்.கொரோனா காரணமாக 6 மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது ஓணம் பண்டிகை முன்னிட்டு படகு சாவரி குறைந்த பயணிகளை படகுகளை இயக்க படகு சவாரி உரிமையாளர்கள் ஒன்று கூடி முடிவு எடுத்துள்ளனர். தின வேல் செய்திகளுக்காக போடி நிருபர் சிவக்குமார்

DINAVELMEDIA7 # திருப்பூர் மாவட்டம், உடுமலையில் ஐந்தாவது ஞாயிற்றுக் கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால்.

Image
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் ஐந்தாவது ஞாயிற்றுக் கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் .கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. .ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பால் கடை மற்றும் மருந்து கடைகள் தவிர பிற கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ உட்பட எந்த வாகனங்களும் இயங்கவில்லை. முழு ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்.கிக் கிடப்பதால் உடுமலை முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் முழுவது வெறிச்சோடி காணப்படுகிறது.  தின வேல் செய்திகளுக்காக திருப்பூர் செய்தியாளர்கள்  M. துரை. T யோகராஜ்

DINAVELMEDIA7 # தேனி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்த 382 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Image
தேனி: தேனி மாவட்டத்தில் நேற்று கொரோனா சிகிச்சையில் இருந்த 382 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேனி பாரஸ்ட் ரோடு 40 வயது ஆண் உட்பட 27 பேர்,  ஆண்டிபட்டி சீனிவாசக நகரில் வசிக்கும் அரசு மருத்துவமனை 31 வயது பெண் டாக்டர், காமராஜர் நகரில் வசிக்கும் 44 வயது கதிர்நரசிங்கபுரம் டாஸ்மாக் கடை ஊழியர் உட்பட 17 பேர்.  போடியில் 27,  சின்னமனுாரில் 19,  கம்பத்தில் 4,  மயிலாடும்பாறையில் ஒருவர், பெரியகுளத்தில் 24, உத்தமபாளையத்தில் 6 பேர் உட்பட ஆண்கள் 62, பெண்கள் 54, 7 சிறுவர்கள், 2 சிறுமிகள் என மொத்தம் 125 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தேனிமாவட்டத்தை சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் கொரோனா பரிசோதனைக்காக 1586 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தின வேல் செய்திகளுக்காக. போடி நிருபர் சிவக்குமார்

DINAVELMEDIA7 # வாகன டிரைவரிடம் கட்டாய பண வசூலில் ஈடுபட்டார் போலீசார்...

Image
தேனி மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி அருகே காட்ரோடு போலீஸ் சோதனை சாவடி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க வெளி மாவட்டங்களில் இருந்து 'இ--பாஸ்' பெற்று வரும் வாகனங்களை சோதனை செய்து மாவட்டத்திற்குள் அனுப்பி வருகின்றனர். நேற்று அங்கு பணியில் இருந்த ஜெயமங்கலம் ஸ்டேஷன் போலீஸ்காரர் இளையராஜா, வாகன டிரைவரிடம் கட்டாய பண வசூலில் ஈடுபட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இளையராஜாவை தேனி ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., சாய்சரண்தேஜஸ்வி உத்தரவிட்டார். தின வேல் செய்திகளுக்காக போடி நிருபர் சிவக்குமார்

DINAVELMEDIA7 # போலிச்சான்று சமர்ப்பித்த ஆறு சுகாதார ஆய்வாளர்கள் பணிநீக்கம்.

Image
போலிச்சான்று சமர்ப்பித்த ஆறு சுகாதார ஆய்வாளர்கள் பணிநீக்கம்:திருப்பூரில் கொரோனா பரவலால் அவசர காலத் தேவையை கருத்தில் கொண்டு காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் கிரேடு-2 பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டன. ஒப்பந்த அடிப்படையில்மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில்இவர்களுக்கான பணி காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது . திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம்,பொன்னாபுரம், மூலனூர் ,கணியூர் ஆகிய வட்டாரங்களில் கமலக்கண்ணன் சத்தியமூர்த்தி ,அன்பு ,முருகன், சுதாகர் .தினேஷ்குமார், சாமி ராஜா ஆகியோர் கடந்த நான்கு மாதங்களாக பணிபுரிந்து வந்தனர்.சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள இவர்கள் 6 பேரும் சமர்ப்பித்துள்ள பயிற்சி சான்றிதழ் உண்மை தன்மை இல்லை என ஆய்வில் தெரியவந்தது. இதனால் மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார்ஆறு பேரையும் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.  திருப்பூர் செய்தியாளர்கள்.  M.துரை,T. யோகராஜ்

DINAVELMEDIA7 # மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சு உதிர்ந்து எப்போதுவேண்டுமானலும் விழும் நிலையில் உள்ளது.

Image
ஆலங்குடி சந்தைபேட்டையில் உள்ள கட்டிடத்துக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை மாற்ற கோரிக்கை ஆலங்குடி: ஆலங்குடி நாவலர் தெருவில் தனியார் கட்டிடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டிடம் பழுது ஆனதால் காலிசெய்யும்படி அதன் உரிமையாளர் வலியுறுத்திவருகிறார். இந்தநிலையில் ஆலங்குடி சந்தைப்பேட்டையில் இயங்கி வந்த வேளாண்மை விதைப்பண்ணை வம்பன் நாலு ரோட்டில் உள்ள அரசு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது, சந்தைப்பேட்டையில் உள்ள கட்டிடம் காலியாக உள்ளது. எனவே சந்தைப்பேட்டையில் உள்ள கட்டிடத்துக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பொன்னமராவதி பேரூராட்சி வலையப்பட்டி கைலாசபதி வீதியில் குடியிருப்பு பகுதிகளில் மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கிறது. குடியிருப்புகளில் கூரையை தொட்டுவிடும் வகையிலும், மரங்களுக்கு இடையேயும் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை உயர்த்தி கட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்